சென்னை திரு.வி.க.நகர் சமூகக் கூடத்தில் விசுவாசவரம் _ பொன்.இரத்தினாவதி ஆகியோருடைய செல்வி டெய்சி மணியம்மைக்கும், அருளானந்தம் _ செல்லம்மாள் ஆகியோருடைய செல்வன் அ.சிவாநந்தம் (எ) எஸ்.பி.கண்ணனுக்கும் 20.7.1997 அன்று தலைமையேற்று வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவை நடத்தி வைத்தேன். மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். இருவரையும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ளச் செய்து மணவிழாவினை நடத்தி வைத்தேன். இவ்விழாவில், கழகப் பொறுப்பாளர்கள், தி.மு.க. கட்சியின் முக்கிய பிரமுகர்கள், திராவிடர் கழகத் தோழர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி (281)
- உண்மை இதழ், நவம்பர் 16-30.2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக