செவ்வாய், 10 ஜனவரி, 2017

பெரியார் சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை -2014


தந்தை பெரியாரின் 136ஆவது பிறந்த நாளை முன்னிட்டு
தென்சென்னை முழுவதும் இளைஞரணித் தோழர்கள்
பெரியார் சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை





சென்னை, செப். 29_ இருசக்கர வாகனத்தில் சென்று பகுத்தறிவு பகல வன் தந்தை பெரியாரின் சிலைகளுக்கு தென் சென்னை முழுவதும் இளைஞரணி மாணவ ரணி தோழர்கள் மாலை யிட்டு மரியாதை செலுத் தினர். அதன் விவரம் வரு மாறு:_

காலை 9 மணிக்கு சிம்சனில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

10 மணிக்கு பெரியார் திடலில் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியா தையும் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டு இளை ஞரணி தோழர்கள் தனித்தனி வாகனத்தில் தென்சென்னை முழுவதும் சென்று பெரியார் படத் திறப்பு, தகவல் பலகை திறப்பு என்று பெரியார் பிறந்த நாளை வெகு சிறப் பாக கொண்டாடினர்.

முதலாவதாக காலை 11 மணியளவில் அண்ணா மேம்பாலத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.சண்முகப்பிரியன் தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது 11.30 மணியளவில் மயிலை லஸ் கார்னரில் உள்ள தந்தை பெரியார் தகவல் பலகை அருகே பெரியார் உருவப்படத்தை சென்னை மண்டல மாண வரணி செயலாளர் பா. மணியம்மை திறந்து வைத் தார். கழகத்தோழர் விஜய ராசா பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

12 மணியளவில் மந்த வெளி அபிராமபுரம் தந்தை பெரியார் படிப்பகத்தில் மயிலை குமார் அவர்கள் கழக கொடியை ஏற்றி வைத்து தந்தை பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார் படிப்பகம் முகிழன் பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ் வித்தார்.

12.30மணியளவில் மந்தவெளி அ.பக்கிரிசாமி நினைவு பூங்காவில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு இளைஞரணி துனைத் தலைவர் படிப்பகம் முகி ழன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை   செய்யப்பட்டது.

ஒரு மணியளவில் கோட் டூர்புரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள தந்தை பெரியார் தகவல் பலகையையும் கழக கொடியையும் இளைஞ ரணி தலைவர் கு.செல் வேந்திரன் ஏற்றினார் பகுதி மக்களுக்கு இனமான பாடகர் ச.தாஸ் இனிப்பு வழங்கி சிறப்பித்தார்.

1.30 மணியளவில் கோட்டூர்புரம் சித்ரா நகரில் இனமான பாடகர் ச. தாஸ், தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்து கழக கொடியை ஏற்றினார்.

2.00 மணியளவில் சைதாப்பேட்டையில் உள்ள தந்தை பெரியார் பகுத்தறிவு தகவல் பலகை மற்றும் பகுத்தறிவு பகல வன் தந்தை பெரியாரின் உருவப்படத்தை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை திறந்து வைத்தார் பொதுமக்க ளுக்கு கு.செல்வேந்திரன் இனிப்பு வழங்கி சிறப்பித் தார்.

2.30 மணியளவில் சென்னை அசோக் நகரில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு வெங்கடேசன், (தமிழ்நாடு மின்சார வாரி யம்) மாலை அணிவித்து சிறப்பித்தார். அதனை தொடர்ந்து விருகம்பாக் கம் சிம்யாநகர், பெரியார் பெரும் தொண்டர் சி. செங்குட்டுவன் இல்லத் தில் உள்ள கழக கொடியை பெரியார் பெரும் தொண் டர் சி.செங்குட்டுவன் தலைமையில் செ.தமிழ்ச் சாக்ரடீஸ் சென்னை மண் டல இளைஞரணி  செய லாளர், பா.மணியம்மை மண்டல மாணவர் அணி செயலாளர் செ.ர. பார்த்த சாரதி தென்சென்னை மாவட்ட செயலாளர் பெரியார் பெரும்தொண் டர் தங்கவேல், கு.செல் வேந்திரன் தென் சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் மு.சண்முகப் பிரியன் தென் சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர்  தாஸ், வெங்க டேசன் (தமிழ்நாடு மின் சார வாரியம்), க.விஜய ராசா, தாமோதரன், மாரியப்பன், அரும்பாக்கம் தமிழ்ச்செல்வன் பால முரளி, ஜெயப்பிரகாஷ், மாணிக்கம் திலீபன் மகேந் திரன், மஞ்சநாதன், தமிழ்ச் செல்வன், கோ.வி.ராகவன், பா.அறிவழகன், ரவி, மயிலை குமார் முன்னி லையில் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் கழக கொடியை ஏற்றிவைத்தார்.

தந்தை பெரியாரின் 136ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் பெரியார் பெரும் தொண்டர் சி. செங்குட்டுவன் ஆண்டு தோறும் கழக தோழர் களுக்கு அசைவ விருந்து வழங்குவது வழக்கம் அது போலவே இந்த ஆண்டு அனைவருக்கும் விருந்து கொடுத்து விழாவை நிறைவு செய்தார்.
-விடுதலை,29.9.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக