January 19, 2021 • Viduthalai
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தியாகராய நகர் தந்தை பெரியார் சிலைக்கு தமிழ்ப் புத்தாண்டை (தி.பி.2052) முன்னிட்டு மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, மாவட்ட அமைப்பாளர் மு.ந. மதியழகன், மாவட்ட துணைத்தலைவர் சி.செங்குட்டுவன் மற்றும் காப் பாளர் கோ.வீ.ராகவன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட தலைவர் இரா,வில்வநாதன் மாலை அணிவித்தார். மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன், தரமணி கோ. மஞ்சநாதன், ஈ. குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் சா.மகேந்திரன், மு.சண்முகப்பிரியன், வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், பெரியார் சேகர், பிடிசி ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக