செவ்வாய், 1 மே, 2018

வெள்ளுடைவேந்தர் சர். பிட்டி தியாகராயர் சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவிப்பு


சென்னை, ஏப்.27 நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரும், சென்னை பெருநகர் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றியவரும், வெள்ளுடைவேந்தர் என்று போற்றப்படுவபவருமாகிய சர். பிட்டி.தியாகராயரின் 167ஆவது பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் அமைந்துள்ள வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி.தியாகராயர் சிலைக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மாலை அணிவித்தார்.

திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி, தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் ப.முத்தையன், பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணூர் வெ.மு.மோகன், தி.வே.சு.திருவள்ளுவன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ், திண்டிவனம் சிறீராமுலு, தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மயிலை டி.ஆர்.சேதுராமன், செம்பியம் கி.இராமலிங்கம், கொளத்தூர் கோபாலகிருஷ்ணன், கொடுங்கையூர் கோபால், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், சேத்பட் பாபு, தாம்பரம் மோகன்ராஜ், ந.கதிரவன், ஊரப்பாக்கம் சீனுவாசன், வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரேஷ், புரசை இளைஞரணி காரல்மார்க்ஸ், அம்பேத்கர், ஒளிப்படக் கலைஞர் சிவக்குமார்,  முரளி, சட்டக்கல்லூரி மாணவர் பிரவீன்குமார், மதுரவாயல் வடிவேல், குமார், பெரியார் பிஞ்சுகள் கவிமலர், நீலமங்கலம் கிஷோர் உள்பட ஏராளமானவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.
- விடுதலை நாளேடு, 27.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக