சென்னை, ஆக.2 வஞ்சிக்கப் படும் தமிழ்நாட்டின் உரிமை களை மீட்கக் கோரி மாபெரும் தொடர் பிரச்சார திட்டம் தென் சென்னை இளைஞரணி கலந் துரையாடல் கூட்டம் 17.7.2017 மாலை 6 மணிக்கு துரை சக்ர வர்த்தி அரங்கில் நடைபெற்றது.
தொடக்கத்தில் திருமலை கடவுள் மறுப்பு கூறியதை அடுத்து, மாவட்ட இளைஞரணி தலைவர் செ.தமிழ்சாக்ரடீஸ் வர வேற்புரையாற்றி, கூட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார் தொடர்ந்து தோழர்கள் கோபி, சி.பரசுராமன், சேத்துப்பட்டு பாபு, கு.செல்வேந்திரன், ச. மகேந்திரன், மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாநில இளைஞரணி துணைசெயலாளர் க.கண்ணன், மண்டல செய லாளர் வி.பன்னீர்செல்வம் ஆகி யோர் கருத்துரை வழங்கியதை தொடர்ந்து, நிகழ்ச்சிக்கு முன் னிலை ஏற்ற கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர் கள் தென் சென்னை இளைஞ ரணிக்கான வளர்ச்சி பணிபற்றி யும் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனைகளையும் அதன் முதல்கட்டமாக தென்சென்னை பகுதிகள் முழுவதும் வஞ்சிக் கப்படும் தமிழ்நாட்டின் உரிமை களை மீட்கக்கோரி தொடர் பிரச்சாரக் கூட்டங்களை நடத் துவதற்கான திட்டங்களை வழங்கினார்.
தொடர் கூட்டங்கள்
தொடர் கூட்டங்கள்
சைதாப்பேட்டை - செல் வேந்திரன்
5.8.2017 கோயம்பேடு - செங்குட்டுவன்
திருவல்லிகேணி - மகேந் திரன்
12.8.2017 எம்எம்டிஏ - ராமச்சந்திரன்
18.8.2017 நுங்கம்பாக்கம் ரயிலடி - பார்த்தசாரதி
மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் -- பொறியாளர் ஈ.குமார்
23.8.2017 திருவள்ளுவர்சாலை தேனாம்பேட்டை - விடுதலை பாஸ்கர்
30.8.2017 மந்தைவெளி - முகிலன்
2.9.2017 அடையார் தொலை தொடர்பகம் - அண்ணாதுரை
26.8.2017 கோட்டூர் மார்கெட் - தாஸ்
6.9.2017 ஆர்.ஏ.புரம் - சிவக்குமார்
9.9.2017 லாய்ட்ஸ் ரோடு ராயப்பேட்டை - பிரபாகர்
ஆகிய இடங்களில் முதல் கட்டமாக பிரச்சார கூட்டங்கள் நடத்துவதற்கான ஆலோசனை களை வழங்கிஉரையாற்றினார். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் உரையில், தமிழ்நாட்டில் சூழ்ந்துள்ள இந்துத்துவ மதவாத போக்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இளைஞரணியினர் தங்கள் செயல் திட்டங்களை வகுத்துக்கொள்ள வலியுறுத் தினார்.
பொறியாளர் ஈ.குமார் கூட் டத்தின் தீர்மானங்களையும் சேத்துப்பட்டு கூட்டத்தின் வரவு செலவு கணக்குகளையும் படித் தார்.
இறுதியாக முகிலன் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது. கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் கோவி.ராகவன், சா.தாமோதரன், கோ.முத்து, கோவி.அரவிந்த், சிற்றரசு வி.சி. வில்வம், பே.உமா மகேஸ்வரி, வடசென்னை மாவட்ட செய லாளர் தே.ஒளிவண்ணன் உள் ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியாக முகிலன் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது. கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் கோவி.ராகவன், சா.தாமோதரன், கோ.முத்து, கோவி.அரவிந்த், சிற்றரசு வி.சி. வில்வம், பே.உமா மகேஸ்வரி, வடசென்னை மாவட்ட செய லாளர் தே.ஒளிவண்ணன் உள் ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
-விடுதலை,2.8.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக