நீலாங்கரை மானமிகு ஆர்.டி.வீர பத்திரன் வயது 80 (13.4.1938) என் றாலும் தோற்றத்திலும் சுறுசுறுப்பிலும், வேகத்திலும் ஓர் ஓட்டக்குதிரைதான் - இளைஞர்தான்.
கழக நிகழ்ச்சி என்றால் ஜெர்மனுக் குக்கூட வந்து விடுவார். 2017இல் ஜெர்மனியில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டில் பங்கு கொண்டவர். ஆந் திரா, தெலங்கானா, விஜயவாடா, பெங் களூரு என்று இவரின் இயக்கத் தொடர்பு ஆச்சரியமானது.
இவ்வளவுக்கும் படிப்பு வெறும் நான்காம் வகுப்புதான். 10ஆம் வயதில் 6 வயது என்று சொல்லி முதல் வகுப்பில் சேர்த்தார்களாம். அப்பொழு தெல்லாம் அப்படித்தான் - ஆசிரிய ராகப் பார்த்து ஒரு பிறந்த நாளை குறிப்பிடுவது வழமைதான். செங் கற்பட்டு மாவட்டம் மேடவாக்கத்தைச் சேர்ந்த நூக்கம்பாளையம் தேசப்பன் - ஆதியம்மாள் ஆகியோருக்கு மூன் றாவது மகன் இவர்.
வறுமைதான் இவரின் உறைவிடம். சென்னை தியாகராயர் நகரில் கண் ணம்மாபேட்டையில் தாய்மாமா பெருமாள் மாட்டுப் பண்ணை வைத் திருந்தார். அந்தத் தொழுவம் தான் வீரபத்திரனின் உறையுள். பள்ளிக்குச் சென்று வந்த நேரம் போக மீதி நேரமெல்லாம் மாட்டோடு இவரும் சிறு கன்றுகுட்டிதானாம்.
ஒரு நாள் மாமாவின் அடி தாங் காமல், டிக்கெட் வாங்காமல், ஏதோ ஓர் இரயிலில் ஏறினார். விடியற்காலை கண் விழித்தபோது அது விஜயவாடா வாக இருந்தது.
மொழி தெரியாத - அறிமுகமில் லாத இடத்தில் சுமை தூக்கும் வேலையில் ஈடுபட்டு, அதன்பின் வாடகை ரிக்ஷா ஓட்டி, லாரி கிளீன ராகி - இப்படியே எட்டாண்டுகள் கழித்து மறுபடியும் கண்ணம்மா பேட்டைக்கு ஒரு வழியாக வந்து சேர்ந்தார் நமது ஆர்.டி.வீரபத்திரன்.
கொஞ்ச காலம் டாக்சி டிரைவர் - அதன்பின் இராயல் என்ஃபீல்டில் ஓட்டுநர் பணி. கவிஞர் வாலியின் கார் ஓட்டுநராகவும் பணியாற்றியுள்ளார்.
32ஆம் வயதில் 1969ஆம் ஆண் டில் கஸ்தூரியைத் திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்களுக்குப் பிறகு அண்ணன் குப்புசாமி, அண்ணி சந்திராதான் எல்லாம் இவருக்கு. இவர் களின் ஏற்பாட்டின் அடிப்படையில் தான் இந்தத் திருமணமும் கூட.
இந்தச் சூழ்நிலையில் கண்ணம்மா பேட்டையில் திராவிடர் கழக வீரர் நாதன் - அந்தக் காலகட்டத்தில் அந்தப் பகுதியில் பிரபலமானவர். (தந்தை பெரியார் இறுதியாக பேசிய சென்னை தியாகராயர் நகர் பொதுக் கூட்டத்திற்கு (19.12.1973) தலைமை வகித்தவர் இவர்).
வீரபத்திரனைக் கழகத்திற்கு இழுத் தவரே இவர்தான். அதுவும் எப்படி? தொடக்கமே பிள்ளையார் உடைப்பு போராட்டம். கண்ணம்மாபேட்டை தோழர் ஏழுமலை, இரகுராமன், அடையாறு டைலர் ஜோதி, அடை யாறு அரங்கநாதன், பிற்காலத்தில் ஓ.சுந்தரம், குடந்தை கவுதமன் ஆகி யோரின் நட்போடு கழகப் பணியில் ஈடுபட்டார்.
இராயல் என்ஃபீல்டில் விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு சொந்த தொழில்களைத் தொடங்கினார்.
தந்தை பெரியார் பல்சுவை மய்யம், தந்தை பெரியார் தேநீரகம், தந்தை பெரியார் உணவகம், தந்தை பெரியார் தொலைத் தொடர்பகம் என்று பல் வேறு சொந்த தொழில்களை நடத் தினார். கொழுத்த இராகு காலத்திலும், எமகண்டத்திலும்தான் இவற்றை யெல்லாம் தொடங்குவார். சொந்த வீட்டுக்குக் கால் கோள் எமகண்டத்தில் தான். அதிலும் குறிப்பாக விதவைப் பெண்களை முன்னிலைப்படுத்துவார்.
இரண்டு மகள்கள், ஒரு மகன் இவருக்கு. ஒரு மருமகன் முசுலிம், மற்றொரு மருமகன் கிறித்தவர். இப்படியெல்லாம் ஜாதி, மத ஒழிப்புப் புரட்சிதான்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரி யர் மானமிகு கி.வீரமணி, புலவர் புலமைப்பித்தன், திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை, கவி ஞர் கலி.பூங்குன்றன், வழக்குரைஞர் அருள்மொழி ஆகியோரை அழைத்து, வீட்டு நிகழ்ச்சிகளை யெல்லாம் இயக்கப் பிரச்சார நிகழ்ச் சிகளாக நடத்தினார்.
இரு மகள்களும் பொறியாளர் கள், பேரக் குழந்தைகள் உண்டு. எவ்வளவுக்கெவ்வளவு இளமையில் வறுமை இவரைக் கவ்விப் பிடித் ததோ, அவற்றுக்கெல்லாம் நிவார ணமாக எல்லா வளத்துடனும் நிம் மதியாக முழுநேர இயக்கப் பணி யாளராக இப்பொழுது நடைபோட்டு வருகிறார்.
இவரின் துணைவியார் 2003இல் மரணமடைந்தபோது, மனமுடைந்து போனார் - வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளில் எல்லாம் தைரியம் கொடுத்து ஊக்கப்படுத்தியவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள். இதனை நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார்.
1962இல் பால் வியாபாரம் செய்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் சிந் தாதிரிப்பேட்டையில் தந்தை பெரியார் தங்கி இருந்தார். நாள்தோ றும் இவர்தான் அந்த வீட்டுக்குப் பால் கொடுப்பவர். அப்பொழுது முதலே தந்தை பெரியாரை நெருக் கமாகக் காணும், அறியும் வாய்ப்பு ஏற்பட்டு விட்டது.
கழகத்தில் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளராகவும், மாவட்ட செயலாளராகவும், இப் பொழுது பொதுக்குழு உறுப்பின ராகவும் இருந்து வருபவர்.
ஈழத் தமிழர்களுக்காக திராவிடர் கழக பெருங்குரல் கொடுத்துக் கொண்டு, பாடுபட்டுக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் போராளிகள் சென்னையில் தங்கி இருந்தபோது அவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததால், பல சோதனைகள் நடத் தப்பட்டன. எல்லா சோதனைகளையும் கடந்து, குற்றமற்றவர் என்ற மெய்ச் சான்றுடன் வெளியே வந்தார்.
டில்லியில் நடைபெற்ற சமூகநீதித் தொடர்பான போராட்டத்தில் திரா விடர் கழகத் தலைவர் மற்றும் தோழர் களும் கலந்து கொண்டபோது கைது செய்யப்பட்டனர்.
அந்தப் போராட்டத்தில் மேனாள் மத்திய அமைச்சர் சந்திரஜித் யாதவ், டி.பி.யாதவ், தமிழ்நாட்டிலிருந்து சென்ற தாம்பரம் முத்தையன் மற்றும் கழகத் தோழர்கள், வடநாட்டைச் சேர்ந்த சமூக நீதியாளர்கள் பங்கு கொண் டனர். மாலை விடுதலை செய்யப்பட்ட நிலையில் மேனாள் பிரதமர் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் இல்லத்திற்குக் கழகத் தலைவர் ஆசிரியர் சென்ற போது, வி.பி. சிங் அவர்களிடத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அவர் இல்லத்தில் அனைவருக்கும் தேநீர் விருந்து அளித்து உபசரிக்கப் பட்டது.
மண்டல் குழு தொடர்பாக உச்சநீதி மன்ற நீதிபதி ஜீவன்ரெட்டி பரிபூரணத் தய்யங்கார் உருவப் பொம்மை எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
வேலூர் மத்திய சிறையில் 15 நாள் கள் கழகத் தலைவருடன் இருந்ததைப் பூரிப்போடு தெரிவித்துக் கொண்டார்.
வறுமையில் பிறந்து வளர்ந்து, பல்வேறு சமூக சூழலில் பல பழக்க வழக்கங்களுக்கெல்லாம் ஆளாகி, திராவிடர் கழகக் கொள்கைக்குள் காலடி பதித்து, பகுத்தறிவு வெளிச்சம் பெற்று, கழகத் தோழர்களின் நட்பும், கழகத் தலைவர் ஆசிரியர் அவர் களின் அரவணைப்பும், ஊக்குவிப்பும் என்னைப் பக்குவமும், சிறப்பும் பெற்ற ஒரு மனிதனாக வார்த்தெடுத் திருக்கிறது என்று பெருமிதத்துடன் கூறுவார் பெரியார் பெருந்தொண்டர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் அவர் கள்.
ஆம், பெரியார் கொள்கை, ஒரு வாழ்க்கை நெறியே!
பேட்டி: 2.4.2018
இடம்: பெரியார் திடல், சென்னை
பேட்டி கண்டவர்: கவிஞர் கலி.பூங்குன்றன்
உடனிருந்தவர்: வீரபத்திரன் அவர்களின் சகப் பயணாளி இராசேந்திரன்
- விடுதலை ஞாயிறு மலர், 07.04.2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக