நன்கொடை
லீலாராம் – மஞ்சுளா இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பெரியார் உலகத்திற்கு ரூ.10,000/-த்தை நன்கொடையாக வழங்கினர். மணமக்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: வாசுதேவன் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர். (சென்னை – 8.6.2024)
---------++++++-------++++++++-----+++++-------தென்சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த கழகத் தோழர் வாசுதேவன் அவர்களின் இல்லத் திருமணம்(லீலா ராம் - மஞ்சுளா இணையர்) பல்லாவரத்தில் உள்ள 'ராம் கிரிஷ் பேலஸ்' என்கின்ற திருமண அரங்கில் 19.05.2024 மாலை 6.00 மணி அளவில் நடைபெற்றது.
திராவிடர் கழக பரப்புரை செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் திருமண நிகழ்வை நடத்தி வைத்தார்.
புவியைப் போற்றி திருமணம் நடைபெற்றது. தோழர் செந்தமிழ் சேகுவாரா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தென்சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, அமைப்பாளர் மு.ந. மதியழகன், துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு.இரா.மாணிக்கம், ம. தமிழ்மதி, தாம்பரம் மாவட்ட கு.சோமசுந்தரம் மற்றும் பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக