ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

அன்னை மணியம்மையார் நினைவுநாள் தமிழர் தலைவர் தலைமையில் மரியாதை

அன்னை மணியம்மையார் 40ஆம் ஆண்டு நினைவுநாளில் அம்மா -அய்யா நினைவிடங்களில் மரியாதை (16.3.2018)

சென்னை, மார்ச் 16- அன்னை மணியம்மையார் 40ஆம் ஆண்டு நினைவு நாளில் (16.3.2018) சென்னை வேப்பேரி பெரியார் திடலிலிருந்து மக ளிர் அணி, மகளிர் பாசறைத் தோழர்களுடன் ஏராளமான வர்கள் ஊர்வலமாக சென்று பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தந்தை பெரியார் வாழ்க! அன்னை மணியம்மையார் வாழ்க! ராவண லீலா போராட்டம் நடத்திய அன்னை மணியம்மையார் வாழ்க எனும் முழக்கங்கள் ஒலிக்கப்பட்டன.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் கழகத் தோழர்கள் புடைசூழ  பெரியார் திடலில் அமைந்துள்ள 21 அடி உயர தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து தந்தைபெரியார் நினைவிடம், அன்னை மணி யம்மையார் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
பங்கேற்றவர்கள்
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், மதிமுக அமைப்புச்செயலாளர் ஆ.வந்தியத்தேவன், திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி,  பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராஜன், பகுத்தறிவு இலக்கிய அணி மஞ்சை வசந்தன், பெரியார் மணியம்மை மருத்துவமனை மேலாளர் குணசேகரன், திராவிட நலநிதி பொது மேலாளர் அருள்செல்வன், அச்சகப்பிரிவு மேலாளர் க.சரவணன், தலைமைசெயற்குழு உறுப்பினர் பொறியாளர் ச.இன்பக்கனி, க.பார்வதி, கு.தங்கமணி, சி.வெற்றிசெல்வி, மருத்துவர் மீனாம்பாள், சென்னை மண்டல கழக செயலாளர் வி.பன்னீர்செல்வம், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கொடுங்கையூர் கோ.தங்கமணி, வடசென்னை இளைஞரணி செயலாளர் சுரேஷ், தென்சென்னை இளைஞரணி செயலா ளர் மகேந்திரன், புரசை அன்புச்செல்வன், சூளைமேடு இராஜேந்திரன், கோ.வீ.ராகவன், அரும்பாக்கம் சா.தாமோ தரன்,  செல்வராசு, விடுதலைநகர் ஜெயராமன், சட்டக்கல்லூரி திராவிடர் மாணவர் கழகப் பொறுப்பாளர் பிரவீன்குமார், தாம்பரம் மா.குணசேகரன்,  செஞ்சி ந.கதிரவன், விஜய் ஆனந்த், தொழிலாளரணி நாகரத்தினம், ராமலிங்கம், தமிழினி யன்,  மயிலை ஈ.குமார், சேத்பட் பாபு, நாகை சித்தார்த்தன், சிவகங்கை கண்ணன், தயாளன், மயிலை பாலு, சைதை மு.ந.மதியழகன், திருவொற்றியூர் கணேசன், செம்பியம் கி.இராம லிங்கம், பா.கோபாலகிருஷ்ணன், ஆவடி முத்துக்கிருஷ் ணன், கே.செல்லப்பன், கலைமணி, கலையர சன், பெரியார் மாணாக்கன், முருகேசன், இரவி, ஆனந்தன், பாஸ்கர், விஜய், அம்பேத்கர், விமல்ராஜ், யுவராஜ், காரல் மார்க்ஸ், குமார், சங்கர், அருள், சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மகளிரணியினர்


ச.கனகா, இலங்கையைச் சேர்ந்த கயல்விழி, சந்திரா முனுசாமி, தங்க.தனலட்சுமி, பசும்பொன் செந்தில்குமாரி, சுமதி, பூவை. மு.செல்வி, வி.வளர்மதி, அஜந்தா,  மண்டல மாணவர் கழக செயலாளர் பா.மணியம்மை, ரமணி, அழகு மணி, சாந்தி, கற்பகம், வனிதா, மதியரசி, விஜயலட்சுமி, கூடு வாஞ்சேரி நூர்ஜகான், மரகதமணி, சந்தியா, மு.பவானி, மீனாகுமாரி, வசந்தி, மோகனபிரியா, சகிலா, நந்தினி, பிரசினா மற்றும் சென்னை மண்டலத்தில் தென்சென்னை, வட சென்னை, தாம்பரம், ஆவடி மாவட்டங்களிலிருந்து ஏராள மான தோழர்கள் கலந்துகொண்டனர்.
-விடுதலை நாளேடு, 16.3.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக