திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டில்
பெரும் திரளாக பங்கேற்க ஆவடி மாணவர் கழகம் முடிவு
ஆவடி, ஏப். 8- ஆவடி, கும்மிடிப்பூண்டி திரு வள்ளுவர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 1.4.2018 அன்று காலை 11 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் மாநில திராவிடர் கழக மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னா ரெசு பெரியார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
பெரியார் பிஞ்சு சமத்துவமணி கடவுள் மறுப்பு கூறி கலந்துரையாடலை தொடங்கி வைத்தார். சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை தொடக்கவு ரையும், சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், ஆவடி மாவட்ட தலைவர் தென்னரசு, செயலாளர் சிவக் குமார், திருவள்ளுவர் மாவட்ட துணைத் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்கள் ஜூலை 8 குடந்தையில் நடைபெறக்கூடிய திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டின் நோக்கமும் மாநாடு சிறப்பாக நடைபெற ஒவ்வொருவரும் தமது பங்க ளிப்பை அளிக்க வேண்டும் என்றும், சென்னை மண்டலம் சார்பாக லட்சியத்தை நோக்கி லட்சம் மாணவர்கள் என்ற நோக் கில் 1000 மாணவர்கள் தனி வாகனங்கள் மூலம் செல்ல வேண்டும் எனவும், பள்ளி, கல்லூரி மாணவர்களை சந்தித்து துண்ட றிக்கை வழங்கி பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டுமென்றும் வாய்ப்புள்ள இடங்க ளில் சுவரெழுத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
இக்கலந்துரையாடலில், சு.எழில் கும் மிடிப்பூண்டி மாவட்ட மாணவரணி அமைப்பாளர், மாநில திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் யாழ்திலீபன், சூர்யா, கா.காரல்மார்க்ஸ், க.சமத்துவமணி, வ.மோ.வேலவன், செ.வெ.தொண்டறம், இ.ப.சீர்த்தி, ப.கோபிநாத், சு.வெங்க டேஷ், இ.தமிழ்மணி, இரா.டில்லிபாபு, ரே.யுவராஜ், சி.பரசுராமன், வை.கலை யரசன், பட்டாளம் பன்னீர், கோ.முருகன், உடுமலை வடிவேல், ப.ர.ராமதுரை, சே. கோபாலகிருஷ்ணன், க.வீரமணி, க.வனிதா, எஸ்.ராதிகா, சி.ஜெயந்தி, வி. சோபன்பாபு, கி.மணிமேகலை, விஜய், க.சுகன்ராஜ், பிரேம்குமார், சி.அன்புமணி, சி.அறிவுமதி ஆகியோர் கலந்துக் கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மாநாட்டினை வரவேற்கும் விதமாக ஆவடி மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் கோபாலகிருட்டிணன், ரூ.2000 மும், மதிய உணவு ஏற்பாடும் செய்து தந்தார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் இராமதுரை ரூ.500ம், பூவை இளைஞரணி செயலாளர் சு.வெங்கடேஷ் ரூ.500ம் தமது பங்களிப்பை அளித்தனர்.
மாநில மாணவரணி துணைச் செயலா ளர் நா.பார்த்திபன் தீர்மானங்களை வாசித்தார்
தீர்மானங்கள்
1) ஜூலை 8ஆம் தேதி கும்பகோணத்தில் பெரியாரை சுவாசிப்போம். பெருவாழ்வு பெருவோம்!! என்ற தலைப்பில் நடைபெற உள்ள திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டிற்கு தனி வாகனத்தில் 800 மாணவர்கள் பங்கேற்கச் செய்வோம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2) குடந்தை மாநாட்டினை விளக்கி, சுவரெழுத்து தட்டிகள், ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்வது எனவும், மாநாடு சிறப்பாக நடைபெற மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நன்கொடை தொகை யைத்திரட்டித் தருவது எனவும் தீர்மானிக் கப்படுகிறது.
3) மருத்துவ கல்விக்கு நீட் திணிப்பு, மருத்துவ மேல் படிப்பில் பிற்படுத்தப்பட் டோர் இடஒதுக்கீடு மறுப்பு, அரசு மருத்து வர்களுக்கு 50% இடஒதுக்கீடு மறுப்பு என தொடர்ந்து சமூகநீதிக்கு எதிரான போக்கை கண்டிப்பதோடு, தமிழர் தலைவர் அவர் களின் வழிகாட்டுதலோடு சமூகநீதிக்கான போர்க்களத்தில் தொடர்ந்து போராடுவது என்று இக்கூட்டம் உறுதி செய்கிறது.
ஆவடி மாவட்டம் புதிய பொறுப்பாளர்கள்
தலைவர்: செ.பெ.தொண்டறம், துணைத் தலைவர்: இ.ப.இனநலம், செயலாளர்: உ.விஜய், துணைச் செயலாளர்: வ.மோ. வேலவன், அமைப்பாளர்: கா.வ.காரல் மார்க்ஸ், பள்ளி மாணவர்கள் ஒருங்கி ணைப்பா ளர்கள்: ஜெ.சி.அறிவுமதி, பாக் கம் தமிழ்ச்செல்வி.
கும்மிடிப்பூண்டி மாவட்டம்
தலைவர்: சு.எழில், செயலாளர்: ஞான சேகரன், அமைப்பாளர்: தேன்மொழி, எல் என்ஜி கல்லூரி பொன்னேரி திராவிட மாணவர் கழக அமைப்பாளர்: பிரேம்.
திருவள்ளூர்
அமைப்பாளர்: ஏ.பி.பெரியார்செல்வம்.
- விடுதலை நாளேடு, 8.4.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக