திங்கள், 16 ஏப்ரல், 2018

வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா?




ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்

திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!



சென்னை, ஏப்.16 தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினத்த வர்கள் மீதான வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் மத்தியஅரசைக் கண்டித்து அனைத்துக்கட்சிகளின் சார்பில் இன்று காலை (16.4.2018) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினத்தவர்கள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை  உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்மூலமாக நீர்த்துப்போகச் செய்வதைக் கண் டித்தும், மத்திய அரசு சீராய்வு மனுவை உடனே தாக்கல் செய்யாமல் காலந்தாழ்த்தியதைக் கண்டித்தும், வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்துக்கு ஒன்பதாவது அட்ட வணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மு.க.ஸ்டாலின் தலைமை

திமுக செயல் தலைவர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

கண்டன உரையாற்றியவர்கள்

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சட்டமன்ற காங்கிரசு கட்சித் தலைவர் கே.ஆர்.இராமசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்தியகம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத் தைகள் கட்சித்   தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முசுலீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாகிருல்லாஹ், திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், மக்கள்கண்காணிப்பகம் ஹென்றி திபேன் ஆகியோர் கண்டன எழுச்சியுரையாற்றினார்கள்.

திமுக, திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரசு கட்சி, இந்திய யூனியன் முசுலீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிட இயக்க தமிழர் பேரவை, பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

கலந்துகொண்டவர்கள்

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்,  தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.இராசா, மாநிலங்களவைஉறுப்பினர்கள்வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி, கவிஞர் கனிமொழி, திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியம், பி.கே.சேகர் பாபு மற்றும்  தாயகம் கவி, கவிஞர் காசிமுத்து மாணிக்கம், தாம்பரம் ராஜா உள்ளிட்ட திமுக பொறுப்பாளர்கள், விடுதலைசிறுத்தைகள் கட்சிப் பொதுச்செயலாளர் இரவிக்குமார், மாவட்டச் செயலாளர் செல்வதுரை உள்பட அனைத்துக்கட்சிகளின் சார்பில் பொறுப்பாளர்கள், திரைப்பட நகைச்சுவை நடிகர் மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கழகத் தோழர்கள்

மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன்,  திராவிட தொழிலாளர் கழகம் பெ.செல்வராசு, திராவிடர் கழக தலைமைசெயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி, சி.வெற்றிசெல்வி, நூர்ஜகான் ராசு, இறைவி, பூவை செல்வி, பசும்பொன் செந்தில்குமாரி, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை, தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்சாரதி, செல்வராசு, அரும்பாக்கம் சா.தாமோதரன், வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரேஷ், தாம்பரம் நகர செயலாளர் மோகன்ராஜ், பகுத்தறிவாளர் கழகம் விஜய் ஆனந்த், கே.எம்.சிகாமணி, புகைப்படக் கலைஞர் சிவகுமார், ந.கதிரவன்,  உடுமலை வடிவேல், வேலவன், அறிவழகன்,  நுங்கம்பாக்கம் பவன், கணேசன், யுவராஜ், முரளி, சுதன், குமார் உள்பட ஏராளமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
- விடுதலை நாளேடு, 16.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக