திங்கள், 16 ஏப்ரல், 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடியைக் கண்டித்து நடைபெற்ற கருப்புக்கொடி போராட்டத்தால் குலுங்கியது சென்னை!



சென்னை. ஏப்ரல், 13. சென்னை திரு விடந்தையில் நடைபெறும் இராணு வக் கண்காட்சியைத் தொடங்கி வைப்பதற்காகவும், அடையாறு புற்றுநோய் மய்யம் மற்றும் சென்னை அய்.அய்.டி நிகழ்ச்சியில் பங்கேற்ப தற்காகவும் சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு, காவிரி மேலாண்மை வாரியம் உட்பட பல் வேறு பிரச்சினைகளுக்காக எதிர்க் கட்சிகள் கருப்புக்கொடி போராட் டத்தை சென்னையில் பல்வேறு இடங்களில் நடத்தின.

வரலாறு படைத்த கருஞ்சட்டைப் போராட்டம்!

சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவுக்கருகில் உள்ள அண்ணா சாலையில் நேற்று (12.4.2018) காலை முதலே கருப்புச்சட்டை, கையில் கருப்புக் கொடியுடன் மக்கள் கட்சி பேதமின்றி புற்றில் இருந்து ஈசல் புறப்படுவது போல வரத் தொடங்கிவிட்டனர். காவல் துறையினர் ஓரளவு எதிர்பார்த்திருந்தனர் என்றா லும், நேரம் செல்லச் செல்ல நிலைமை கட்டுமீறிப் போய்க் கொண்டிருந்தது. இந்த போராட்டத்தில் திராவிடர் கழகத்தோழர்களும் பங்கெடுத்துக் கொண்டனர். எல்லோரும் கருப்புக் கொடியுடனும், கருப்புச் சட்டையு டனும் இருந்ததால் யார் எந்தக்கட்சி, எந்த அமைப்பு என்ற பேதம் காண முடியாமல் போய், ஒட்டுமொத்தமாக அனைவருமே திராவிடர் கழகத் தோழர்கள்தான் என்னும் ஒரு மயக் கம்கூட ஏற்பட்டு விட்டது. நாலா பக்கமும் தி.மு.க. உள்பட பல்வேறு அமைப்புகளைச்சார்ந்த தோழர்கள் பிரதமர் மோடியை எதிர்த்து ஆக் ரோசத்துடன் ஒலி முழக்கங்களை எழுப்பியவண்ணம் இருந்தனர். கைது செய்யப்பட்டவர்களின் பேரணி!

கைது செய்வதற்கு போதிய வாக னங்கள் இல்லாததால் பயணிகள் இல் லாமல் வருகின்ற மாநகரப் போக்குவ ரத்து பேருந்துகளை மறித்து, ஓரங் கட்டி போராட்டக்காரர்களை முடிந்து வரையில் ஏற்றினர். கைது செய்யப் பட்டவர்களை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திற்கு அழைத்துச் சென்ற னர். சைதாப்பேட்டையிலிருந்து நந் தனம் சிக்னல் வரையில் சென்று அங்கிருந்து திரும்பி வரவேண்டும். சிக்னலில் பேருந்து நின்றவுடன் போராட்டக்காரர்கள் தன்னெழுச்சி யாக பேருந்தைவிட்டு அவர்களே இறங்கி, தாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு அண்ணா சாலையை முழுமையாக அடைத்தவாறு பேரணி யாக அதே ஒலிமுழக்கங்களுடன் கட் டுப்பாட்டுடன் அவர்களே சிறைப் படச் சென்றனர். காவலர்களால் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. அதுமட்டுமல்ல காலியாக இருக்கும் பேருந்தை உடனடியாக கலைஞர் வளைவுக்கு கொண்டு செல்ல வேண் டும் என்பதால், பேரணியாகச் செல் பவர்களைப்பற்றி கவலைப்படக்கூட வாய்ப்பின்றி சென்றதைக் காண முடிந்தது.

சூரிய வெப்பத்தைவிட சூடான போராட்டம்!

ஏதாவது விமானம் மேலே பறந் தால் போதும், ஒலி முழக்கங்களின் வேகம் இன்னும் கூடி ஆர்ப்பாட் டத்தை அடிக்கிற வெப்பத்தைவிட சூடாக ஆக்கியது. கைது செய்யப்பட்டு பேருந்தில் செல்பவர்கள் தங்கள் கைகளில் இருந்த கருப்புக்கொடியை பேருந்தின் சாளரத்தின் வழியே பறக்கவிட்டபடியே சென்றனர். இதைக்கண்ட சாலையில் சென்று கொண்டு இருக்கும் பொதுமக்களில் சிலர் தன்னெழுச்சியாக பிரதமர் மோடி யைக் கண்டித்து குரல் எழுப்பினர். கைதாப்பேட்டை கலைஞர் வளை வுக்கருகிருந்து ஏறக்குறைய 1500க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட் டனர். ஆனால் காவல் துறையினரால் 600 போராளிகளைத்தான் பதிவு செய்துகொள்ள முடிந்தது. திராவிடர் கழகத்தினர் சென்னை மண்டலச் செய லாளர் பன்னீர் செல்வத்தின் தலைமை யில் அந்த கருங்கடலின் பெரும் ஆர்ப்பரிப்பில், தங்களையும் இணைத் துக்கொண்டு கைதாகினர். முன்னதாக அதே இடத்தில் சிறை வைக்கப் பட்டிருந்த தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்கள் குழுத் தலைவர் கவிஞர் கனி மொழி அவர்களை திராவிடர் கழக மண்டல செயலாளர் பன்னீர் செல் வம், இயக்கத்தோழர்களோடு சென்று சந்தித்து நலம் விசாரித்தார். பங்கேற்றோர்

சென்னை மண்டல திராவிடர் கழகம் சார்பில் மண்டல செயலாளர் வி.பன்னீர்ச்செல்வம் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.பாலு, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் தாம்பரம் மாவட்டத் தலைவர் பா.முத்தையன் ஆகியோர் முன்னிலையில் பிரதம ருக்கு கருப்புக் கொடி காட்டி கழக தோழர்கள் கைதாயினர். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வைக்கப்பட்டு மாலை 3.00மணி அளவில் அனை வரும் விடுவிக்கப்பட்டனர்.

ஆவடி மாவட்டம்

உடுமலை வடிவேல், ஆ.ப.நடரா சன், இளவரசன் (துணைச் செயலா ளர்), இரணியன், பூ.இராமலிங்கம், கொரட்டூர் கோபால், வேலவன். கும்மிடிப்பூண்டி மாவட்டம்

வி.பன்னீர்செல்வம் (மண்டல செயலாளர்), வே.அருள்,  க.சுகன்ராஜ், புழல் அறிவுமாணன், பழனி.பாலு, மத்தூர் அண்ணா.சரவணன் (மாநில துணை தலைவர், ப.க.)

தாம்பரம் மாவட்டம்

ப.முத்தையன், கே.நாத்திகன், பா.ஓவியச்செல்வன், ப.கண்ணதாசன், ம.சுடரொளி, சீ.லட்சுமிபதி, தே.சுரேஷ், வழக்குரைஞர் உத்திரகுமாரன், கு. சோமசுந்தரம், கு,ஆறுமுகம், பி.சீனி வாசன், மா.குணசேகரன், இரா.சிவ சாமி, க.தமிழினியன், பெ.மோகன், பி.சி.ஜெயராமன், விஜய், பொழிசை கண்ணன், சுதன்லீ, ஜெனார்த்தனம், கமலகண்ணன், சு.மோகன்ராஜ், க.முத்து

தென்சென்னை

இரா.வில்வநாதன், மயிலை பாலு, மணித்துரை, செ.ர.பார்த்த சாரதி, எம்.பி.பாலு, மஞ்சநாதன், டி.ஆர்.சேதுராமன், சேகர், கோ.வி. ராகவன், செல்வராஜ், செல்வேந்திரன், சண்முகப்பிரியன்

வடசென்னை

கி.இராமலிங்கம், தி.செ.கணேசன், தே.சே.கோபால், தளபதி பாண்டியன், ஆ.பாஸ்கர், சதிஷ்குமார், மும்மூர்த்தி, ஏ.மணிவண்ணன், பி.பாலு

மகளிரணி நூர்ஜஹான், பூவை செல்வி, ராணி, பசும்பொன் செந்தில்குமாரி, இளையராணி, துர்கா, மணியம்மை, மதிவதனி, சீர்த்தி, அர்ச்சனா, வி.தங்க மணி, வி.யாழ்ஒளி, வி.சகானப்பிரியா, வி.வளர்மதி, பி.அஜந்தா, ச.கிரித்திக், பெரியார் பிஞ்சு நிலா, பெரியார் பிஞ்சு வர்ணிகா.

- விடுதலை நாளேடு, 13.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக