இனியும் தேவையா நீட்? ஒன்றிய அரசு ‘நீட்’டை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
இனியும் தேவையா நீட்? ஒன்றிய அரசு ‘நீட்’டை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள், மாணவர்கள் ஒலிமுழக்கம் (சென்னை வள்ளுவர்கோட்டம், 18.6.2024)
இனியும் தேவையா நீட்? ஒன்றிய அரசு ‘நீட்’டை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் ஒலிமுழக்கம்!
ஒன்றிய அரசு ‘நீட்’டை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் கண்டன எழுச்சி உரை
சென்னை, ஜூன் 19- திராவிட மாணவர் கழகம் சார்பில் ஒன்றிய அரசு ‘நீட்’டை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (18.6.2024) மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
மருத்துவக் கல்வியில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். நீட் உள்ளிட்ட எவ்வித நுழைவுத் தேர்வும் கூடாது என்று ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.
மேலும் நீட் தேர்வின் மோசடிகள், குளறுபடிகளை புள்ளிவிவரத் தகவல்களுடன் அம்பலப்படுத்தினார்கள். கிராமப்புற, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவச் செல்வங்கள் மருத்துவக்கல்வியை தடுக்கின்ற, தடை செய்வதே நீட் தேர்வின் நோக்கம் என்பதை எடுத்துக்காட்டி, மாணவர்களின் கல்வி உரிமை பறிப்பு, மாநில உரிமை பறிப்பு என நீட் தேர்வின் பெயரால் ஒன்றிய அரசின் அதிகார ஆணவத்தை எடுத்துக்காட்டி, அந்த உரிமைகளை மீட்பதில் தொடர்ச்சியாக போராடி வருகின்ற திராவிடர் கழகத்துடன் இணைந்து, தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் வெற்றி பெறும்வரை போராடுவோம், வெற்றி பெறுவோம் என்று தலைவர்கள் உறுதிபட கூறினார்கள்.
ஒன்றியத்தில் பா.ஜ.க. அரசு அமைந்த பிறகே நீட் தேர்வு திணிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு கூடாது, நீட்டிலிருந்து விலக்கு அளிக்கின்ற தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதலை அளிக்க வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையில், நீட் தேர்வு எதிர்ப்புப்போராட்டத்தின் அடுத்த கட்டமாக நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகனப் பேரணிகள் 5 குழுக்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 11.7.2024 அன்று தொடங்கி கல்வி வள்ளல் பச்சைத்தமிழர் காமராசர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளான 15.7.2024 அன்று சேலத்தில் நிறைவு பெறும் என்றும், அனைத்துக்கட்சியினரும் நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகனப் பேரணிக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும் என்றும், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்களிடம் நீட் கூடாது என்பதற்கான விழிப்புணர்வை இந்த பேரணிமூலம் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
திராவிட மாணவர் கழக மாநில பொறுப்பாளர்கள் செ.பெ.தொண்டறம், வி.தங்கமணி, நா.ஜீவா, த.சிவபாரதி, சு.இனியன், ச.மணிமொழி, மு.இராகுல், க.அறிவுச்சுடர், வெ.இளஞ்செழியன், பா.கவிபாரதி, சு.ச.திராவிடச் செல்வன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
திராவிட மாணவர் கழக மருத்துவக் கல்லூரி மாநில அமைப்பாளர் ப.நீலன் வரவேற்றார்.
திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன் தலைமையேற்று உரையாற்றினார்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார்.
கழகப் பொருளாளர் வீ.குமரேசன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ கஜேந்திரபாபு, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச். ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநிலப் பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முகம்மது அபுபக்கர், மதிமுக கொள்கை விளக்க அணி மாநிலச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியக் குழுஉறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன், திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன சிறப்புரை ஆற்றினார்.
புத்தக வெளியீடு
“‘நீட்’ சமூகநீதியைச் சாகடிக்கும் கண்ணாடி” என்னும் ரூ. 5 மதிப்பிலான புத்தகம் – 100 புத்தகங்கள் கொண்ட தொகுப்பை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து கழகத் தோழர்கள் உள்பட ஏராளமான வர்கள் பெற்றுக்கொண்டனர்.
கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, நீலன், ஊமை.ஜெயராமன், அரூர் இராஜேந்திரன், மேலூர் எரிமலை, சேலம் பூபதி, தாம்பரம் ப.முத்தையன், எழிலன், ஈரோடு த.சண்முகம் உள்பட பலரும் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் இராபர்ட் புரூஸ், மேனாள் மாவட்ட நீதிபதி இரா.பரஞ்ஜோதி, தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் செயலாளர் மா.செல்வராஜ், கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, முனைவர் மஞ்சுளா செல்வம், விழிகள் வேணுகோபால், துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ். மாநில ப.க. துணைத் தலைவர் பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், தலைமைக்கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால் உள்பட கழகப்பொறுப்பாளர்கள், தி.மு.க., மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளின் பொறுப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.
திராவிட மாணவர் கழக சட்டக் கல்லூரி மாநில அமைப்பாளர் து.இளமாறன் நன்றி கூறினார்.
கலந்துகொண்டோர்
மகளிரணி சி.வெற்றிசெல்வி, தங்க.தனலட்சுமி, பூவை செல்வி, பசும்பொன், வி.வளர்மதி, நர்மதா, அஜந்தா, மு.பவானி, த.மரகதமணி, சீர்த்தி பகலவன், பெரியார் பிஞ்சு மகிழன், பகுத்தறிவு, அன்புச்செல்வி, தங்கமணி, பெரியார்செல்வி, லட்சுமி, ராணி, மகாலட்சுமி, தமிழ்மதி
தென்சென்னை மாவட்டம்:
இரா.வில்வநாதன், (மாவட்ட தலைவர்) செ.ர.பார்த்தசாரதி, (மாவட்ட செயலாளர்) கோ.வீ.ராகவன் (மாவட்ட துணைச் செயலாளர்), சா.தாமோதரன், (மாவட்ட துணச் செயலாளர்) மு.இரா.மாணிக்கம், (ப.க.,தலைவர், தென்சென்னை), பா.இராசேந்திரன், எம்..டி.சி. அரங்க.இராசா, ந.மணிதுரை (மாவட்ட இளைஞரணி செயலாளர்), பெரியார் யுவராஜ், (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), இரா.மாரிமுத்து, (மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்), ந.இராமச்சந்திரன் (சூளைமேடு), இரா.ரவி (சைதாப்பேட்டை). எம்.டி.சி.செல்வம், பி.டி.சி. இராஜேந்திரன்
வடசென்னை மாவட்டம்:
தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால், மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், காப்பாளர் கி.இராமலிங்கம், கோ.தங்கமணி, மாவட்ட இளைஞரணி தலைவர் நா.பார்த்திபன், அயன்புரம் துரைராசு, சு.அரவிந்த்குமார், சி.காமராஜ், ஆ.துரை இராவணன், ச.இராசேந்திரன், மா.டில்லிபாபு
திருவாரூர்:
அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), தேவ.நர்மதா, அழகேசன், தீபன் ராஜ், லட்சுமி, நிரஞ்சன், இன்பதமிழ், தீரன், ஆதீஷ், ராகேஷ், அறிவுச்சுடர், குருநாதன், அறிவழகன், தினோ, குருமூர்த்தி, அஷ்வின், குமரன், அபி.
நாகை:
மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, சட்டக்கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன், மாவட்ட மாணவர் கழக தலைவர் மு.குட்டிமணி, வேதை அய்யப்பன், சுரவின், சஞ்சீவிராஜன், சிறீதர், குரு, சீறீராம், கிருஷ்ணா, சந்தோஷ், அரிஅரன், இனியவன், முத்துக்குமார்.
மேட்டூர்: சு,கபிலன், தினகரன் (விசிக)
அறந்தாங்கி: பகுத்தறிவு மு.பால்ராஜ்
தஞ்சை: இரா.செந்தூரபாண்டியன், அன்பு வீரமணி, நிலவன்
ஓசூர்: வனவேந்தன், சித்தாந்தன், தருண்
மதுரை: எரிமலை (மாவட்ட தலைவர்), முத்துகருப்பன், கலைச்செல்வி (மகளிரணி செயலாளர்)
தருமபுரி: அரூர் இராஜேந்திரன், அ.தமிழ்ச் செல்வன் திண்டிவனம் பாபு, காரைக்குடி என்னாரெசு பிராட்லா, அரக்கோணம் சோமசுந்தரம்,
தாம்பரம்: ப.முத்தையன் (மாவட்ட தலைவர்), கோ.நாத்திகன் (மாவட்ட செயலாளர்), சு.மோகன்ராஜ், மாடம்பாக்கம் அ.கருப்பையா, ஊரப் பாக்கம் சீனிவாசன், இரா.உத்திரகுமார், பொழிசை கண்ணன், கூடுவாஞ்சேரி மா.இராசு, படப்பை சந்திரசேகர், சீர்காழி இராமண்ணா, ந.கதிவரன், இராமாபுரம் ஜெ.ஜெனார்த்தனம், கு.சோமசுந்தரம், தனசேகர். சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு.
ஆவடி: மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன், மாவட்ட செயலாளர் க.இளவரசன், பெரியார் மாணாக்கன், க.தமிழ்ச் செல்வன், சு.வேல்சாமி, முகப்பேர் முரளி, கன்னடபாளையம் தமிழரசன், மு.ரகுபதி, இரா.வேல்முருகன், சுந்தர்ராஜன், இரணியன் (எ) அருள்தாஸ், மணிமாறன், சந்திரபாபு, சின்னப்ப தமிழர், உடுமலை வடிவேல், க.கலைமணி, வை.கலையரசன், வழக்குரைஞர் பன்னீர்செல்வம், கொரட்டூர் இரா.கோபால், வெங்கடேசன், அ.வெ.நடராசன், சி.வச்சிரவேலு, திராவிடமணி, நாகராஜ், தமிழ்மணி, இசக்கி, தங்கதுரை.
காஞ்சிபுரம்: அ.வெ.முரளி (மாவட்டத் தலைவர்), கி.இளையவேள் (மாவட்ட செயலாளர்), பா.இளம்பரிதி (மாவட்ட ப.க. செயலாளர்), போளூர் பன்னீர்செல்வம்,
செங்கல்பட்டு: செங்கை சுந்தரம் (மாவட்ட தலைவர்), பகுத்தறிவு, கலைப்பிரிவு தலைவர் கலைவாணன், பகலவன், அ.பா.கருணாகரன், கு.பிச்சைமுத்து மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக