கருப்புப் பணம்: மத்திய அரசின் தவறான அணுகுமுறையை எதிர்த்து சென்னையில் மனித சங்கிலி - தி.க., தி.மு.க. தோழர்கள் பங்கேற்பு
சென்னை, நவ.25 கடந்த 8.11.2016 அன்று இரவில் மோடியின் மத்திய அரசு கருப்பு பண ஒழிப்புக்கான முயற்சியாக கூறி, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாதவை என்று அறிவித்தது.
மக்களிடையேஅதிகஅளவில் புழக்கத் திலிருந்த ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு அதற்கு மாற்றாக மக்கள் பயன்படுத்தக்கூடிய அளவில் மற்ற ரூபாய் நோட்டுகளை அளிக்கவில்லை. ஆகவே செயற்கையான பொருளாதாரநெருக்கடியைமத்திய அரசு உருவாக்கிவிட்டது. இதைக் கண்டித்து திமுகதலைவர் கலைஞர் மனித சங்கிலிப்போராட்டத்தை அறி வித்தார். திராவிடர் கழகம் மனித சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்கும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்தார்.
சென்னை புரசைவாக்கம் பகுதியில் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் நேற்று (24.11.2016) மாலை 4.00 மணியளவில் கருப்பு பண ஒழிப்பு என்று கூறி பொரு ளாதாரநெருக்கடியைஉருவாக்கி,மக்களை வாட்டிவதைத்துவரும் மத்திய அரசைக் கண்டித்து மனித சங்கிலிப்போராட்டம் நடைபெற்றது.திராவிடர்கழகம்,திரா விடமுன்னேற்றகழகம்மற்றும்பொது மக்கள் பெருந்திரளாக மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசைக்கண்டித்து முழக்கமிட்டார்கள். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மனித சங்கிலிப் போராட்டத்தை தொடங்கிவைத்து, தொடர்ந்து திறந்த வாகனத்தில் சென்று, மனித சங்கிலிப்போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை உற்சாகப்படுத்தினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர்கள் வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார் உள்ளிட்ட திக, திமுக முன்னணியினர் மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
கழகத் துணைத் தலைவர் பேட்டி
செய்தியாளர்களுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அளித்த பேட்டியில் குறிப்பிட்டதாவது:
நரேந்திர மோடி தலைமையில் உள்ள மத்திய பாஜக ஆட்சி திடீரென்று 500 ரூபாய் நோட்டுகளையும், 1000 ரூபாய் நோட்டுகளையும் செல்லாது என்று அறிவித்தது. மேலோட்டமாக பார்த்த நேரத்தில் இது வரவேற்கத்தக்கதுதான். கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு சரியான அணுகுமுறைதான் என்று கருத்து தெரிவித்தவர்கள்கூட, பின்னாலே அந்த கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய ஓர் அவசியம் ஏற்பட்டது. ஏன் அந்த நிலை வந்ததென்றால், அந்த நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, அதனால் ஏற்படுகின்ற கடும் விளைவுகளைப்பற்றி யோசிக்காமல் தொலைநோக்கு பார்வையில்லாமல் அந்த திட்டத்தை அமல் படுத்தியதால், நாட்டு மக்கள் அத்துணை பேருடைய எதிர்ப்பையும், வெறுப்பையும் இந்த மத்திய அரசு தேடிக்கொண்டது. பல லட்சம் கோடி கருப்புப் பணம் உள்ளே வரவேண்டும் என்றால், அல்லது பழைய நோட்டுகள் உள்ளே வரவேண்டும் என்றால், அதற்கு மாற்று ஏற்பாடாக தேவையான அளவுக்குப் பணத்தை மக்களுக்கு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் அறவே இல்லாத காரணத்தாலே, நாட்டிலே ஒரு பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. இன்னும சொல்லப்போனால், உச்சநீதிமன்றமே சொல்லியிருக்கிறது நாட்டிலே கலவரம் ஏற்பட்டுவிடும் என்று. உச்சநீதிமன்றமே சொல்லுகின்ற அளவிற்கு மோடி அரசு அந்த பிரச்சினையிலே ஒரு பெரிய தோல்வியை வீழ்ச்சியை அடைந்திருக்கிறது.
தந்தை பெரியார் சொல்வார், உப்பு நிறைய ஆகிவிட்டது என்று தண்ணீரை ஊற்றுவார்கள். தண்ணீர் அதிகமாகிவிட்டது என்று உப்பை அள்ளிப்போடுவார்கள் என்று சொல்வார்கள். அதைப்போல மோடி அரசு எதையோ செய்துவிட்டு, ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்குபோல இன்று விழித்துக்கொண்டு இருக்கிறது.
இன்றைக்கு ஏழை, எளிய மக்கள் வீதியிலே நின்று கொண்டிருக்கிறார்கள். இதிலே வரவேற்பவர்கள் யார் என்று கேட்டால், அதானி, அம்பானி போன்ற பெரிய பணக்காரர்கள் வரவேற்கிறார்கள். அதேபோல, சினிமாத்துறையிலே இருக்கக்கூடிய இயக்குநர்கள் நடிகர்கள் வரவேற்கிறார்கள். இவர்கள் எல்லாம் உண்மையிலேயே கருப்பு பணத்தை எதிர்க்கக் கூடியவர்களா? என்று கேட்டால், நிச்சயமாக இல்லை. உண்மையிலேயே இவர்களிடத்திலே கருப்பு பணம் குவிந்துகிடக்கிறது.
எதிர்ப்பவர்கள் யார் என்று கேட்டால், அன்றாடங்காய்ச்சிகளாக இருக்கக்கூடிய ஏழை, எளிய நடுத்தர மக்கள்தான் இதை எதிர்க்கிறார்கள். இதிலிருந்து அதரிக்கின்றவர்கள் யார்? எதிர்க்கின்றவர்கள் யார்? என்பதை கணக்கு போட்டாலேயே மத்திய அரசின் அணுகுமுறை எவ்வளவு பெரிய விபரீதத்தை உண்டாக்கியிருக்கிறது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.
இன்னும் சொல்லப்போனால், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள்கூட, மாற்றான கருத்துகளை எடுத்துச்சொல்லி இருக்கிறார்கள். அருண்ஷோரி போன்றவர்கள், கோவிந்தாச்சார்யா போன்றவர்கள்கூட குறை கூறியுள்ளனர்.
நாடாளுமன்றம் என்பது உயர்ந்த பட்ச ஒரு ஜனநாயக அமைப்பாகும். அந்த அமைப்பிலே எதிர்க்கட்சிகள் இருக்கிறார்கள். ஆளுங்கட்சியினர் இருக்கிறார்கள். மேலவையிலே படித்தவர்கள், பொருளாதார விற்பன்னர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கேட்கின்ற கேள்விக்கு, மோடி தன் பக்கம் நியாயம் இருக்கிறது என்று சொன்னால், அங்கே பதில் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அவர்களை சந்திக்க பயப்படுகிறார். சந்திப்பதற்கான நியாயமான காரணங்கள் இல்லாத காரணத்தாலே, வீதியிலே போசிக்கொண்டிருக்கிறார்.
இன்றைக்கு பெரும்பான்மையான மக்கள் வீதிக்கு வந்து போராடக்கூடிய ஒரு பெரிய ஆபத்து இருக்கிறது. உண்மையிலே கருப்புப் பணம் என்பது பெரிய பெரிய பணக்காரர்கள் மத்தியில் இருக்கிறதே தவிர, அன்றாடங்காய்ச்சிகள் மத்தியிலே அந்தப்பணம் இல்லை.
ஆகவே, எங்கே கருப்புபணம் இருக்கிறது என்பதை விட்டு விட்டு, வேறு திசையிலே மோடி அரசாங்கம் இன்றைக்கு பயணித்துக்கொண்டிருக்கிறது.
அதனுடையவிளைவுதான், தமிழ்நாட்டிலே வெகு மக்கள் இன்றைக்கு மனித சங்கிலி போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இது தொடக்கம்தான், இதற்கான சரியான தீர்வு கிடைக்கின்றவரை, இந்த நாட்டிலே அடுத்தடுத்த கட்ட போராட்டங்கள் நடைபெறும். கடைசியாக வீதியில் இருக்கின்ற மக்கள் மன்றம்தான் வெற்றி பெறுபவர் என்பதிலே இரண்டு கருத்து இருக்க முடியாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கழகப் பொறுப்பாளர்கள்
கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மாநில மாணவரணி செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், துணை செயலாளர் நா.பார்த்திபன், தொழிலாளரணி செயலாளர் பெ.செல்வராசு, சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை, பொதுக்குழு உறுப்பினர் வெ.மு.மோகன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, அமைப்பாளர் சி.செங்குட்டுவன், சூளைமேடு கோ.வீ.ராகவன், நல்.இராமச்சந்திரன், மயிலை டி.ஆர்.சேதுராமன், மயிலை பிரபாகரன், அரும்பாக்கம் சா.தாமோதரன், வடசென்னை மாவட்ட துணை செயலாளர் கி.இராமலிங்கம், இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், செயலாளர் அன்புசெல்வன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், கலைமணி, புழல் இளைஞரணி க.ச.கஇரணியன், வழக்குரைஞர் இரவி, பகுத்தறிவாளர் கழகம் தங்க.தனலட்சுமி, செஞ்சி ந.கதிரவன், பெரியார் திடல் சுரேஷ், விமல், ஆனந்த் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
திமுக பொறுப்பாளர்கள்
எழும்பூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன், சென்னை கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் கோ.ஏகப்பன், பகுதி செயலாளர்கள் ஜெ.விஜயக்குமார், சொ.வேலு, வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வே.மருதன், எல்.சுந்தர்ராஜ், இரா.துலுக்கானம், இ.மொய்தீன், டால்பின்ரவி, தேவநிதி, நாகராஜ், பாபுசேகர், கலையரசன், கவுன்சிலர் களரிமுத்து, மாவட்ட பிரதிநிதி நித்யராஜ், தன்சிங், பகுதி பிரதிநிதி ஜெயராஜ் உள்பட ஏராளமானவர்கள் மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
-விடுதலை,25.11.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக