புரசைவாக்கம், டிச. 1- 26.11.2016 சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் சென்னை புர சைவாக்கம் பகுதியிலுள்ள ராஜ் பவன் உணவக அரங்கில் தென் சென்னையை சேர்ந்த நுங்கம் பாக்கம் பகுதி கழக துணைத் தலைவரும், அசோக் லேலண்டு திராவிடர் தொழிலாளர் கழக துணைச் செயலாளருமான சுய மரியாதைச் சுடர் மா.நடராசன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பெ. செல்வராசு (மாநில தி.தொ.க.) அவர்கள் தலைமையில் நடை பெற்றது. செ.ர.பார்த்தசாரதி (மாவட்டச் செயலாளர்) வரவேற்புரை யாற்றினார்.
இரா.வில்வநாதன் (மாவட் டத் தலைவர்) அவர்களின் வீர வணக்க உரைக்குப்பின் சுய மரியாதைச் சுடர் மா.நடராசன் அவர்களின் படத்தை திறந்து வைத்து கழக துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் நினைவேந்தல் உரை யாற்றினார்.
சா.தாமோதரன் (துணைச் செயலாளர்), நுங்கம்பாக்கம் வெற்றிவீரன், நா.மதிவாணன், க.தமிழினியன், துரை.ராவ ணன், கோ.தங்கமணி, த.தன லட்சுமி, செ.உமா, க.சுமதி, அரும்பாக்கம் க.தமிழ்ச்செல் வன், புரசை அன் புச் செல்வன் மற்றும் குடும்ப நண்பர்களும் உறவினர்களும் கலந்துகொண் டனர்.
நிகழ்ச்சி முடிவில் மா.நட ராசன் அவர்களின் துணைவி யார் பத்மாவதி அனைவருக்கும் நன்றி கூறினார.
-விடுதலை,1.12.16
-விடுதலை,17.11.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக