திங்கள், 9 ஜனவரி, 2017

த.பெ.தி.க. தலைமை நிலையச் செயலாளர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தமிழர் தலைவர் முன்னிலையில் தோழர்களுடன் கழகத்தில் இணைந்தார்!
சென்னை, ஜூன் 21- தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைமை நிலையச் செயலாளர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், இன்று (21.6.2014) சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவரை சந்தித்து, திராவிடர் கழகத்தில் தோழர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்ட தோழர்கள் ஓரணியில் இணைந்து பணியாற்றும் நோக்கில், திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொள்வதாகத் தெரிவித்தனர்.

வழக்குரைஞர் குமாரதேவன் அவர்களுடன் த.பெ.தி.க. தோழர்கள் சொ.அன்பு (வடசென்னை மாவட்டத் தலைவர்), வி.ஜனார்த்தனன் (வடசென்னை மாவட்டச் செயலாளர்), கண்ணதாசன் (காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர்),  ரகுநாத் (திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர்), ஜெய்சங்கர் (திருவல்லிக்கேணி துணை அமைப்பாளர்), எருக்கஞ்சேரி தமிழ்ச்செல்வன், ராஜ்குமார், வழக்குரைஞர் காண்டீபன், பாட்சா உள்ளிட்ட த.பெ.தி.க. தோழர்கள் திராவிடர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

முன்னதாக வழக்குரைஞர் சு.குமாரதேவன் திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு முதல் தவணையாக ரூ.10 ஆயிரமும், விடுதலை சந்தாவுக்கான நன்கொடையும் அளித்தார். தோழர் வி.ஜனார்த்தனன் ஈராண்டு விடுதலை சந்தா வழங்கினார்.

திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் நம்பியூர் மு.சென்னியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
-விடுதலை,21.6.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக