செவ்வாய், 10 ஜனவரி, 2017

பெரியார் சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை -2014


தந்தை பெரியாரின் 136ஆவது பிறந்த நாளை முன்னிட்டு
தென்சென்னை முழுவதும் இளைஞரணித் தோழர்கள்
பெரியார் சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை





சென்னை, செப். 29_ இருசக்கர வாகனத்தில் சென்று பகுத்தறிவு பகல வன் தந்தை பெரியாரின் சிலைகளுக்கு தென் சென்னை முழுவதும் இளைஞரணி மாணவ ரணி தோழர்கள் மாலை யிட்டு மரியாதை செலுத் தினர். அதன் விவரம் வரு மாறு:_

காலை 9 மணிக்கு சிம்சனில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

10 மணிக்கு பெரியார் திடலில் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியா தையும் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டு இளை ஞரணி தோழர்கள் தனித்தனி வாகனத்தில் தென்சென்னை முழுவதும் சென்று பெரியார் படத் திறப்பு, தகவல் பலகை திறப்பு என்று பெரியார் பிறந்த நாளை வெகு சிறப் பாக கொண்டாடினர்.

முதலாவதாக காலை 11 மணியளவில் அண்ணா மேம்பாலத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.சண்முகப்பிரியன் தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது 11.30 மணியளவில் மயிலை லஸ் கார்னரில் உள்ள தந்தை பெரியார் தகவல் பலகை அருகே பெரியார் உருவப்படத்தை சென்னை மண்டல மாண வரணி செயலாளர் பா. மணியம்மை திறந்து வைத் தார். கழகத்தோழர் விஜய ராசா பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

12 மணியளவில் மந்த வெளி அபிராமபுரம் தந்தை பெரியார் படிப்பகத்தில் மயிலை குமார் அவர்கள் கழக கொடியை ஏற்றி வைத்து தந்தை பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார் படிப்பகம் முகிழன் பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ் வித்தார்.

12.30மணியளவில் மந்தவெளி அ.பக்கிரிசாமி நினைவு பூங்காவில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு இளைஞரணி துனைத் தலைவர் படிப்பகம் முகி ழன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை   செய்யப்பட்டது.

ஒரு மணியளவில் கோட் டூர்புரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள தந்தை பெரியார் தகவல் பலகையையும் கழக கொடியையும் இளைஞ ரணி தலைவர் கு.செல் வேந்திரன் ஏற்றினார் பகுதி மக்களுக்கு இனமான பாடகர் ச.தாஸ் இனிப்பு வழங்கி சிறப்பித்தார்.

1.30 மணியளவில் கோட்டூர்புரம் சித்ரா நகரில் இனமான பாடகர் ச. தாஸ், தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்து கழக கொடியை ஏற்றினார்.

2.00 மணியளவில் சைதாப்பேட்டையில் உள்ள தந்தை பெரியார் பகுத்தறிவு தகவல் பலகை மற்றும் பகுத்தறிவு பகல வன் தந்தை பெரியாரின் உருவப்படத்தை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை திறந்து வைத்தார் பொதுமக்க ளுக்கு கு.செல்வேந்திரன் இனிப்பு வழங்கி சிறப்பித் தார்.

2.30 மணியளவில் சென்னை அசோக் நகரில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு வெங்கடேசன், (தமிழ்நாடு மின்சார வாரி யம்) மாலை அணிவித்து சிறப்பித்தார். அதனை தொடர்ந்து விருகம்பாக் கம் சிம்யாநகர், பெரியார் பெரும் தொண்டர் சி. செங்குட்டுவன் இல்லத் தில் உள்ள கழக கொடியை பெரியார் பெரும் தொண் டர் சி.செங்குட்டுவன் தலைமையில் செ.தமிழ்ச் சாக்ரடீஸ் சென்னை மண் டல இளைஞரணி  செய லாளர், பா.மணியம்மை மண்டல மாணவர் அணி செயலாளர் செ.ர. பார்த்த சாரதி தென்சென்னை மாவட்ட செயலாளர் பெரியார் பெரும்தொண் டர் தங்கவேல், கு.செல் வேந்திரன் தென் சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் மு.சண்முகப் பிரியன் தென் சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர்  தாஸ், வெங்க டேசன் (தமிழ்நாடு மின் சார வாரியம்), க.விஜய ராசா, தாமோதரன், மாரியப்பன், அரும்பாக்கம் தமிழ்ச்செல்வன் பால முரளி, ஜெயப்பிரகாஷ், மாணிக்கம் திலீபன் மகேந் திரன், மஞ்சநாதன், தமிழ்ச் செல்வன், கோ.வி.ராகவன், பா.அறிவழகன், ரவி, மயிலை குமார் முன்னி லையில் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் கழக கொடியை ஏற்றிவைத்தார்.

தந்தை பெரியாரின் 136ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் பெரியார் பெரும் தொண்டர் சி. செங்குட்டுவன் ஆண்டு தோறும் கழக தோழர் களுக்கு அசைவ விருந்து வழங்குவது வழக்கம் அது போலவே இந்த ஆண்டு அனைவருக்கும் விருந்து கொடுத்து விழாவை நிறைவு செய்தார்.
-விடுதலை,29.9.14

திங்கள், 9 ஜனவரி, 2017

த.பெ.தி.க. தலைமை நிலையச் செயலாளர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தமிழர் தலைவர் முன்னிலையில் தோழர்களுடன் கழகத்தில் இணைந்தார்!




சென்னை, ஜூன் 21- தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைமை நிலையச் செயலாளர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், இன்று (21.6.2014) சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவரை சந்தித்து, திராவிடர் கழகத்தில் தோழர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்ட தோழர்கள் ஓரணியில் இணைந்து பணியாற்றும் நோக்கில், திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொள்வதாகத் தெரிவித்தனர்.

வழக்குரைஞர் குமாரதேவன் அவர்களுடன் த.பெ.தி.க. தோழர்கள் சொ.அன்பு (வடசென்னை மாவட்டத் தலைவர்), வி.ஜனார்த்தனன் (வடசென்னை மாவட்டச் செயலாளர்), கண்ணதாசன் (காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர்),  ரகுநாத் (திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர்), ஜெய்சங்கர் (திருவல்லிக்கேணி துணை அமைப்பாளர்), எருக்கஞ்சேரி தமிழ்ச்செல்வன், ராஜ்குமார், வழக்குரைஞர் காண்டீபன், பாட்சா உள்ளிட்ட த.பெ.தி.க. தோழர்கள் திராவிடர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

முன்னதாக வழக்குரைஞர் சு.குமாரதேவன் திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு முதல் தவணையாக ரூ.10 ஆயிரமும், விடுதலை சந்தாவுக்கான நன்கொடையும் அளித்தார். தோழர் வி.ஜனார்த்தனன் ஈராண்டு விடுதலை சந்தா வழங்கினார்.

திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் நம்பியூர் மு.சென்னியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
-விடுதலை,21.6.14

வெள்ளி, 6 ஜனவரி, 2017

சென்னையில் மனித சங்கிலி -

கருப்புப் பணம்: மத்திய அரசின் தவறான அணுகுமுறையை எதிர்த்து சென்னையில் மனித சங்கிலி - தி.க., தி.மு.க. தோழர்கள் பங்கேற்பு


சென்னை, நவ.25 கடந்த 8.11.2016 அன்று இரவில் மோடியின் மத்திய அரசு கருப்பு பண ஒழிப்புக்கான முயற்சியாக கூறி, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாதவை என்று அறிவித்தது.
மக்களிடையேஅதிகஅளவில் புழக்கத் திலிருந்த ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு அதற்கு மாற்றாக மக்கள் பயன்படுத்தக்கூடிய அளவில் மற்ற ரூபாய் நோட்டுகளை அளிக்கவில்லை. ஆகவே செயற்கையான பொருளாதாரநெருக்கடியைமத்திய அரசு உருவாக்கிவிட்டது. இதைக் கண்டித்து திமுகதலைவர் கலைஞர் மனித சங்கிலிப்போராட்டத்தை அறி வித்தார். திராவிடர் கழகம் மனித சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்கும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்தார்.
சென்னை புரசைவாக்கம் பகுதியில் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் நேற்று (24.11.2016) மாலை 4.00 மணியளவில் கருப்பு பண ஒழிப்பு என்று கூறி பொரு ளாதாரநெருக்கடியைஉருவாக்கி,மக்களை வாட்டிவதைத்துவரும் மத்திய அரசைக் கண்டித்து மனித சங்கிலிப்போராட்டம் நடைபெற்றது.திராவிடர்கழகம்,திரா விடமுன்னேற்றகழகம்மற்றும்பொது மக்கள் பெருந்திரளாக மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசைக்கண்டித்து முழக்கமிட்டார்கள். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மனித சங்கிலிப் போராட்டத்தை தொடங்கிவைத்து, தொடர்ந்து திறந்த வாகனத்தில் சென்று, மனித சங்கிலிப்போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை உற்சாகப்படுத்தினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர்கள் வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார் உள்ளிட்ட திக, திமுக முன்னணியினர் மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
கழகத் துணைத் தலைவர் பேட்டி
செய்தியாளர்களுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அளித்த பேட்டியில் குறிப்பிட்டதாவது:
நரேந்திர மோடி தலைமையில் உள்ள மத்திய பாஜக  ஆட்சி திடீரென்று 500 ரூபாய் நோட்டுகளையும், 1000 ரூபாய் நோட்டுகளையும் செல்லாது என்று அறிவித்தது. மேலோட்டமாக பார்த்த நேரத்தில் இது வரவேற்கத்தக்கதுதான். கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு  சரியான அணுகுமுறைதான் என்று கருத்து தெரிவித்தவர்கள்கூட, பின்னாலே அந்த கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய ஓர் அவசியம் ஏற்பட்டது.  ஏன் அந்த நிலை வந்ததென்றால், அந்த நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, அதனால் ஏற்படுகின்ற கடும் விளைவுகளைப்பற்றி யோசிக்காமல் தொலைநோக்கு பார்வையில்லாமல் அந்த திட்டத்தை அமல் படுத்தியதால், நாட்டு மக்கள் அத்துணை பேருடைய எதிர்ப்பையும், வெறுப்பையும் இந்த மத்திய அரசு தேடிக்கொண்டது. பல லட்சம் கோடி கருப்புப் பணம் உள்ளே வரவேண்டும் என்றால், அல்லது பழைய நோட்டுகள் உள்ளே வரவேண்டும் என்றால், அதற்கு மாற்று ஏற்பாடாக தேவையான அளவுக்குப் பணத்தை மக்களுக்கு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் அறவே இல்லாத காரணத்தாலே, நாட்டிலே ஒரு பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. இன்னும சொல்லப்போனால், உச்சநீதிமன்றமே சொல்லியிருக்கிறது நாட்டிலே கலவரம் ஏற்பட்டுவிடும் என்று. உச்சநீதிமன்றமே சொல்லுகின்ற அளவிற்கு மோடி அரசு அந்த பிரச்சினையிலே ஒரு பெரிய தோல்வியை வீழ்ச்சியை அடைந்திருக்கிறது.
தந்தை பெரியார் சொல்வார், உப்பு நிறைய ஆகிவிட்டது என்று தண்ணீரை ஊற்றுவார்கள். தண்ணீர் அதிகமாகிவிட்டது என்று உப்பை அள்ளிப்போடுவார்கள் என்று சொல்வார்கள். அதைப்போல மோடி அரசு எதையோ செய்துவிட்டு, ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்குபோல இன்று விழித்துக்கொண்டு இருக்கிறது.
இன்றைக்கு ஏழை, எளிய மக்கள் வீதியிலே நின்று கொண்டிருக்கிறார்கள். இதிலே வரவேற்பவர்கள் யார் என்று கேட்டால், அதானி, அம்பானி போன்ற பெரிய பணக்காரர்கள் வரவேற்கிறார்கள். அதேபோல, சினிமாத்துறையிலே இருக்கக்கூடிய இயக்குநர்கள் நடிகர்கள் வரவேற்கிறார்கள். இவர்கள் எல்லாம் உண்மையிலேயே கருப்பு பணத்தை எதிர்க்கக் கூடியவர்களா? என்று கேட்டால், நிச்சயமாக இல்லை. உண்மையிலேயே இவர்களிடத்திலே கருப்பு பணம் குவிந்துகிடக்கிறது.
எதிர்ப்பவர்கள் யார் என்று கேட்டால், அன்றாடங்காய்ச்சிகளாக இருக்கக்கூடிய ஏழை, எளிய  நடுத்தர மக்கள்தான் இதை எதிர்க்கிறார்கள். இதிலிருந்து அதரிக்கின்றவர்கள் யார்? எதிர்க்கின்றவர்கள் யார்? என்பதை கணக்கு போட்டாலேயே மத்திய அரசின் அணுகுமுறை எவ்வளவு பெரிய விபரீதத்தை உண்டாக்கியிருக்கிறது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.
இன்னும் சொல்லப்போனால், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள்கூட, மாற்றான கருத்துகளை எடுத்துச்சொல்லி இருக்கிறார்கள். அருண்ஷோரி போன்றவர்கள், கோவிந்தாச்சார்யா போன்றவர்கள்கூட குறை கூறியுள்ளனர்.
நாடாளுமன்றம் என்பது உயர்ந்த பட்ச ஒரு ஜனநாயக அமைப்பாகும். அந்த அமைப்பிலே எதிர்க்கட்சிகள் இருக்கிறார்கள். ஆளுங்கட்சியினர் இருக்கிறார்கள். மேலவையிலே படித்தவர்கள், பொருளாதார விற்பன்னர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் கேட்கின்ற கேள்விக்கு, மோடி தன் பக்கம் நியாயம் இருக்கிறது என்று சொன்னால், அங்கே பதில் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அவர்களை சந்திக்க பயப்படுகிறார். சந்திப்பதற்கான நியாயமான காரணங்கள் இல்லாத காரணத்தாலே, வீதியிலே போசிக்கொண்டிருக்கிறார்.
இன்றைக்கு பெரும்பான்மையான மக்கள் வீதிக்கு வந்து போராடக்கூடிய ஒரு பெரிய ஆபத்து இருக்கிறது. உண்மையிலே கருப்புப் பணம் என்பது பெரிய பெரிய பணக்காரர்கள் மத்தியில் இருக்கிறதே தவிர, அன்றாடங்காய்ச்சிகள் மத்தியிலே அந்தப்பணம் இல்லை.
ஆகவே, எங்கே கருப்புபணம் இருக்கிறது என்பதை விட்டு விட்டு, வேறு திசையிலே மோடி அரசாங்கம் இன்றைக்கு பயணித்துக்கொண்டிருக்கிறது.
அதனுடையவிளைவுதான், தமிழ்நாட்டிலே வெகு மக்கள் இன்றைக்கு மனித சங்கிலி போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இது தொடக்கம்தான், இதற்கான சரியான தீர்வு கிடைக்கின்றவரை, இந்த நாட்டிலே அடுத்தடுத்த கட்ட போராட்டங்கள் நடைபெறும். கடைசியாக வீதியில் இருக்கின்ற மக்கள் மன்றம்தான் வெற்றி பெறுபவர் என்பதிலே இரண்டு கருத்து இருக்க முடியாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கழகப் பொறுப்பாளர்கள்
கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன்,  மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மாநில மாணவரணி செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், துணை செயலாளர் நா.பார்த்திபன், தொழிலாளரணி செயலாளர் பெ.செல்வராசு, சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை,  பொதுக்குழு உறுப்பினர் வெ.மு.மோகன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, அமைப்பாளர் சி.செங்குட்டுவன்,   சூளைமேடு கோ.வீ.ராகவன், நல்.இராமச்சந்திரன், மயிலை டி.ஆர்.சேதுராமன்,   மயிலை பிரபாகரன், அரும்பாக்கம் சா.தாமோதரன், வடசென்னை மாவட்ட துணை செயலாளர் கி.இராமலிங்கம், இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், செயலாளர் அன்புசெல்வன்,  ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், கலைமணி, புழல்  இளைஞரணி க.ச.கஇரணியன், வழக்குரைஞர் இரவி, பகுத்தறிவாளர் கழகம் தங்க.தனலட்சுமி, செஞ்சி ந.கதிரவன், பெரியார் திடல் சுரேஷ், விமல், ஆனந்த் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
திமுக பொறுப்பாளர்கள்
எழும்பூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன், சென்னை கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் கோ.ஏகப்பன், பகுதி செயலாளர்கள் ஜெ.விஜயக்குமார், சொ.வேலு,  வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வே.மருதன், எல்.சுந்தர்ராஜ், இரா.துலுக்கானம், இ.மொய்தீன், டால்பின்ரவி, தேவநிதி, நாகராஜ், பாபுசேகர், கலையரசன், கவுன்சிலர் களரிமுத்து, மாவட்ட பிரதிநிதி நித்யராஜ், தன்சிங், பகுதி பிரதிநிதி ஜெயராஜ் உள்பட ஏராளமானவர்கள் மனித சங்கிலிப் போராட்டத்தில்   கலந்து கொண்டனர்.
-விடுதலை,25.11.16
Image may contain: 5 people, crowd and outdoorImage may contain: 4 people, crowd and outdoorImage may contain: 3 people, crowd and outdoorImage may contain: 5 people, crowd and outdoorImage may contain: 1 person, outdoor

வெள்ளி, 23 டிசம்பர், 2016

தென் சென்னையில் தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள்

தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று தென் சென்னையில் கீழ்க்கண்டவாறு நிகழ்ச்சிகள் நடைபெற விருக்கின்றன.

காலை 8.00 மணி தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிப்பு,  அண்ணா சாலை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தென்சென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் மாலை அணிவிப்பு.

தலைமைக் கழக நிகழ்ச்சிகள்

காலை 9.00 மணியளவில் சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகிலிருந்து கழகத் தோழர்கள் பெருந்திரளான அளவில் திரண்டு பங்கேற்கும் அமைதி ஊர்வலம்Õ தொடங்கி, சிந்தாதிரிப்பேட்டை வழியே பெரியார் திடல் அடைகிறது.

காலை 10 மணி: பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை யில் உள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவிப்பு: கழக மகளிரணி சார்பில், பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு; திராவிடர் தொழிலாளர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரியார் நூலக வாசகர் வட்டம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கழகத் தலைவர் தலைமையில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்களில் மலர்வளையம் வைத்தல்.

அதனைத் தொடர்ந்து இந்திய நாத்திக சங்கத்தின் ஆந்திர அறிவியல் மாணவர் கழகம் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

காலை 10.30 மணி முதல் பகல் 1 மணிவரை தந்தை பெரியார் நினைவுநாள் சிறப்புக்கூட்டம் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெறுகிறது.
நூல் வெளியீடு

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய உலகத் தலைவர் பெரியார்’- தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு (தொகுதி-4) நூல் வெளியிடப்படுகிறது.
மருத்துவ முகாம்

தந்தை பெரியார் நினைவு நாளை யொட்டி, சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் மணியம்மை மருத்துவ மனையில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி முடிய குருதிக் கொடை முகாம், மகளிர் மார்பகப் பரிசோதனை, கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை, பொது மருத்துவம், தாய்சேய் நலம், நீரிழிவுநோய், கண், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், சிறுநீரகம் பல்வேறு பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள், மருத்துவ சிகிச்சை வழங்கப்பட உள்ளது.

செவ்வாய், 20 டிசம்பர், 2016

செல்வேந்திரன்-புவனேசுவரி இணை ஏற்பு விழா தமிழர் தலைவர் ஆசிரியர் நடத்தி வைத்தார்

-விடுதலை,16.12.16
சென்னை, டிச. 19- தென் சென்னை மாவட்டக் கழக இளைஞரணித் தோழர் கு.செல்வேந்திரன் - மு.புவனேசுவரி வாழ்க்கை இணை ஏற்பு விழா, 15.12.2016 அன்று மாலை 6.30 மணியள வில் சென்னை சைதாப்பேட்டை எஸ்.பி.எஸ். திருமண மண்ட பத்தில் சிறப்பாக நடைபெற் றது.
தென் சென்னை மாவட்டக் கழக இளைஞரணித் துணைத் தலைவர் மு.முகிலன் வரவேற் புரையாற்றினார். தலைமைக் கழக சொற்பொழிவாளர் செ.தமிழ்சாக்ரடீஸ் அறிமுகவுரை வழங்கினார்.
கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மணவிழாவிற்குத் தலைமை வகித்து, மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழி யினை ஏற்கச் செய்து, இணை ஏற்பு நிகழ்வினை நடத்தி வைத்து அறிவுரையாற்றினார்.
தென் சென்னை மாவட்டக் கழகத் தலைவர் இரா.வில்வ நாதன், சென்னை மண்டல கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, கழகப்பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசினர்.
மணவிழாவிற்கு தலைமை வகித்து நடத்தி வைத்த கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்களுக்கு மணமக்கள் குடும்பத்தார் பயனாடை அணி வித்து சிறப்புச் செய்தனர்.
மணமகன் கு.செல்வேந்தி ரன் கழக கொள்கை வழி நடக்க ஊக்கிய அவரது பெற்றோர் சு.பெ.குமார் - நீலாவதி, சகோ தரியார் சாந்தி மற்றும் மண மகள் மு.புவனேசுவரி தாயார் மு.லட்சுமி ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.
மணவிழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த் திய கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு மணமகன் கு.செல்வேந்திரன் பெரு மகிழ்வுடன் பயனாடை அணிவித்து சிறப்பித்தார்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழ கப் பிரச்சார செயலாளர் வழக் குரைஞர் அ.அருள்மொழி மற் றும் கழகப் பொறுப்பாளர்க ளுக்கு மணமக்கள் குடும்பத்தி னர் பயனாடை அணிவித் தனர்.
மணவிணீழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பறை இசை முழக்கத்துடன் குழுமிய கழகத் தோழர்களும், மணமக்கள் குடும்பத்தினர் உற் சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழர் தலைவரை வரவேற் கும் விதமாக சைதை அண்ணா சாலை சந்திப்பிலும், மண விழா மண்டபத்திலும் டிஜிட் டல் பேனர்களும், சாலையின் இருபுறங்களில் கழகக் கொடி களுடன் கூடிய கம்பங்களும் நிறுவப்பட்டிருந்தன.
மண விழாவில் மாநில கழக மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் பொழிசை கண்ணன், சென்னை மண்டல கழக செயலாளர் வி.பன்னீர் செல்வம், கழகப் பொதுக்குழு உறுப்பினர்களான சைதை எம்.பி.பாலு, நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், எண்ணூர் வெ.மு.மோகன், சவுந்தரி நட ராசன், வடசென்னை மாவட் டக் கழகத் தலைவர் வழக்கு ரைஞர் சு.குமாரதேவன், சைதை வள்ளியம்மாள் பாலு, தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர்கள் மயிலை டி.ஆர்.சேதுராமன், சா.தாமோதரன், துணைத் தலைவர் கோ.வீ.இராகவன், சைதை தென்றல், ப.ஆனந்தன், தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் ப.முத்தய்யன், செய லாளர் கரசங்கால் நாத்திகன், முன்னாள் செயலாளர் அனகை ஆறுமுகம், மண்டல கழக இளைஞரணிச் செயலாளர் இர.சிவசாமி, மாவட்டக் கழக இளைஞரணி துணைச் செயலாளர் சுரேசு, தமிழினியன், விடுதலை நகர் சி.ஜெயராமன், மாநில கழக வழக்குரைஞரணி அமைப்பா ளர் ஆ.வீரமர்த்தினி, வழக் குரைஞர் ந.விவேகானந்தன், வழக்குரைஞர் ம.வீ.அருள் மொழி, மாநில கழக மாண வரணி துணை செயலாளர் நா.பார்த்திபன், வடசென்னை மாவட்டக் கழக செயலாளர் தே.ஒளிவண்ணன், துணை செயலாளர் கி.இராமலிங்கம், இளைஞரணி தலைவர் புரசை சு.அன்புச் செல்வன், செய லாளர் தளபதி பாண்டியன், துணைத் தலைவர் மங்களபுரம் பாசுகர், மகளிர் பாசறை செய லாளர் த.மரகதமணி, செஞ்சி ந.கதிரவன், பெரியார்திடல் சுரேசு, வை.கலையரசன், கலை மணி, திருநின்றவூர் அருண், வேப்பம்பட்டு கழகத் தலைவர் சிவ.இரவிச்சந்திரன், செயலா ளர் பட்டாளம் பன்னீர்செல்வம், கும்மிடிப்பூண்டி மாவட்டக் கழக இளைஞரணி செயலாளர் க.ச.க.இரணியன், பொன்னேரி ப.க. தோழர் கே.வினோத், திரா விடர் மகளிர் பாசறை செல்வி, கார்க்காத்தகுடி ஊராட்சி மன் றத்தலைவர் கா.சேகர், மலர் விழி - நெடுங்கிள்ளி, பெரியார் களம் இறைவி, பெரியார் சுய மரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந் தில்குமாரி, கலைத்துறை பொறுப் பாளர் செ.கனகா, வழக்குரை ஞர் ம.வீ. அருள்மொழி, இங் கர்சால் பெரியார் சாக்ரட்டீஸ், புரூனோ, இனியரசன், ஈழ முகிலன், பொறியாளர் ஈ. குமார், புரசை பாலமுருகன், ஆவடி பன்னீர், சூளைமேடு கோ.வீ.ராகவன், சைதை மு.ந. மதியழகன், பெரியார் மாணாக் கன், க.வெண்ணிலா, இ.சீர்த்தி,  கலைமதி, தமிழ்ச்செல்வி, பவானி, ரேவந்த், க.ஆற்றல் அரசி, தமிழீழம், பெரியார் பிஞ்சுகள் ஆ.பிரியவர்சினி, ஆ.ஆதவன், சித்தார்த் புருனோ மற்றும் கழகப் பொறுப்பாளர் களும், தோழர்களும் கலந்து கொண்டனர்.
மணவிழாவில் கழக இளை ஞரணித் தோழர் மு.சண்முகப் பிரியன் இணைப்புரை வழங் கினார். தென் சென்னை மாவட்ட இளைஞரணி செய லாளர் ச.மகேந்திரன் நன்றி கூறினார்.
விடுதலை,19.12.16
விடுதலை,13.12.16

திங்கள், 19 டிசம்பர், 2016

மறைவு-நுங்கம்பாக்கம் என்.கிருஷ்ணமூர்த்தி


தென் சென்னை நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழகத் துணைச் செயலாளர் ல.கி.சரவணனின் தந்தையார் தி.மு.க. செயல் வீரர் ல.என். கிருஷ்ண மூர்த்தி (வயது-78) அவர்கள் 6.12.2016  விடியற் காலை 5 மணியளவில் காலமானார்.   தென் சென்னை சார்பில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்   தலைமையில்  மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் சா.தாமோதரன், அரும்பாக்கம் க.தமிழ்ச்செல்வன், மதுரவாயல்  க.பாலமுரளி, நுங்கம் பாக்கம் பகுதி தலைவர் மு.கோபால், செயலாளர் க.வெற்றிவீரன், கோ.குமாரி மற்றும் பகுதி தி.மு.க.பொறுப்பாளர் நு.வே.மோகன் ஆகியோர் அவரது உடலுக்கு  மாலைவைத்து மரியாதை செலுத் தினர். மாலை 5 மணி அளவில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.

-விடுதலை,10.12.16

வியாழன், 1 டிசம்பர், 2016

நுங்கம்பாக்கம் மா.நடராசன் முதலாமாண்டு நினைவேந்தல்

புரசைவாக்கம், டிச. 1- 26.11.2016 சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் சென்னை  புர சைவாக்கம் பகுதியிலுள்ள ராஜ் பவன் உணவக அரங்கில் தென் சென்னையை சேர்ந்த நுங்கம் பாக்கம் பகுதி கழக துணைத் தலைவரும், அசோக் லேலண்டு திராவிடர் தொழிலாளர் கழக துணைச் செயலாளருமான சுய மரியாதைச் சுடர் மா.நடராசன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பெ. செல்வராசு (மாநில தி.தொ.க.) அவர்கள் தலைமையில் நடை பெற்றது. செ.ர.பார்த்தசாரதி (மாவட்டச் செயலாளர்) வரவேற்புரை யாற்றினார்.
இரா.வில்வநாதன் (மாவட் டத் தலைவர்) அவர்களின் வீர வணக்க உரைக்குப்பின் சுய மரியாதைச் சுடர் மா.நடராசன் அவர்களின் படத்தை திறந்து வைத்து கழக துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் நினைவேந்தல் உரை யாற்றினார்.
சா.தாமோதரன் (துணைச் செயலாளர்), நுங்கம்பாக்கம் வெற்றிவீரன், நா.மதிவாணன், க.தமிழினியன், துரை.ராவ ணன், கோ.தங்கமணி, த.தன லட்சுமி, செ.உமா, க.சுமதி, அரும்பாக்கம் க.தமிழ்ச்செல் வன், புரசை அன் புச் செல்வன் மற்றும் குடும்ப நண்பர்களும் உறவினர்களும் கலந்துகொண் டனர்.
நிகழ்ச்சி முடிவில் மா.நட ராசன் அவர்களின் துணைவி யார்  பத்மாவதி அனைவருக்கும் நன்றி கூறினார.


-விடுதலை,1.12.16

Image may contain: 2 people, people standing and indoor

Image may contain: 4 people, people sitting


-விடுதலை,17.11.16