வெள்ளி, 23 டிசம்பர், 2016

தென் சென்னையில் தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள்

தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று தென் சென்னையில் கீழ்க்கண்டவாறு நிகழ்ச்சிகள் நடைபெற விருக்கின்றன.

காலை 8.00 மணி தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிப்பு,  அண்ணா சாலை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தென்சென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் மாலை அணிவிப்பு.

தலைமைக் கழக நிகழ்ச்சிகள்

காலை 9.00 மணியளவில் சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகிலிருந்து கழகத் தோழர்கள் பெருந்திரளான அளவில் திரண்டு பங்கேற்கும் அமைதி ஊர்வலம்Õ தொடங்கி, சிந்தாதிரிப்பேட்டை வழியே பெரியார் திடல் அடைகிறது.

காலை 10 மணி: பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை யில் உள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவிப்பு: கழக மகளிரணி சார்பில், பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு; திராவிடர் தொழிலாளர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரியார் நூலக வாசகர் வட்டம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கழகத் தலைவர் தலைமையில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்களில் மலர்வளையம் வைத்தல்.

அதனைத் தொடர்ந்து இந்திய நாத்திக சங்கத்தின் ஆந்திர அறிவியல் மாணவர் கழகம் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

காலை 10.30 மணி முதல் பகல் 1 மணிவரை தந்தை பெரியார் நினைவுநாள் சிறப்புக்கூட்டம் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெறுகிறது.
நூல் வெளியீடு

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய உலகத் தலைவர் பெரியார்’- தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு (தொகுதி-4) நூல் வெளியிடப்படுகிறது.
மருத்துவ முகாம்

தந்தை பெரியார் நினைவு நாளை யொட்டி, சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் மணியம்மை மருத்துவ மனையில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி முடிய குருதிக் கொடை முகாம், மகளிர் மார்பகப் பரிசோதனை, கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை, பொது மருத்துவம், தாய்சேய் நலம், நீரிழிவுநோய், கண், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், சிறுநீரகம் பல்வேறு பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள், மருத்துவ சிகிச்சை வழங்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக