சென்னை, ஜன. 27 24.1.-2018 அன்று மாலை 4 மணிக்கு தென் சென்னை மாவட்ட திராவிடர் மாணவர் கழக சந்திப்புக் கூட்டம் எல்லீஸ் சாலை தாயார் சாகிப் தெருவில் உள்ள சைன் சார்ப் அரங்கில் நடைபெற்றது.
அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் வகுத்தளித்த கொள் கைகளும், போராட்டங்களும் தமிழினத்துக்கு கிடைத்ததின் காரணத் தினால் படிப்பு பதவி சமூக உயர்வுகள் யாவும் கிடைத்தன என்ப தையும், தமிழர் தலைவரின் பேருழைப்பால் நாம் பெற்று வரும் உரிமைகளை மாணவர்களிடத்தில் எடுத்துகூறியும், திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், கனிமவளத்துறை உதவி இயக்குநர் ஓய்வு பெற்ற கு.அய்யாதுரை, தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக தலைவர் வில்வநாதன், மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட அமைப்பாளர் அரும் பாக்கம் தாமோதரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் மகேந் திரன், உரத்தநாடு அரவிந்தன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
புதிய பொறுப்பாளர்கள்
மாவட்ட திராவிடர் மாணவர் கழக தலைவர்: ச.அருண்குமார் (சட்டக்கல்லூரி), துணைத் தலைவர்: ஆர்.கவுதம் (சட்டக்கல்லூரி), செயலாளர்: து.சேது (விவேகானந்தா கல்லூரி), துணைச் செய லாளர்: கு.ப.கவிமலர், அமைப்பாளர்: கு.ப.அறிவழகன்.
மாணவர் கழக தலைவர், சட்டக்கல்லூரி மாணவர் அருண் நன்றி கூற ‘சந்திப்போம் சிந்திப்போம்' கூட்டம் நிறைவு பெற்றது.
-விடுதலை, 27.1.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக