ஆளுநரைக் கண்டித்து மாணவர் அமைப்புகள் சென்னை - மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
சென்னை, மார்ச் 28 தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத் தில் தமிழக ஆளுநரின் தலையீட்டின்பேரில் ஆர்.எஸ்.எஸ்- அமைப்பைச் சேர்ந்தவரான சூர்யநாராயண சாஸ்திரி என்பவர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டனம் வெளியிட்டு, மாணவர் அமைப்பு போராட்டம் நடத்தும் என்று அறிவித்தார்.
அதன்படி, அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நியமனத்தைக் கண்டித்து நேற்று (27.3.2018) மாலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரு கில் ஆளுநருக்கு எதிராக மாணவர் அமைப்புகளின் சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திராவிட மாணவர் கழகம், திமுக மாணவரணி, மதி முக மாணவரணி, சமூகநீதி மாணவர் பேரவை, தமிழ் நாடு மாணவர் முன்னணி, மாணவர் இந்தியா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் பேரவை உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து கண் டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில், டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவரும், திராவிட மாண வர் கழக மாநில கூட்டுச் செயலாளருமாகிய சே.மெ.மதிவதனி தொடக்க உரையாற்றினார்.
திமுக மாணவரணி மாநில செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், மதிமுக மாணவர் அணி மணவை தமிழ் மாணிக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் பேரணி மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் செஞ்சுடர், கவிகணேஷ், மாணவர் இந்தியா பொருளாளர் அசாருதீன், தமிழ்நாடு மாணவர் முன்னணி இளையராஜா, சமூகநீதி மாணவர் பேரவை தமீம் அன்சாரி, திராவிட இயக்க தமிழர் பேரவை சிறீநாத், அகில இந்திய கிராமப்புற மாணவர்கள் சங்கம் அமுதரசன், திராவிட மாணவர் கழக சென்னை மண்டல செயலளர் பா.மணியம்மை உள்பட மாணவர் அமைப் புகளின் பிரதிநிதிகள் பலரும் கண்டன உரையாற்றினார்கள்.
திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் யாழ்திலீபன் தொகுத்து வழங்கினார். திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் நா.பார்த்திபன் உள்ளிட்ட மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்ட முழக்கமிட்டனர்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிறைவுரை யாற்றினார்.
டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி திராவிட மாண வர் கழக அமைப்பாளர் பிரவீன்குமார் நன்றி கூறினார்.
கல்வித்துறையில் பல்கலைக்கழகங்களில், கல்லூரி களில் மத்தியில் ஆளும் பாஜக, ஆளுநர் தலையிடுவது, உயர் கல்வி, ஆய்வு மாணவர்கள் கல்வி உதவித்தொகையை நிறுத்துவதன் மூலமாக அவர்களின் கல்வி உரிமையை பறிப்பது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. டில்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகம், புனே தொலைக்காட்சி மற் றும் திரைப்படக் கல்லூரி, அய்தராபாத் மத்திய பல் கலைக்கழகம் உள்ளிட்ட நாடுமுழுவதும் கல்வி நிறு வனங்களில் இந்துத்துவாவைத் திணிக்கும் முயற்சியைத் தொடர்ந்து செய்து வருவதும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட, பழங்குடியின மாணவர்களின் கல்வி உரிமை யைப் பறிக்கின்ற வகையிலும் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழகத்திலிருந்து வட மாநிலங்களில், டில்லியில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தொல்லைக்கு உள் ளாக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மருத்துவ உயர் கல்வி பயிலும் மாணவர்கள் சாகடிக்கப்படுகின்றனர். அய்தராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமுலா எனும் தாழ்த்தப்பட்ட ஆய்வு மாணவர் கல்வி தொடரமுடியாமல் உயிரிழந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்படுவதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடும் எதிர்ப்பு பலதரப்பிலிருந்து கிளம்பி யது.
தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் பெயரில் இயங்கி வருகின்ற சட்டப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பணியிடத்துக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஒருவரை தமிழக ஆளுநர் நியமித்து அறிவித்துள்ளதைக் கண்டித்து மாணவர்கள் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கமிட்டனர்.
கலந்துகொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் விவரம் வருமாறு:
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆ.பிரதாப், மேக்னாசரண், சரத்குமார், நிர்மல், நாகராஜ், அன்பு, பிரதீப், திராவிட மாணவர் கழகத்தைச் சேர்ந்த மு.மணிமாறன், க.கனிமொழி, செ.பெ.தொண்டறம், க.வெண்ணிலா, வி.யாழ்ஒளி, வி.தங்கமணி, தமிழ்நிலா, சகானாபிரியா, கோ.அன்பரசு, பிரபாகரன், நங்கநல்லூர் கார்த்திக், ச.அமுதன், சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், வடசென்னை மாவட்டத் தலைவர் சு.குமாரதேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்,தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, சு.மோகன்ராஜ், பொழிசை கண்ணன், கண்ணதாசன், சீ.இலட்சுமிபதி, அரங்க.பொய்யாமொழி, இராமண்ணா, வழக்குரைஞர் உத்திரக்குமாரன், கு.சோமசுந்தரம், ந.கதிரவன், சீனுவாசன், வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் சோ.சுரேஷ், புதுவண்ணை எஸ்.செல்வம், வியாசர்பாடி மு.கவுதம், திருவொற்றியூர் மு.மாணிக்கம், இராயபுரம் ரேவந்த் குமார், புரசை காரல்மார்க்ஸ், அம்பேத்கர், கும்டிப்பூண்டி மாவட்ட இளைஞரணித் தலைவர் சு.நாகராஜன், செயலாளர் க.ச.கஇரணியன், பொன்னேரி வே.அருள், மீஞ்சூர் முருகன், சோழவரம் கஜேந்திரன், சக்கரவர்த்தி, ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், பெரியார் மாணாக்கன், கலைமணி, கலையரசன், கொரட்டூர் கோபால், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சைதை மு.ந.மதியழகன், கோ.வீ.ராகவன், அரும்பாக்கம் சா.தமோதரன், க.தமிழ்ச் செல்வன், சி.செங்குட்டுவன், ச.மகேந்திரன், ச.அருண் குமார், கோ.மஞ்சநாதன், சேத்பட் அ.பாபு, சூளைமேடு இராஜேந்திரன், மயிலை மோகன், புதுவண்ணை செல்வம், தங்க.தனலட்சுமி, இறைவி, பசும்பொன் செந்தில்குமாரி, வனிதா, பூவை செல்வி, கும்மிடிப்பூண்டி இராணி, வி.வளர்மதி, பி.அஜந்தா, தமிழ்செல்வி, க.கலாரஞ்சனி, பெரியார் பிஞ்சு க.பகலவன், நிலா உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
மதுரை
27.3.2018 அன்று மாலை 4 மணியளவில் மதுரை ஆறுமுச்சந்தி சந்தை அருகில் டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் துணை வேந்தரா? தமிழக ஆளுநரின் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன போக்கை கண்டித்து திராவிடர் மாணவர் கழகம் சார்பில் மாநில திராவிடர் மாணவர் கழக துணைச் செயலாளர் தி.இலக்கியா தலைமையில் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மண்டல திராவிடர் மாணவர்கழக செயலாளர் சு.சித்தார்த், திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வி.சுதன், மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் மாணவர் கழக செயலாளர் பெ.தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார். மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் அவர்கள் தொடர்ந்து கா.சிவா, முன்னாள் மாவட்டச் செயலாளர் அ.வேல்முருகன், மதுரை மண்டலத் தலைவர் மா.பவுன்ராசா ஆகியோர் உரைக்கு பின்பு தலைமைக்கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி நிறைவாக சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் தென் மாவட்ட பிரச்சாரக்குழு அமைப்பாளர் தே.எடிசன்ராசா, அமைப்புச் செயலாளர் செல்வம், வழக்குரைஞர் கணேசன், மாவட்டத் தலைவர் எஸ்.முனியசாமி, மாவட்டச் செயலாளர் முருகானந்தம், மதுரை மண்டலச் செயலாளர் முருகேசன், மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் எஸ்.தனபாலன், செயலாளர் த.ம.எரிமலை, திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமர்நாத், திருப்பதி, மணிராஜ், சிவா, ரோ.கணேசன், பேக்கரி கண்ணன், சுப்பையா, பிச்சைப்பாண்டி, சுரேஷ், போட்டோ ராதா, ஆட்டோ செல்வம், கனி, கணேசன், இராஜேந்திரன், வேல்துரை ராக்குதங்கம், பொ.பவுன் ராஜ், பாக்கியலட்சுமி, அஜிதா, பெரிகாளியப்பன், அழகு பாண்டி, அன்புமதி, அய்யாசா, நாகமுத்து, விருதுநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆசைத்தம்பி, நல்லவன் உள்ளிட்டவர்கள் திரளாகப் பங்கேற்றார்கள். திராவிட இயக்கத் தமிழர் பேரவை போட்டோ சரவணன் நன்றி கூறினார்.
- விடுதலை நாளேடு, 28.3.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக