தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சியாளருமான இரா.முத்துக்குமாரசாமி அவர்களின் படத்திறப்பு நிகழ்வு பபாசி சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழர் தலைவர் தலைமையேற்று படத்தினை திறந்து வைத்தார். உடன் பபாசி தலைவர் காந்தி கண்ணதாசன், முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி, பபாசி செயலாளர் புகழேந்தி சுப்பையா மற்றும் மறைந்த முத்துக்குமாரசாமி குடும்பத்தினர் உள்ளனர் (சென்னை, 5.10.2017)
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில்
இரா.முத்துக்குமாரசாமி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல்
சென்னை, அக்.6 திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சியாளரும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் மேனாள் தலைவருமாகிய இரா.முத்துக்குமாரசாமி அவர்கள் 80ஆவது வயதில் சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் உள்ள தம்முடைய இல் லத்தில் 15.8.2017 அன்று அதிகாலை யில் காலமானார். அவர் மறைந்த தக வல் கிடைத்ததும், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சென்று மலர்மாலைவைத்து மரியாதை செலுத்தி இரங்கல் அறிக்கை வெளியிட்டார்.
தென்னிந்திய புத்தக விற்பனையா ளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் மறைந்த இரா.முத்துக்குமார சாமி படத்திறப்பு மற்றும் நினைவேந் தல் நிகழ்வு சென்னை அண்ணாசாலை ஆனந்த் திரையரங்க வளாகத்தில் உமாபதி அரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலை மையில் நேற்று (5.10.2017) மாலை நடைபெற்றது.
தமிழர் தலைவர்
நினை வேந்தல் உரை
இரா.முத்துக்குமாரசாமியின் படத்தைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் நினைவேந்தல் உரையாற்றினார்.
தந்தைபெரியாரும், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சுப்பையாவும் கொள்கையில் இரு துருவங்களாக இருந்தாலும் நட்புடன் இருந்தவர்கள்.
இங்கே பேசிய மீனாட்சி சோமசுந் தரத்தின் தந்தை எனக்கு விடுதி தோழர் ஆவார். அப்போது எனக்கு வானொலி யில் தனிப்பெயர் வைத்திருந்தார்கள்.
பதிப்பகத்துறையில் விழுதுகள் ஆல மரத்தை தாங்குவதுபோல், வாழையடி வாழையாக பிள்ளைகளும் வருகிறார்கள். சட்டக்கல்லூரியில் நாங்கள் படித்தபோது பவழக்கார தெருவில் உள்ள மாணவர்களுக்கான யுனிவர்சிட்டி மாணவர்கள் கிளப்புக்கு வருவோம். அந்த பகுதியில் இயங்கிய திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்பகத்தின் மு.வ. எழுதிய திருக்குறள் தெளிவுரை புத்தக வரலாற்றில் புரட்சி படைத்தது. அதேபோல், அந்த பதிப்பகத்தால்தான் மறைமலையடிகள் நூல்கள் கிடைத்தன. அறிவைவிட பண்பாடு முக்கியம்.
'அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்
எனும் குறளின்படி, மக்கள் பண்பு என்பது மனிதம்.
அத்தகைய பண்பாளராக முத்துக் குமாரசாமி விளங்கினார்.
திராவிடப் பெருந்தகை சர் பிட்டி தியாகராயர்குறித்த நூல், தென்னிந்திய நல உரிமை சங்கம், ஜஸ்டிஸ் கட்சி 50 ஆண்டு கால வரலாறு என்கிற நூல் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டது. அந்நூலை எழுதி யவர் குமாரசாமி என்று குறிப்பிடப்பட் டிருந்தது.
திராவிடப் பெருந்தகை சர் பிட்டி தியாகராயர்குறித்த நூல் திருநெல் வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் சார்பில் முன்பு வெளியிடப்பட்டது. மறுபதிப்புக்காக நாங் கள் முத்துக்குமாரசாமி அவர்களுக்கு கடிதம் எழுதினோம். அவரும் அதற்கு பதில் கடிதம் எழுதி மறுபதிப்பு செய் யும் உரிமையை அளித்தார்.
பதிப்பகத்தாரிடம் புத்தகங்கள் வெளியிடுவதில் அறிவு நாணயம் அவசியம் இருக்க வேண்டும். எப் போதோ வெளியிடப்பட்டவையாக இருந்தாலும் மறுபதிப்பு செய்யும் போது அதிலும் அறிவு நாணயம் இருக்கவேண்டும்.
திராவிடர் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இரண்டு கழகங்களும் தமிழ் மொழி, இன வளர்ச்சிக்காக பாடுபட்டுவரு பவையாகும்.
Ôநவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்புÕ என்ப தற்கேற்ப நூல்கள் படிக்க படிக்க சுவை கூடுவதுபோல், முத்துக்குமார சாமி பண்பாளராக திகழ்ந்தவர்.
அறிஞர்கள் எழுதினாலும், அதை பதிப்பகங்கள்தான் பரப்புகின்ற பணியை செய்கின்றன.
முத்துக்குமாரசாமி அவர்களின் தொண்டறம் சிறப்பானது. அவர் மனி தருள் மாமனிதராவார்
இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்கள் நினைவேந்தல் உரையில் குறிப்பிட்டார்கள்.
உரையாற்றியவர்கள்
தென்னிந்திய புத்தக விற்பனையா ளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலை வர் காந்தி கண்ணதாசன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி, ஓய்வு பெற்ற தமிழக மொழிபெயர்ப்புத்துறை துணை இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணியன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க செயலாளர் புகழேந்தி சுப்பையா ஆகியோர் முன்னிலையேற்று நினைவேந்தல் உரையாற்றினார்கள்.
மூத்த பதிப்பாளர் அகிலன் கண் ணன், தென்னிந்திய புத்தக விற்பனை யாளர் மற்றும் பதிப்பாளர் சங்க மேனாள் தலைவரும், மணிவாசகர் பதிப்பக மெய்யப்பன் மகனுமாகிய மீனாட்சி சோமசுந்தரம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப் பாளர் சங்கப் பொருளாளர் எமரால்டு கோ.ஒளிவண்ணன் உள்ளிட்டவர்கள் தமிழறிஞர் இரா.முத்துக்குமாரசாமி அவர்களுடனான தங்களுடைய நினை வுகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.
இரா.முத்துக்குமாரசாமி அவர்கள் 50ஆயிரம் நூல்களை படித்தவராக, மறைமலையடிகள் நூலகத்தில் நூலகராக, ஆய்வாளராக, எழுத்தாளராக, செந்தமிழ்செல்வி இத ழின் ஆசிரியராக, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சியாளராக, பதிப்பகத்துறையில் முத்திரை பதித்தவராக, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப் பாளர் சங்கத் தலைவராக, உலகத் தமிழ் மாநாடுகளில் பங்களிப்பை செலுத்தியவரும், செம்மொழி மாநாட் டில் உறுதுணையாக விளங்கியவரும், அய்.ஏ.ஆர்.டி செயலாளராக தமிழ் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர் முத்துக்குமாரசாமி. 2004ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் Ôதிருவள்ளுவர் விருதுÕ பெற்ற அவருடைய தொண்ட றம் குறித்து நினைவேந்தல் உரையாற் றியவர்கள் குறிப்பிட்டார்கள்.
காந்தளகம் பதிப்பகம் சசிரேகா இணைப்புரை வழங்கினார். இரா.முத்துக்குமாரசாமி மகனும், திருநெல் வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் செயல் இயக்குநருமாகிய சுப்பையா நன்றி கூறினார்.
கலந்துகொண்டோர்
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கோ.வீ. ராகவன், சா.தாமோதரன், புலவர் பா. வீரமணி, விழிகள் நடராசன், முத்து வேல் மற்றும் தமிழறிஞர்கள், எழுத் தாளர்கள், பதிப்பகத்தார் உள்பட பலர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
-விடுதலை, 6.10.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக