வெள்ளி, 13 அக்டோபர், 2017

தமிழ்நாட்டில் மீண்டும் சினிமா நடிகர்கள் கையில் அரசியல் போக வேண்டுமா? தமிழ்நாடெங்கும் துண்டறிக்கை பரப்பரப்பாக விநியோகம்

சென்னை, அக். 13- தமிழ்நாட்டில் மீண் டும் சினிமா நடிகர்கள் கையில் அரசி யல் போக வேண்டுமா? என்ற தமிழர் தலைவர் அறிக்கை தமிழ்நாடெங்கும் துண்டறிக்கையாக விநியோகிக்கப் பட்டது. அதன் விவரம் வருமாறு:
சென்னை
தென் சென்னை மாவட்டக் கழகத் தின் சார்பில் 11.10.2017 நண்பகல் 12.00 மணி அளவில் கோயம்பேடு பேருந்து முனையமும்  பெரியார்- - அண்ணா காய், கனி பேரங்காடி இணையும் இடத்தில் மாவட்டத் துணைத்தலைவர் சி.செங் குட்டுவன் தலைமையில் ''தமிழ்நாட்டு அரசியல் மீண்டும் சினிமா நடிகர்கள் கைகளில் போக வேண்டுமா?'' என்கிற தலைப்பில் வெளியான தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் அறிக்கை துண்டறிக்கையாக வழங்கப்பட்டது. மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் சா.தாமோதரன், சூளைமேடு ந.இராமச்சந்திரன் மற்றும் ஆவடி மாவட்ட தோழர் வேலுச்சாமி ஆகி யோர் துண்டறிக்கைகளை வழங்கினர். பொதுமக்களிடையே பெரும் வரவேற் பிருந்தது.
-விடுதலை,13.10.17













வியாழன், 12 அக்டோபர், 2017

சென்னை மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

15.10.2017 ஞாயிற்றுக்கிழமை

சென்னை மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: மாலை 5 மணி . இடம்: பெரியார் திடல், வேப்பேரி, சென்னை . 

தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) . 

முன்னிலை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவரணி செயலாளர்) மற்றும் மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், மண்டல, இளை ஞரணி,  மாணவரணி செயலாளர்கள் . 

பொருள்: தமிழர்தலைவர் பிறந்தநாள் விழா, விடுதலை சந்தா சேர்ப்பு மற்றும் கழக ஆக்கப் பணிகள், பிரச்சாரங்கள்.

தி.இரா.ரத்தினசாமி        வி.பன்னீர்செல்வம்  (மண்டலத் தலைவர்)         (மண்டலச் செயலாளர்)

வெள்ளி, 6 அக்டோபர், 2017

இரா.முத்துக்குமாரசாமி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல்



தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சியாளருமான இரா.முத்துக்குமாரசாமி அவர்களின் படத்திறப்பு நிகழ்வு பபாசி சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில்  தமிழர் தலைவர் தலைமையேற்று படத்தினை திறந்து வைத்தார். உடன் பபாசி தலைவர் காந்தி கண்ணதாசன், முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி, பபாசி செயலாளர் புகழேந்தி சுப்பையா மற்றும் மறைந்த முத்துக்குமாரசாமி குடும்பத்தினர் உள்ளனர் (சென்னை, 5.10.2017)

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில்

இரா.முத்துக்குமாரசாமி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல்

சென்னை, அக்.6 திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சியாளரும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் மேனாள் தலைவருமாகிய இரா.முத்துக்குமாரசாமி  அவர்கள் 80ஆவது வயதில் சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் உள்ள தம்முடைய இல் லத்தில் 15.8.2017 அன்று அதிகாலை யில் காலமானார். அவர் மறைந்த தக வல் கிடைத்ததும், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சென்று மலர்மாலைவைத்து மரியாதை செலுத்தி இரங்கல் அறிக்கை வெளியிட்டார்.

தென்னிந்திய புத்தக விற்பனையா ளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் மறைந்த இரா.முத்துக்குமார சாமி படத்திறப்பு மற்றும் நினைவேந் தல் நிகழ்வு சென்னை அண்ணாசாலை ஆனந்த் திரையரங்க வளாகத்தில் உமாபதி அரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலை மையில் நேற்று (5.10.2017) மாலை நடைபெற்றது.

தமிழர் தலைவர்

நினை வேந்தல் உரை

இரா.முத்துக்குமாரசாமியின் படத்தைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் நினைவேந்தல் உரையாற்றினார்.

தந்தைபெரியாரும், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சுப்பையாவும் கொள்கையில் இரு துருவங்களாக இருந்தாலும் நட்புடன் இருந்தவர்கள்.

இங்கே பேசிய மீனாட்சி சோமசுந் தரத்தின் தந்தை எனக்கு விடுதி தோழர் ஆவார். அப்போது எனக்கு வானொலி யில் தனிப்பெயர் வைத்திருந்தார்கள்.

பதிப்பகத்துறையில் விழுதுகள் ஆல மரத்தை தாங்குவதுபோல், வாழையடி வாழையாக பிள்ளைகளும் வருகிறார்கள். சட்டக்கல்லூரியில் நாங்கள் படித்தபோது பவழக்கார தெருவில் உள்ள மாணவர்களுக்கான யுனிவர்சிட்டி மாணவர்கள் கிளப்புக்கு வருவோம். அந்த பகுதியில் இயங்கிய திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்பகத்தின் மு.வ. எழுதிய திருக்குறள் தெளிவுரை புத்தக வரலாற்றில் புரட்சி படைத்தது. அதேபோல்,   அந்த பதிப்பகத்தால்தான் மறைமலையடிகள் நூல்கள்     கிடைத்தன. அறிவைவிட பண்பாடு முக்கியம்.

'அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண் பில்லா தவர்

எனும் குறளின்படி, மக்கள் பண்பு என்பது மனிதம்.

அத்தகைய பண்பாளராக முத்துக் குமாரசாமி விளங்கினார்.

திராவிடப் பெருந்தகை சர் பிட்டி தியாகராயர்குறித்த நூல், தென்னிந்திய நல உரிமை சங்கம், ஜஸ்டிஸ் கட்சி 50 ஆண்டு கால வரலாறு என்கிற நூல் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டது. அந்நூலை எழுதி யவர் குமாரசாமி என்று குறிப்பிடப்பட் டிருந்தது.

திராவிடப் பெருந்தகை சர் பிட்டி தியாகராயர்குறித்த நூல் திருநெல் வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் சார்பில் முன்பு வெளியிடப்பட்டது. மறுபதிப்புக்காக நாங் கள் முத்துக்குமாரசாமி அவர்களுக்கு கடிதம் எழுதினோம். அவரும் அதற்கு பதில் கடிதம் எழுதி மறுபதிப்பு செய் யும் உரிமையை அளித்தார்.

பதிப்பகத்தாரிடம் புத்தகங்கள் வெளியிடுவதில் அறிவு நாணயம் அவசியம் இருக்க வேண்டும். எப் போதோ வெளியிடப்பட்டவையாக இருந்தாலும் மறுபதிப்பு செய்யும் போது அதிலும் அறிவு நாணயம் இருக்கவேண்டும்.

திராவிடர் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இரண்டு கழகங்களும் தமிழ் மொழி, இன வளர்ச்சிக்காக பாடுபட்டுவரு பவையாகும்.

Ôநவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்புÕ என்ப தற்கேற்ப நூல்கள் படிக்க படிக்க சுவை கூடுவதுபோல், முத்துக்குமார சாமி பண்பாளராக திகழ்ந்தவர்.

அறிஞர்கள் எழுதினாலும், அதை பதிப்பகங்கள்தான் பரப்புகின்ற பணியை செய்கின்றன.

முத்துக்குமாரசாமி அவர்களின் தொண்டறம் சிறப்பானது. அவர் மனி தருள் மாமனிதராவார்

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்கள் நினைவேந்தல் உரையில் குறிப்பிட்டார்கள்.

உரையாற்றியவர்கள்

தென்னிந்திய புத்தக விற்பனையா ளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலை வர் காந்தி கண்ணதாசன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி, ஓய்வு பெற்ற தமிழக மொழிபெயர்ப்புத்துறை துணை இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணியன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க செயலாளர் புகழேந்தி சுப்பையா ஆகியோர் முன்னிலையேற்று நினைவேந்தல் உரையாற்றினார்கள்.

மூத்த பதிப்பாளர் அகிலன் கண் ணன், தென்னிந்திய புத்தக விற்பனை யாளர் மற்றும் பதிப்பாளர் சங்க மேனாள் தலைவரும், மணிவாசகர் பதிப்பக மெய்யப்பன் மகனுமாகிய மீனாட்சி சோமசுந்தரம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப் பாளர் சங்கப் பொருளாளர் எமரால்டு கோ.ஒளிவண்ணன்   உள்ளிட்டவர்கள் தமிழறிஞர் இரா.முத்துக்குமாரசாமி அவர்களுடனான தங்களுடைய நினை வுகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.

இரா.முத்துக்குமாரசாமி அவர்கள்  50ஆயிரம் நூல்களை படித்தவராக,  மறைமலையடிகள் நூலகத்தில் நூலகராக, ஆய்வாளராக, எழுத்தாளராக, செந்தமிழ்செல்வி இத ழின் ஆசிரியராக, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சியாளராக, பதிப்பகத்துறையில் முத்திரை பதித்தவராக, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப் பாளர் சங்கத் தலைவராக, உலகத் தமிழ் மாநாடுகளில் பங்களிப்பை செலுத்தியவரும்,  செம்மொழி மாநாட் டில் உறுதுணையாக விளங்கியவரும், அய்.ஏ.ஆர்.டி  செயலாளராக தமிழ் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர் முத்துக்குமாரசாமி. 2004ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் Ôதிருவள்ளுவர் விருதுÕ பெற்ற அவருடைய தொண்ட றம் குறித்து நினைவேந்தல் உரையாற் றியவர்கள் குறிப்பிட்டார்கள்.

காந்தளகம் பதிப்பகம் சசிரேகா இணைப்புரை வழங்கினார். இரா.முத்துக்குமாரசாமி மகனும், திருநெல் வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் செயல் இயக்குநருமாகிய சுப்பையா நன்றி கூறினார்.

கலந்துகொண்டோர்

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன்,   செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கோ.வீ. ராகவன், சா.தாமோதரன், புலவர் பா. வீரமணி, விழிகள் நடராசன், முத்து வேல் மற்றும் தமிழறிஞர்கள், எழுத் தாளர்கள், பதிப்பகத்தார் உள்பட பலர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

-விடுதலை, 6.10.17

புதன், 4 அக்டோபர், 2017

தென் சென்னை மாவட்டம் முழுவதும் தந்தை பெரியார் பிறந்த நாள் வாகனப் பிரச்சார ஊர்வலம்

சென்னை, அக். 4- தென் சென்னை மாவட்ட வாகனப் பிரச்சார பயணம்17.09.2017 காலை 7மணி அளவில் தரமணி தந்தை பெரியார் நகர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி நினைவு மன்றத்தின் வாயிலிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, தொடங்கியது.
கானகம், அடையாறு, சின்னமலை, சைதாப்பேட்டை, சி.அய்.டி.நகர் வழியாக தியாகராயர்நகர் தந்தை பெரியார் சிலையை அடைந்தது. அங்கிருந்து புறப்பட்டு பர்கிட் சாலை, செவாலியர் சிவாஜி சாலை, தேனாம் பேட்டை, ஆயிரம் விளக்கு, அண்ணா சாலை வழியாக சிம்சன் பெரியார் சிலையை அடைந்தது. அங்கிருந்து புறப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர் வழியாக சேத்துப்பட்டு அடைந்தது. அங்கிருந்து புறப்பட்டு பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை வழியாக பெரியார் திடல் அடைந்தது. பிறகு  அங்கிருந்து புறப்பட்டு எழும் பூர், புதுப்பேட்டை திருவல்லிக்கேணி, அய்ஸ் அவுஸ் வழியாக மயிலாப்பூர் சென்று, அங்கிருந்து புறப்பட்டு திருவல்லிக்கேணி நடுக் குப்பத்தில் முடிவுற்றது.
தரமணி தந்தை பெரியார் நகர்


காலை 7.00 மணிக்கு தரமணி பெரியார் நகரிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு தரமணி மஞ்சநாதன் தலை மையில் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் முன்னிலையில் மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் மாலை அணி வித்தார். ஏ.வி.பி.ஆசைத்தம்பி நினைவு மன்ற பொறுப் பாளர்கள் ஜி.கண்ணன், ஆர்.சிவா, மன்ற செயலாளர் டி.சேகர்,, கு.சுப்பிரமணி, தி.மு.க. பகுதி தொண்டரணி அமைப்பாளர் அமைப்பாளர் என்.வரதன், ச.சந்தோஷ், ர.ராஜேஷ்  மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித் தனர். அங்கு அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கினர்.
தியாகராயர் நகர்


காலை 8 .10 மணிக்கு தியாகராயர் நகர் அடைந்து. தந்தை பெரியார் சிலைக்கு பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.பாலு தலைமையில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்  மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைத்தலைவர் டி.ஆர்.சேதுராமன் முன்னிலை யிலும் அமைப்பாளர் மு.ந.மதியழகன் மாலை அணி வித்தார். மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், அய்ஸ் அவுஸ் அன்பு, இளைஞரணி தலைவர்  செ.தமிழ் சாக்ரடீசு, துணைத் தலைவர் மு.முகிலன், துணைச் செயலாளர் இரா.பிரபாகரன், மு.சண் முகப்பிரியன், ஈ.குமார், ச.தாஸ், ந.மணித்துரை, ச.சந் தோஷ், ர.ராஜேஷ், இர.மோகன்,புஷ்பராஜ், பூபதி, தன பாலன், பி.சீனிவாசன் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். அங்கிருந்து புறப்பட்டு முற்பகல் 8.45 மணிக்கு சிம்சன் பெரியார் சிலையை அடைந்தது.
சிம்சன் பெரியார் சிலை


முற்பகல் 9.15 மணிக்கு சிம்சன் பெரியார் சிலைக்கு தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் வடசென்னை மாவட்டத் தலைவர் சு.குமார தேவன் அவர்கள் மாலை அணிவித்தார்.மாவட்ட செய லாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத்தலைவர் டி.ஆர்.சேது ராமன், அமைப்பாளர் மு.ந.மதியழகன்,. மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், அய்ஸ் அவுஸ் அன்பு, இளைஞரணி தலைவர்  செ.தமிழ் சாக்ரடீசு, துணைத் தலைவர் மு.முகிலன், துணைச் செயலாளர் இரா.பிரபாகரன், மு.சண்முகப் பிரியன், ஈ.குமார், ச.தாஸ், ந.இராமச்சந்திரன்,, ந.மணித் துரை, ச.சந்தோஷ், ர.ராஜேஷ், இர.மோகன்,புஷ்பராஜ், பூபதி, தனபாலன், பி.சீனிவாசன் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர்.
சேத்துப்பட்டு


முற்பகல் 9.45 மணிக்கு  வடசென்னை மாவட்டத் தலைவர் சு.குமாரதேவன் தலைமையில் சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு   தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அவர்களும், டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன் மற்றும் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் மற்றும் பகுதி பொறுப்பாளர் அ.பாபு ஆகியோர் முன்னி லையில்  மாலை அணிவித்தனர்,  அமைப்பாளர் மு.ந. மதியழகன், துணைச் செயலாளர்  சா.தாமோதரன், அய்ஸ் அவுஸ் அன்பு, இளைஞரணி தலைவர்  செ.தமிழ் சாக்ரடீசு, துணைத் தலைவர்
மு.முகிலன், துணைச் செயலாளர் இரா.பிரபாகரன், மு.சண்முகப்பிரியன், ஈ.குமார், ச.தாஸ், ந.இராமச் சந்திரன், ந.மணித் துரை, ச.சந்தோஷ், ர.ராஜேஷ், இர.மோகன், புஷ்பராஜ், பூபதி, தனபாலன், பி.சீனிவாசன் மற்றும் வட சென்னை மாவட்டத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அங்கிருந்து புறப்பட்டு பெரியார் நெடுஞ்சாலை வழியாக பெரியார் திடல் அடைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு முற்பகல் 11.30க்கு புறப்பட்டு,
மயிலாப்பூர் -கச்சேரி சாலை,
மயிலை ரயில் நிலையம்


12 மணிக்கு தென் சென்னை மாவட்டம், மயிலாப்பூர் கச்சேரி சாலை அருண்டேல் தெரு சந்திப்பில் பொறியாளர் ஈ.குமார் தலைமையில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்,
அடுத்ததாக மயிலை ரயில் நிலையம் அருகில் இளை ஞரணித் தோழர் க.விஜயராஜா தலைமையில் கழகப் பொதுச் செயலாளர் கழகக்கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் முன்னிலை வகித்தார். செ.ரா.பார்த்தசாரதி, தாமோதரன், ராகவன், டி.ஆர்.சேது ராமன், தமிழ் செல்வன், மணித்துரை, மு.சண்முகப்பிரியன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். பொதுச் செயலாளருக்கு சால்வை அணிவித்து சிறப்புச் செய்யப் பட்டது.
திருவல்லிக்கேணி - நடுக்குப்பம்


திருவல்லிக்கேணி - நடுக்குப்பம் சென்றடைந்து நண் பகல் 1.30மணிக்கு இளைஞரணி செயலாளர் ச.மகேந் திரன் இல்லம் அருகில் இளைஞரணியினரால் அமைக்கப் பட்டிருந்த தந்தை பெரியார் படத்திற்கு இளைஞரணி தலைவர் செ.தமிழ்சாக்ரடீசு தலைமையில் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், முன்னிலையில் மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் மாலை அணிவித்தார். இனிப்பு வழங்கப்பட்டது. துணைச் செயலாளர்
சா.தாமோதரன், இளைஞரணி துணைத் தலைவர்
மு.முகிலன், ச.தாஸ், கு.செல்வேந்திரன், க.தமிழ் செல் வன், தே.ஒளிவண்ணன், ந.மணித்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நுங்கம்பாக்கம்
காலை 6 மணிக்கு மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்த சாரதி இல்லம் எதிரில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப் பட்டது.
சூளைமேடு
பிற்பகல் 4..00 மணிக்கு சூளைமேடு ஆத்ரேயா நகரில், தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து ந. இராமச்சந்திரன் இனிப்பு (லட்டு) வழங்கி மகிழ்ச் சியாக கொண்டாடினார். தோழர்கள் கலந்து கொண்டனர்.
நொச்சிக்குப்பம் (கடற்கரை):
பிற்பகல் 4.30. மணிக்கு நொச்சிக் குப்பம் (கடற்கரை) பகுதியில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் முன்னிலை யில் இளைஞரணி துணைச் செயலாளர் இரா.பிரபாகரன் அவர்களால் 150 பேருக்கு இனிப்பு வழங்கப்பட்டு பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடினர். வி.வளர்மதி, பி.அஜந்தா, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி மற்றும் பல தோழர்கள் கலந்துகொண்டனர்.
தென்சென்னையில் பல இடங்களில் தந்தை பெரியார் படத்தை வைத்து மாலை அணிவித்தும், ஒலி பெருக்கி வைத்து கொள்கை பாடல்கள் ஒலிபரப்பியும், இனிப்பு வழங்கியும் பிறந்தநாள் விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.



- விடுதலை 4.10.17



























திங்கள், 2 அக்டோபர், 2017

தமிழக உரிமைகளை மீட்கக் கோரி தென்சென்னையில் தொடர் பிரச்சாரக் கூட்டம்

சென்னை, ஆக.2 வஞ்சிக்கப் படும் தமிழ்நாட்டின் உரிமை களை மீட்கக் கோரி மாபெரும் தொடர் பிரச்சார திட்டம் தென் சென்னை இளைஞரணி கலந் துரையாடல் கூட்டம் 17.7.2017 மாலை 6 மணிக்கு துரை சக்ர வர்த்தி அரங்கில் நடைபெற்றது.
தொடக்கத்தில் திருமலை கடவுள் மறுப்பு கூறியதை அடுத்து, மாவட்ட இளைஞரணி தலைவர் செ.தமிழ்சாக்ரடீஸ் வர வேற்புரையாற்றி, கூட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார் தொடர்ந்து தோழர்கள் கோபி, சி.பரசுராமன், சேத்துப்பட்டு பாபு, கு.செல்வேந்திரன், ச. மகேந்திரன், மாவட்ட தலைவர்  இரா.வில்வநாதன், மாநில இளைஞரணி துணைசெயலாளர் க.கண்ணன், மண்டல செய லாளர் வி.பன்னீர்செல்வம் ஆகி யோர் கருத்துரை வழங்கியதை தொடர்ந்து, நிகழ்ச்சிக்கு முன் னிலை ஏற்ற கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர் கள் தென் சென்னை இளைஞ ரணிக்கான வளர்ச்சி பணிபற்றி யும் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனைகளையும் அதன் முதல்கட்டமாக தென்சென்னை பகுதிகள் முழுவதும் வஞ்சிக் கப்படும் தமிழ்நாட்டின் உரிமை களை மீட்கக்கோரி தொடர் பிரச்சாரக் கூட்டங்களை நடத் துவதற்கான திட்டங்களை வழங்கினார்.
தொடர் கூட்டங்கள்
சைதாப்பேட்டை - செல் வேந்திரன்
5.8.2017 கோயம்பேடு -  செங்குட்டுவன்
திருவல்லிகேணி -  மகேந் திரன்
12.8.2017 எம்எம்டிஏ -  ராமச்சந்திரன்
18.8.2017 நுங்கம்பாக்கம் ரயிலடி -  பார்த்தசாரதி
மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் -- பொறியாளர் ஈ.குமார்
23.8.2017 திருவள்ளுவர்சாலை தேனாம்பேட்டை - விடுதலை பாஸ்கர்
30.8.2017 மந்தைவெளி -  முகிலன்
2.9.2017 அடையார் தொலை தொடர்பகம் - அண்ணாதுரை
26.8.2017 கோட்டூர் மார்கெட் -  தாஸ்
6.9.2017 ஆர்.ஏ.புரம் -  சிவக்குமார்
9.9.2017 லாய்ட்ஸ் ரோடு ராயப்பேட்டை -  பிரபாகர்
ஆகிய இடங்களில் முதல் கட்டமாக பிரச்சார கூட்டங்கள் நடத்துவதற்கான ஆலோசனை களை வழங்கிஉரையாற்றினார். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் உரையில், தமிழ்நாட்டில் சூழ்ந்துள்ள இந்துத்துவ மதவாத போக்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இளைஞரணியினர் தங்கள் செயல் திட்டங்களை வகுத்துக்கொள்ள வலியுறுத் தினார்.
பொறியாளர் ஈ.குமார் கூட் டத்தின் தீர்மானங்களையும் சேத்துப்பட்டு கூட்டத்தின் வரவு செலவு கணக்குகளையும் படித் தார்.
இறுதியாக முகிலன் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது. கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் கோவி.ராகவன், சா.தாமோதரன், கோ.முத்து, கோவி.அரவிந்த், சிற்றரசு வி.சி. வில்வம், பே.உமா மகேஸ்வரி, வடசென்னை மாவட்ட செய லாளர் தே.ஒளிவண்ணன் உள் ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
-விடுதலை,2.8.17

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

தமிழ்நாடு காங்.தலைவர் சு.திருநாவுக்கரசர் பொதுவாழ்வுப் பொன்விழாவில் தமிழர் தலைவர் உரை




சென்னை, ஜூலை 14  சமூகநீதி, மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி உரிமை என்கிற ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவேண்டிய காலகட்டத்தில், அவசியத்தில் நாம் இருக்கிறோம்; ஒன்று சேர்ந்து போராடுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை காமராசர் அரங்கத்தில் நேற்று (13.7.2017) நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரசு கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசரின் பொதுவாழ்வுப் பொன்விழாவில் பங்கேற்று சு.திருநாவுக்கரசர்பற்றிய நூலினை வெளி யிட்டு திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அவரது உரை வருமாறு: 

சிறப்பாக நடைபெறக்கூடிய அருமை நண்பர் அரசியலிலே பொன் விழா காணுகின்றவர்.

மிக அற்புதமான நட்புக்குரிய நண்பர் என்று அனைவராலும் மதிக்கப்படக் கூடிய தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவர் அருமை நண்பர் திருநாவுக்கரசர் அவர்களுடைய பிறந்தநாள் பெருவிழா, பொதுவாழ்வில் பொன்விழா ஆகிய அற்புதமான நிகழ்ச்சிக்கு தலைமையேற்றிருக்கக்கூடிய பாட்டாளிகளின் தோழரும், எளிமையின் இலக்கணமும், தமிழகத்தினுடைய மூத்த தலைவராக கலைஞர் அவர்களுக்கு அடுத்தபடியாக திகழ்ந்து கொண்டிருக்கக்கூடியவருமான அன்பிற்குரிய தோழர் நல்லக்கண்ணு அவர்களே, தமிழகத்தினுடைய நம்பிக்கையாக, தமிழ்நாட்டினுடைய தற்போதைய நிலைகளுக்கெல்லாம் ஒரு விடியலாக வந்திருக்கக்கூடிய தமிழகத்தின் ஒப்பற்ற எதிர்க்கட்சித் தலைவர், திமுக செயல் தலைவர் அருமைச்சகோதரர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களே, இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து மலரை வெளியிட்டிருக்கக்கூடிய அன்பிற்குரிய புதுவை மாநில ஜனநாயகப்போராளி, முதல்வர் என்பது இரண்டாவது, ஜனநாயகப்போராளி என்ற பெருமையை இன்றைக்கும் பெற்றிருக்கக்கூடிய மாண்புமிகு வி.நாராயணசாமி அவர்களே, அனைத்து இயக்கங்களைச்சார்ந்த, கட்சி களின் தலைவர்களே, சான்றோர்களே, காங்கிரசு பேரியக்கத்தின் அனைத்து முக்கியப் பொறுப்பாளர்களே, தாய்மார்களே, நண்பர்களே, தோழர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.

இங்கே வரவேற்புரையாற்றிய அருமை நண்பர் விசுவநாதன் சுட்டிக்காட்டினார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எப்படி ஒரு வாக்கியத்தை தோழர் திருநாவுக்கரசருக்கு சொன்னார்கள் என்பதை சிறப்பாக எடுத்து சுட்டிக்காட்டினார்.

‘‘ஜனக்கட்டு’’ உடையவர்
என்றைக்கும் மக்களோடு இருக்கக்கூடிய ஒரு மக்கள் தொண்டனாக, தோழனாக பணியாற்றக்கூடியவராக, தலைவராக திகழக்கூடிய ஒருவர் என்ற பெருமை இருக்கிறதே, இதுதான் எளிதில் எவரும் சம்பாதிக்க முடியாத ஒன்றாகும். அதிலே அவர் தனித்தன்மையோடு இருக்கக்கூடியவர்.

அறந்தாங்கியானாலும், புதுக்கோட்டை மாவட்ட மானாலும், அங்கே கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொதுவாழ்க்கையிலே நேசிக்கப்படக்கூடிய தோழர் அருமை திருநாவுக்கரசர் ஆவார். அங்கே எந்தக் கட்சிக்காரராக இருந்தாலும், எந்த இயக்கத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர்களின் இல்லங்களில் நல்ல நிகழ்ச்சியாக இருந்தாலும், துயர நிகழ்ச்சியாக இருந்தாலும் அது எத்துணை மாதங்களானாலும் அவர்கள் வீட்டுக்குச் சென்று தொடர்பு வைத்துக்கொண்டிருக்கிற ஓர் எடுத்துக்காட்டான தலைவர் என்று சொன்னால், அவர் தோழர் திருநாவுக்கரசர் ஆவார்.

மாணவர் பருவத்திலேயே  திராவிடர் இயக்கம்

அவர் மாணவப் பருவத்திலேயே திராவிட இயக்கத்திலேயே இருந்து வளர்க்கப்பட்டவர். காங்கிரசு பேரியக்கத்தில் நமக்கு ஒன்றும் பெரியஅளவில் கருத்துப்போர் கிடையாது. ஆனால், அவரை திராவிட இயக்கம்தான் வளர்த்து காங்கிரசு இயக்கத்துக்கு தந்திருக்கிறது. விவசாயத்திலே ஒரு புதுமையான கண்டுபிடிப்பு உண்டு. விதைகளாக வைத்து, செடிகளாக வைத்து நடுவது என்பது ஒரு முறை, மரங்களையே அப்படியே பெயர்த்து எடுத்து வைப்பது இன்னொரு முறை. திருநாவுக்கரசர் இரண்டாவது முறையைச் சார்ந்தவர். திராவிட இயக்க மண்ணிலிருந்து, திராவிட இயக்கத்தாலே வளர்ந்த காரணத்தாலேதான் அவர்களுக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று சொன்ன அண்ணாவினுடைய குணம் உண்டு. எனவேதான், அவர் திராவிட இயக்கத்துக்கும், தேசிய இயக்கத்துக்கும் முரண்பாடல்ல,  உறவுப்பாலம் உண்டு. அதுவும் இந்த காலகட்டத்திலே, இன்றைக்கு தோன்றியிருக்கிற சங்கடமான மிகப்பெரிய அளவில், மதசார்பின்மைக்கு அறைகூவல், சமூக நீதிக்கு அறைகூவல், மாநிலங்களின் உரிமைகளுக்கு அறைகூவல், ஆளுநர்களே உரிமைகளைப் பறிக்கக் கூடிய அளவிற்கு அறைகூவல். அதற்கு புதுவையைவிட நல்ல உதாரணம் வேறு கிடையாது. நாம் அதைப்பற்றி பேசவேண்டிய அவசியத்தில் - தமிழ்நாட்டில் ஆளுநரே இல்லை. பல காலம் ஆளுநரால் பிரச்சினை இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஆளுநரே பொறுப்பு ஆளுநர். பொறுப்பில்லாத பல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கெல்லாம் அவரைத் தேடிக்கொண்டு போவார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் சந்திக்க வேண்டும் என்றால்கூட, மும்பைக்குப்போய்த்தான் சந்திக்கிறார்கள். எனவே, அதைக் கேட்பதற்குக்கூட உரிமை இல்லை.

போர்த் தளபதிகள் கூடியிருக்கின்றனர்
இந்தக் காலக்கட்டத்திலேதான் இந்த மேடையிலே இருக்கிற அனைவரும் திருநாவுக்கரசரை பாராட்டுவதற்காக, அவரது பொன்விழாவைக் கொண்டாடுவதற்காக, அல்லது நாமெல்லாம் ஒன்றாக இருக்கிறோம் என்று காட்டுவதற்காக என்பதல்ல, ஜனநாயக உரிமைக்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்தை எதிர்த்துப் போரிடுகின்ற போர் வீரர்கள். போர்த் தளபதிகள். இதிலே எல்லோரும் சேர்ந்திருக்கிறார்கள்.  இதிலே கட்சியில்லை, கருத்து மாறுபாடுகள் இல்லை. இதைக்காட்டுக¤ன்ற விழாவாக இந்த விழா இருக்கிறது.

எனவேதான், நல்ல தளபதிகள் இங்கே அமர்ந்தி ருக்கிறார்கள். நடக்கக்கூடிய போரில் வெல்வோம், வெல்வோம். இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

விழாவில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், புதுவை முதல்வர் வி.நாராயணசாமி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜி.இராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, காங்கிரசு கட்சி முதுபெரும் தலைவர் குமரிஅனந்தன், திராவிடர்கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்,  ஆதித்தமிழர் கட்சித் தலைவர் ஜக்கய்யன் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள்.
பொன் விழா காணும் திருநாவுக்கரசர்பற்றிய நூலினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ராமசாமி பெற்றுக்கொண்டார்.

உடன் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், புதுவை முதலமைச்சர் நாராயணசாமி, கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, விழா நாயகர் சு.திருநாவுக்கரசர் (13.7.2017)
-விடுதலை,14.7.17

தந்தை பெரியார் 139ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பெரியார் திடல் நிகழ்ச்சிகளில் திரளான தோழர்கள் பங்கேற்றபு



சென்னை, செப். 27 தந்தை பெரியார் 139ஆம் ஆண்டு பிறந்த நாள்(17.9.2017) முன்னிட்டு, சென்னை, பெரியார் திடலில் பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடை பெற்றன. பங்கேற்ற தோழர்கள் விவரம் வருமாறு:
வடசென்னை
வழக்குரைஞர் சு.குமாரதேவன், தே.ஒளிவண்ணன், கி.இராமலிங்கம், சி.பாசுகர், சி.இரகுபதி, நா.பார்த்திபன், கருங்குழி கண்ணன், சொ.அன்பு, கோ.கதிரவன், கோ.தங்கமணி, தி.செ.கணேசன், மங்களபுரம் பாசுகர், மாடசாமி, வ.கலைச் செல்வன், ச.சிற்றரசு, வ.தமிழ்ச்செல்வன், தே.செ.கோபால், தா.கருத்தோவியன், ச.முகிலரசு, டிஜி.அரசு, அன்புச்செல்வன், பா.கோபாலகிருட்டிணன், து.தியாகராசன், கு.சவுந்தர்ராசன், வி.ஜெனார்த்தனம், அ.தமிழ்தாசன்,  பிரபாகரன், வே.வாசு
தென்சென்னை
இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, மு.ந.மதியழகன், டி.ஆர்.சேதுராமன், எம்.பி.பாலு, செ.தமிழ்சாக்ரட்டீஸ், சி.செங் குட்டுவன், கோ.வீ.ராகவன், சா.தாமோ தரன், க.தமிழ்ச்செல்வன், ச.மகேந்திரன், சைதை தென்றல், மு.சண்முகப்பிரியன், கோ.மஞ்சநாதன், க.வெற்றிவீரன், ச.சந் தோஷ், பி.சீனிவாசன், ந.முகிலன், ந.இராமச்சந்திரன், அ.பாபு, ஏழுமலை, அய்ஸ் அவுஸ் அன்பு, மாரியப்பன், சேது, க.விஜயராஜா, ச.தாஸ், இர.குமார், ந.மணித்துரை, மு.திருமலை, பரசுராமன், பெரியார் சேகர், ச.துணைவேந்தன், மு.கோ பால், ச.அருண்குமார்
தாம்பரம் மாவட்டம்
தி.இரா.இரத்தினசாமி, ப.முத்தையன், கோ.நாத்திகன், ஆ.இர.சிவசாமி, சு.மோகன் ராஜ், ஆர்.டி.வீரபத்திரன், பொழிசை க.கண் ணன், சா.கமலக்கண்ணன், மு.மணிமாறன், சோமசுந்தரம், வழக்குரைஞர்அருணாசலம், குரோம்பேட்டை சட்டநாதன், மா.குண சேகரன், சீ.லட்சுமிபதி,  பி.சீனிவாசன், பி.சி.ஜெயராமன், ஜெ.குமார், கு.பிரீத்தி, ஜெ.இன்பவள்ளி, மணிகண்டன், சுமதி, கி.இர.வினோத்குமார், கெ.விஜயகுமார், கு.சுரேஷ், வி.அர்ச்சுனன், கு.உமாபதி,கு.பொற்செழியன், செம்பாக்கம் விஜய், செம்பாக்கம் நாராயணன்
ஆவடி மாவட்டம்
பா.தென்னரசு. சுசிவக்குமார், உடு மலை வடிவேல், வெ.கார்வேந்தன், ம.ஆ. கந்தசாமி, கி.ஏழுமலை, க.கலைமணி, ஆ.வெ.நடராசன், பகுத்தறிவாளர் கழக கண்ணன்,  நதியா கண்ணன், பெரியார் பிஞ்சு அமுதன், சோபன்பாபு, ராதிகா தமிழ்மணி, வை.கலையரசன், சி.ஜெயந்தி. சி.அறிவுமதி, பெரியார் பிஞ்சு சி.அன்பு மணி, துரை.முத்துகிருஷ்ணன், மோகன பிரியா, செல்வி முரளி, வே.பன்னீர், கோ.முருகன், மணிமேகலை, எழிலரசி, கனிமொழி, பாக்யா, பெரியார் பிஞ்சு இராஜேஸ், பு.இராமலிங்கம், உ.கார்த்திக், சுந்தரவடிவேல், சங்கரி, பிரபாகரன், அறிவுமதி, வஜ்ரவேலு, நாராயணசாமி, உதயகுமார், பாலமுரளி, நிர்மலா, சித்தார்த் தன், அபினாசுரிதி, அரசு, தமிழ்செல்வன், பெரியார் மாணாக்கன், பூவை செல்வி, தொண்டறம், வேலவன், இளவரசு, இரா.கோபால், மதிவாணன், ஆசிரியர் இராவணன், பகுத்தறிவாளர் இராமதுரை, சி.வ.வேலு, சிலம்பரசன், சிவகுமார், தமிழன்பன், காரல்மார்க்சு, கா.சமத்துவ மணி, க.வனிதா, இரணியன், இரகுபதி, அறிவுமணி, அண்ணாமலை, துரை கார்த்திக் மகளிரணி க.பார்வதி, கு.தங்க மணி, ச.இன்பக்கனி, சி.வெற்றிச்செல்வி, பசும்பொன் செந்தில் குமாரி,  பா.மணி யம்மை, தங்க.தனலட்சுமி, த.மரகதமணி, இ.ப.சீர்த்தி, ச.கற்பகம், வி.தகங்கமணி, வி.யாழ்ஒளி,  அனுசுயா, வா.விமலா, வா.நிலா, சண்முகவர்ஷினி, லலிதா, எழிலரசி, பா.காயத்ரி, நதியா, செ.தமிழரசி,  நூர்ஜகான், கலைமதி, வி.வளர்மதி, மு.பவானி, பெலா சந்திரா, பி.அஜந்தா, கவிதா, சாதனபிரியா.
ஆந்திர மாநிலம்
ஆந்திர மாநிலத்திலிருந்து 17.9.2017 அன்று சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் 139ஆவது பிறந்தநாள் விழாவில் பாரதிய அம்பேத்கார் சேனா ஆந்திர மாநில ஒருங்கிணைப்பாளர் பிடிஎம் சிவப்பிரசாத்,  மாநில மக்கள் நலச் சங்கம் ஜி.பார்த்தசாரதி, பாரதிய அம்பேத்கர் சேனா மாநில தொடர்பாளர் சிறீசந்து, மாவட்டத் தலைவர்கள் ஜி.மனோகர்ரெட்டி, டி.கிருஷ் ணா மற்றும் ஜனார்த்தனன், நரசிம்மலு, குப்பம் சிவக்குமார், சச்சின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெரியார் நூலக வாசகர் வட்டத்தினர்
ச.சேரன், தென்.மாறன்,  ஆ.சீ.அருண கிரி, எத்திராசன், ந.அன்புசெல்வன், இரா.ஜனார்தனம்,  த.வேலு, ச.கணேசன், கே.கனகராஜ்,  பொன்.பெருமாள்செல்வன், வாசுதேவன், லோகநாதன், ஜான்சிராணி, பானுமதி
நன்றி அறிவிப்பு
17.9.2017 மாலை திருவல்லிக்கேணி சேக்தாவூத் தெருவில்  நடைபெற்ற தந்தை பெரியார் 139வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் மாநாடுபோல் சிறப் பாகவும், வெற்றிகரமாகவும் அமைய  உழைத்த; இன்னிசை நிகழ்ச்சி நடத்திய அறிவாணன் இசைக் குழுவினருக்கும், வீர விளையாட்டுகளை நிகழ்த்திக் காட்டிய பெரியார் வீர விளையாட்டுக் கலைக் குழுவை சேர்ந்த அமைப்பாளர் சி.பரசுராமன் மற்றும் ஆர்.ரஜினி, வி.விஜயகாந்த், எஸ்.சந்துரு, எம்.எழில் அரசன், அறிவரசு,அன்பரசு, அழகுராசு, அறிவு, தி.திலீபன், தி,தீபக், மு.நவீன்ராஜ், மு.தேவதர்ஷினி, பா.சித்தார்த் கோவந்த் மற்றும் கடை வசூல், துண்டறிக்கை வழங்கல், விளம்பர பிரச்சாரம் செய்த கோ.வீ.ராகவன், தரமணி கோ.மஞ்சநாதன், மு.திருமலை, மு.பவானி, கு.பா.அறி வழகன், மு.முகிலன், ந.மணித்துரை மற்றும் நெகிழித்திரைகளை வடிவமைத்த சா.மகேந்திரன், ஒலி-ஒளி மேடை அமைப் பை கவனித்துக் கொண்ட அலெக்ஸ், ஒலி-ஒளி அமைப்பகம், பெரியார் சேகர் மற்றும் ஒத்துழைத்த அனைவருக்கும் தென் சென்னை மாவட்டக் கழகம் சார்பில் தலைவர் இரா.வில்வநாதனும், செயலாளர் செ.ர.பார்த்தசாரதியும் நன்றி தெரிவித்துள் ளனர்.
-விடுதலை,27.9.17

-விடுதலை,17.9.17