தமிழ்நாடே மனித சங்கிலியால் இணைந்தது!!
மத்திய அரசு செயல்படுமா? மாநில அரசு விழிக்குமா?
சென்னை, ஏப்.24 தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சென்னையில் பல்வேறு இடங்களிலும் மனித சங்கிலிப் போராட் டம் பொதுமக்களின் பங்களிப்புடன் காவிரி நீர் உரிமைமீட்புப் போராட்டமாக மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.
தலைவர்கள்
புதுக்கோட்டையில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், தஞ்சையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, டி.ஆர்.பாலு, எல்.கணேசன், சென் னையில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், சிவகங்கையில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.இராமசாமி, திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், பெரம்பலூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆகி யோர் தலைமையில் மனித சங்கிலிப்போராட்டத்தில் ஏராள மானவர்கள் கலந்துகொண்டார்கள். அண்ணா அறிவாலயம்
அண்ணாஅறிவாலயம் அருகில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் குழு தலைவர் கவிஞர் கனிமொழி, சென்னை சைதாப்பேட்டையில் மேனாள் மேயர் மா.சுப்பிரமணியம், மாநிலங்களவை உறுப்பினர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி ஜி.ராமகிருஷ்ணன், காங்கிரசு கட்சி பீட்டர் அல்போன்ஸ், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன், மதிமுக மல்லை சத்யா, பொன்.குமார், சென்னை வடக்கு மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன், மாதவரம் எஸ்.சுதர்சனம், எர்ணாவூர் நாராயணன், ஆகியோரும், சென்னை கிழக்கு மாவட்டத்தில் பி.கே.சேகர்பாபு, மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்துக்கட்சியினரும் கலந்துகொண்டனர்.
தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், பிற இடங்களிலும் காவிரிநீர் உரிமைக்கான மனித சங்கிலிப் போராட்டத்தில் பெருந்திரளானவர்கள் பங்கேற்றனர்.
சென்னையில் கழகம்...
சென்னை எழும்பூரில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் வீஅன்புராஜ், எழும்பூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன், கழக வெளியுறவு செயலாளர் வீ.கும ரேசன், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், துணை செயலாளர் நா.பார்த்திபன், சென்னை மண்டல கழக செயலாளர் வி.பன்னீர்செல்வம், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், செய லாளர் தே.ஒளிவண்ணன் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, செ.தமிழ்சாக்ரட்டிஸ், தலைமைசெயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி, சி.வெற்றிசெல்வி, சென்னை மண்டல மாணவர் கழக செயலாளர் பா.மணியம்மை, எண்ணூர் வெ.மு.மோகன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், ந.கதிரவன் கு.செல்வேந்திரன், சண்முகப்ரியன், சேகர், வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரேஷ், மங்களபுரம் பாஸ்கர், செம்பியம் கி.இராமலிங்கம், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், தமிழ்மணி, இளைஞரணி கலைமணி, வை.கலையரசன், பெரியார் மாணாக்கன், பூவை செல்வி, தொண்டறம், சைதை இரவி, இரா.பிரபாகரன், சாந்தகுமாரி, கிஷோர், ஆனந்தி, ஜனனி, வி.வளர்மதி, பி.அஜந்தா, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, கவிமலர், அரும்பாக்கம் சா.தாமோதரன், பிரபு, அமுது, சரவணகுமாரி, அறிவன், இன்பன், கண்மணி, மலரணி, செவ்வியன், இன்சொல், செம்மொழி, சித்தார்த், மோகன்ராஜ், குடந்தை சங்கர் மற்றும் ஆதித்தமிழர் பேரவை கோவை வழக்குரைஞர் பன்னீர்செல்வம் தலைமையில் 20 பேர், திமுக பொறுப்பாளர்கள் தேவநிதி, ஜெ.விஜயக்குமார், து.களரிமுத்து, டி.வி.வேலு, வி.சுதாகர், கே.அன்னபூரணி, ந.கலையரசன், இ.மொய்தீன், எல்.சுந்தர்ராஜன், எம்.துலுக்கானம், வெ.மருதன், ஜெ.கிருஷ்ணமூர்த்தி, பா.கவுதம், அ.நிர்மலாதேவி, சே.பாலாஜி மற்றும் மதிமுக, விடுதலைசிறுத்தைகள்கட்சி, மனிதநேயமக்கள் கட்சி, எஸ்டிபிஅய், சிபிஅய்,சிபிஎம், காங்கிரசு உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளின் பொறுப்பாளர்கள் பெருந்திரளாக மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் கழகத் தோழர்கள் இணைந்து கொண்டனர்
தமிழகத்தின் உரிமைக்கான போராட்டங்கள்
காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பையொட்டி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கில், நடுவர் மன்றத்தில் கூறப்பட்ட வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வார காலத்துக்குள்ளாக மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று 16.2.2018 அன்று தீர்ப்பை அளித்தது.
ஆனால், மத்திய அரசோ காலங்கடத்திவிட்டு, ஆறு வார கால அவகாசத்தின் கடைசி நாளில் ஸ்கீம் என்ற சொல்லுக்கு பொருள்விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்டு மேலும் மூன்று மாத கால அவகாசம் கோரியது. திமுக, திராவிடர் கழகம், காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முசுலீம் லீக், மனிதநேயமக்கள் கட்சி, எஸ்.டி.பி.அய் உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது என்று முடிவெடுத்து, அதற்கான தொடர் போராட்டத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, 1.4.2018 முதல் அனைத்துக் கட்சிகளின் சார்பில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. முதல் கட்டமாக 4 நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து 5.4.2018 அன்று அனைத்துக் கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் அண்ணா சாலை மற்றும் கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர். சென்னை எழும்பூரில் திராவிடர் கழகத் தோழர்கள் மாபெரும் எழுச்சியுடன் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள்.
இதை தொடர்ந்து, 5.4.2018 அன்று மாலை அனைத்துக்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக்கூட்டம் சென்னை அண்ணாஅறிவாலயத்தில் நடைபெற்றது.
தமிழர் தலைவர் தொடங்கி வைத்த பயணங்கள்
காவிரி உரிமை மீட்பு பயணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. திருச்சி முக்கொம்பிலிருந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 7.4.2018 அன்று பயணத்தை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடங்கி வைத்தார். திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்பு பயணத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். 9.4.2018 அன்று இரண்டாவது பயணக்குழுவை அரியலூரில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடங்கிவைத்தார். இரண்டு குழுக்களும் கடலூரில் பயணத்தை நிறைவு செய்தன. 12.4.2018 நிறைவு நாளன்று மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு உரிமை முழக்கமிட்டனர். 12.4.2018 அன்று சென்னை வந்த பிரதமருக்கு 9 கட்சிகள் சார்பில் கருப்பு கொடி காட்டப்பட்டது. மோடி கோ பேக் என்று குறிப்பிடப்பட்ட ராட்சத கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. புறாக்களின் கழுத்தில் மோடி கோ பேக் கட்டி பறக்கவிடப்பட்டது. இதில், திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். மேலும் தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டு பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
நடைப்பயணத்தின் நிறைவாக 13.4.2018 அன்று ஒன்பது கட்சித் தலைவர்கள் நேரில் ஆளுநரிடம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வலியுறுத்தும் மனு அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் 16.4.2018 அன்று அனைத்துக் கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமரை நேரில் சந்திக்க நேரம் கேட்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைத்தே தீர வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் நோக்கிலும், அடுத்த கட்டப் போராட்டத்தைத் துவங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, அனைத்துக் கட்சிகளின் சார்பில் 23.4.2018 மாலை 4 மணி முதல் 5 மணி வரை அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்துக்கட்சியினர், பொதுமக்கள் கலந்துகொண்ட மாபெரும் மனித சங்கிலிப்போராட்டம் நேற்று (23.4.2018) மாலை நடைபெற்றது. அனைத்துக்கட்சிக்கூட்டத்தின் தீர்மானத்தின்படி நடைபெற்ற மனித சங்கிலிப்போராட்டத்தில் பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்றனர். காவிரி நதிநீர் மேலாண்மைவாரியம் அமைக்கப்படும்வரை தமிழகம் ஓயாது என்பதை உணர்த்தும்வகையிலும், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எச்சரிக்கை விடுக்கின்ற போராட்டமாகவும் மனித சங்கிலிப்போராட்டம் அமைந்தது.
கழகத் துணைத் தலைவர்
தமிழ்நாட்டுக்குரிய சட்டப்படி உரிய, நியாயப்படி உரிய, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவேண்டிய காவிரி நீர், இன்றைக்கு அரசியல் காரணங்களாலே முடக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக மத்தியில் இருக்கக்கூடிய மோடி தலைமையில் இருக்கக்கூடிய பாஜக ஆட்சி கருநாடகத்தில் நடைபெறக்கூடிய தேர்தல் அரசியல் ஆதாயத்தை உள்நோக்கமாகக் கொண்டு, சட்டப்படி தமிழ்நாட்டுக்குக் கொடுக்க வேண்டிய காவிரி நீரைத் தடை செய்கிறது. இது நீதிமன்ற அவமதிப்பு, மக்கள் மன்ற அவமதிப்பு என்பதை இந்த நேரத்திலே எடுத்துச் சொல்லி, காவிரி நீர் உரிமையில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கைப் பெறுகின்ற வரை இந்தப் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும். அறப்போராட்டம் நடந்துகொண்டிருக்கும். இந்த உரிமையைப் பெறுவதற்காக எவ்வளவு விலை கொடுக்க வேண்டுமோ அவ்வளவு விலையைக் கொடுக்க தமிழ்நாட்டு மக்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள் என்பதுதான் இந்த மனித சங்கிலிப் போராட்டத்தினுடைய நோக்கம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.
- இவ்வாறு செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் கூறினார்.
- விடுதலை நாளேடு, 24.4.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக