ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

தென்சென்னையில் தொடர் பிரச்சாரம்

அரும்பாக்கம், மார்ச் 5 25.2.2018 அன்று மாலை 5 மணி அளவில் அரும்பாக்கம் பெரியார் நெடுஞ் சாலையில் உள்ள தென் சென்னை மாவட்ட துணைச்செயலாளர் சா.தாமோதரன்  இல்லத்தில் அரும்பாக்கம் பகுதி கலந்துரை யாடல் கூட்டம் நடை பெற் றது.
மாவட்ட தலைவர் இரா வில்வநாதன் தலைமையில் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் சி.செங்குட் டுவன் மற்றும் துணைச் செய லாளர் கோ.வீ.ராகவன்  ஆகி யோர் முன்னிலையில் நடை பெற்றது.
25.2.2018 அன்று தென்சென்னை மாவட்ட துணைச்செயலாளர் சா.தாமோதரன்  அவர்களின் 55ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு அனைவரும் வாழ்த் துகளை கூறினர்.
மாவட்ட துணைச்செயலா ளர் சா.தாமோதரன்,  அரும்பாக் கம் பகுதி செயலாளர் க.தமிழ் செல்வன், க.பாலமுரளி, கொடுங் கையூர் கோ.தங்கமணி, தாம் பரம் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், சி.பரசுராமன், மு.திருமலை, விக்கிரவாண்டி வ.ஞானதேசிகமணி ஆகியோர் கழக பிரச்சாரத்தை முன்னெ டுத்து செல்வது குறித்து கருத்து களை கூறினர்.
துண்டறிக்கைகள், அறி விப்பு பலகைகள், தெரு முனைக் கூட்டங்கள் மூலம் தொடர் பிரச்சாரம் செய்வது எனவும், மாவட்ட கழகம் சார்பில் சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு ஒத்து ழைப்பு நல்குவதெனவும் தீர் மானிக்கப்பட்டது.
அய்ந்து அறிவிப்பு பலகை களை பிறந்த நாளை முன் னிட்டு  சா.தாமோதரன் அவர் கள் வழங்கினார்.
அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
தளபதி பாண்டியன், த.தனலட்சுமி, கோ.மஞ்சநாதன், மு.தமிழ்பாபு, க.திருச்செல்வம்,  எம்.பிரகாசம், ஏ.சுந்தர்,  க. பாலாஜி, சு.வேலுச்சாமி, து.நி குமார், மு.இரா.இரவி, லலிதா தமிழ்செல்வம், சோபன்பாபு, குணசேகரன்,  ஆவடி மாவட்ட செயலாளர் சிவக்குமார், சி. ஜெயந்தி, பா.அபிநவ், பா. கோவன் சித்தார்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.  த.அண்ணா துரை நன்றி கூறினார்.
- விடுதலை நாளேடு, 5.3.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக