புதன், 4 அக்டோபர், 2017

தென் சென்னை மாவட்டம் முழுவதும் தந்தை பெரியார் பிறந்த நாள் வாகனப் பிரச்சார ஊர்வலம்

சென்னை, அக். 4- தென் சென்னை மாவட்ட வாகனப் பிரச்சார பயணம்17.09.2017 காலை 7மணி அளவில் தரமணி தந்தை பெரியார் நகர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி நினைவு மன்றத்தின் வாயிலிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, தொடங்கியது.
கானகம், அடையாறு, சின்னமலை, சைதாப்பேட்டை, சி.அய்.டி.நகர் வழியாக தியாகராயர்நகர் தந்தை பெரியார் சிலையை அடைந்தது. அங்கிருந்து புறப்பட்டு பர்கிட் சாலை, செவாலியர் சிவாஜி சாலை, தேனாம் பேட்டை, ஆயிரம் விளக்கு, அண்ணா சாலை வழியாக சிம்சன் பெரியார் சிலையை அடைந்தது. அங்கிருந்து புறப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர் வழியாக சேத்துப்பட்டு அடைந்தது. அங்கிருந்து புறப்பட்டு பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை வழியாக பெரியார் திடல் அடைந்தது. பிறகு  அங்கிருந்து புறப்பட்டு எழும் பூர், புதுப்பேட்டை திருவல்லிக்கேணி, அய்ஸ் அவுஸ் வழியாக மயிலாப்பூர் சென்று, அங்கிருந்து புறப்பட்டு திருவல்லிக்கேணி நடுக் குப்பத்தில் முடிவுற்றது.
தரமணி தந்தை பெரியார் நகர்


காலை 7.00 மணிக்கு தரமணி பெரியார் நகரிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு தரமணி மஞ்சநாதன் தலை மையில் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் முன்னிலையில் மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் மாலை அணி வித்தார். ஏ.வி.பி.ஆசைத்தம்பி நினைவு மன்ற பொறுப் பாளர்கள் ஜி.கண்ணன், ஆர்.சிவா, மன்ற செயலாளர் டி.சேகர்,, கு.சுப்பிரமணி, தி.மு.க. பகுதி தொண்டரணி அமைப்பாளர் அமைப்பாளர் என்.வரதன், ச.சந்தோஷ், ர.ராஜேஷ்  மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித் தனர். அங்கு அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கினர்.
தியாகராயர் நகர்


காலை 8 .10 மணிக்கு தியாகராயர் நகர் அடைந்து. தந்தை பெரியார் சிலைக்கு பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.பாலு தலைமையில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்  மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைத்தலைவர் டி.ஆர்.சேதுராமன் முன்னிலை யிலும் அமைப்பாளர் மு.ந.மதியழகன் மாலை அணி வித்தார். மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், அய்ஸ் அவுஸ் அன்பு, இளைஞரணி தலைவர்  செ.தமிழ் சாக்ரடீசு, துணைத் தலைவர் மு.முகிலன், துணைச் செயலாளர் இரா.பிரபாகரன், மு.சண் முகப்பிரியன், ஈ.குமார், ச.தாஸ், ந.மணித்துரை, ச.சந் தோஷ், ர.ராஜேஷ், இர.மோகன்,புஷ்பராஜ், பூபதி, தன பாலன், பி.சீனிவாசன் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். அங்கிருந்து புறப்பட்டு முற்பகல் 8.45 மணிக்கு சிம்சன் பெரியார் சிலையை அடைந்தது.
சிம்சன் பெரியார் சிலை


முற்பகல் 9.15 மணிக்கு சிம்சன் பெரியார் சிலைக்கு தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் வடசென்னை மாவட்டத் தலைவர் சு.குமார தேவன் அவர்கள் மாலை அணிவித்தார்.மாவட்ட செய லாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத்தலைவர் டி.ஆர்.சேது ராமன், அமைப்பாளர் மு.ந.மதியழகன்,. மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், அய்ஸ் அவுஸ் அன்பு, இளைஞரணி தலைவர்  செ.தமிழ் சாக்ரடீசு, துணைத் தலைவர் மு.முகிலன், துணைச் செயலாளர் இரா.பிரபாகரன், மு.சண்முகப் பிரியன், ஈ.குமார், ச.தாஸ், ந.இராமச்சந்திரன்,, ந.மணித் துரை, ச.சந்தோஷ், ர.ராஜேஷ், இர.மோகன்,புஷ்பராஜ், பூபதி, தனபாலன், பி.சீனிவாசன் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர்.
சேத்துப்பட்டு


முற்பகல் 9.45 மணிக்கு  வடசென்னை மாவட்டத் தலைவர் சு.குமாரதேவன் தலைமையில் சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு   தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அவர்களும், டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன் மற்றும் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் மற்றும் பகுதி பொறுப்பாளர் அ.பாபு ஆகியோர் முன்னி லையில்  மாலை அணிவித்தனர்,  அமைப்பாளர் மு.ந. மதியழகன், துணைச் செயலாளர்  சா.தாமோதரன், அய்ஸ் அவுஸ் அன்பு, இளைஞரணி தலைவர்  செ.தமிழ் சாக்ரடீசு, துணைத் தலைவர்
மு.முகிலன், துணைச் செயலாளர் இரா.பிரபாகரன், மு.சண்முகப்பிரியன், ஈ.குமார், ச.தாஸ், ந.இராமச் சந்திரன், ந.மணித் துரை, ச.சந்தோஷ், ர.ராஜேஷ், இர.மோகன், புஷ்பராஜ், பூபதி, தனபாலன், பி.சீனிவாசன் மற்றும் வட சென்னை மாவட்டத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அங்கிருந்து புறப்பட்டு பெரியார் நெடுஞ்சாலை வழியாக பெரியார் திடல் அடைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு முற்பகல் 11.30க்கு புறப்பட்டு,
மயிலாப்பூர் -கச்சேரி சாலை,
மயிலை ரயில் நிலையம்


12 மணிக்கு தென் சென்னை மாவட்டம், மயிலாப்பூர் கச்சேரி சாலை அருண்டேல் தெரு சந்திப்பில் பொறியாளர் ஈ.குமார் தலைமையில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்,
அடுத்ததாக மயிலை ரயில் நிலையம் அருகில் இளை ஞரணித் தோழர் க.விஜயராஜா தலைமையில் கழகப் பொதுச் செயலாளர் கழகக்கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் முன்னிலை வகித்தார். செ.ரா.பார்த்தசாரதி, தாமோதரன், ராகவன், டி.ஆர்.சேது ராமன், தமிழ் செல்வன், மணித்துரை, மு.சண்முகப்பிரியன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். பொதுச் செயலாளருக்கு சால்வை அணிவித்து சிறப்புச் செய்யப் பட்டது.
திருவல்லிக்கேணி - நடுக்குப்பம்


திருவல்லிக்கேணி - நடுக்குப்பம் சென்றடைந்து நண் பகல் 1.30மணிக்கு இளைஞரணி செயலாளர் ச.மகேந் திரன் இல்லம் அருகில் இளைஞரணியினரால் அமைக்கப் பட்டிருந்த தந்தை பெரியார் படத்திற்கு இளைஞரணி தலைவர் செ.தமிழ்சாக்ரடீசு தலைமையில் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், முன்னிலையில் மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் மாலை அணிவித்தார். இனிப்பு வழங்கப்பட்டது. துணைச் செயலாளர்
சா.தாமோதரன், இளைஞரணி துணைத் தலைவர்
மு.முகிலன், ச.தாஸ், கு.செல்வேந்திரன், க.தமிழ் செல் வன், தே.ஒளிவண்ணன், ந.மணித்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நுங்கம்பாக்கம்
காலை 6 மணிக்கு மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்த சாரதி இல்லம் எதிரில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப் பட்டது.
சூளைமேடு
பிற்பகல் 4..00 மணிக்கு சூளைமேடு ஆத்ரேயா நகரில், தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து ந. இராமச்சந்திரன் இனிப்பு (லட்டு) வழங்கி மகிழ்ச் சியாக கொண்டாடினார். தோழர்கள் கலந்து கொண்டனர்.
நொச்சிக்குப்பம் (கடற்கரை):
பிற்பகல் 4.30. மணிக்கு நொச்சிக் குப்பம் (கடற்கரை) பகுதியில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் முன்னிலை யில் இளைஞரணி துணைச் செயலாளர் இரா.பிரபாகரன் அவர்களால் 150 பேருக்கு இனிப்பு வழங்கப்பட்டு பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடினர். வி.வளர்மதி, பி.அஜந்தா, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி மற்றும் பல தோழர்கள் கலந்துகொண்டனர்.
தென்சென்னையில் பல இடங்களில் தந்தை பெரியார் படத்தை வைத்து மாலை அணிவித்தும், ஒலி பெருக்கி வைத்து கொள்கை பாடல்கள் ஒலிபரப்பியும், இனிப்பு வழங்கியும் பிறந்தநாள் விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.



- விடுதலை 4.10.17



























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக