வெள்ளி, 13 அக்டோபர், 2017

தமிழ்நாட்டில் மீண்டும் சினிமா நடிகர்கள் கையில் அரசியல் போக வேண்டுமா? தமிழ்நாடெங்கும் துண்டறிக்கை பரப்பரப்பாக விநியோகம்

சென்னை, அக். 13- தமிழ்நாட்டில் மீண் டும் சினிமா நடிகர்கள் கையில் அரசி யல் போக வேண்டுமா? என்ற தமிழர் தலைவர் அறிக்கை தமிழ்நாடெங்கும் துண்டறிக்கையாக விநியோகிக்கப் பட்டது. அதன் விவரம் வருமாறு:
சென்னை
தென் சென்னை மாவட்டக் கழகத் தின் சார்பில் 11.10.2017 நண்பகல் 12.00 மணி அளவில் கோயம்பேடு பேருந்து முனையமும்  பெரியார்- - அண்ணா காய், கனி பேரங்காடி இணையும் இடத்தில் மாவட்டத் துணைத்தலைவர் சி.செங் குட்டுவன் தலைமையில் ''தமிழ்நாட்டு அரசியல் மீண்டும் சினிமா நடிகர்கள் கைகளில் போக வேண்டுமா?'' என்கிற தலைப்பில் வெளியான தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் அறிக்கை துண்டறிக்கையாக வழங்கப்பட்டது. மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் சா.தாமோதரன், சூளைமேடு ந.இராமச்சந்திரன் மற்றும் ஆவடி மாவட்ட தோழர் வேலுச்சாமி ஆகி யோர் துண்டறிக்கைகளை வழங்கினர். பொதுமக்களிடையே பெரும் வரவேற் பிருந்தது.
-விடுதலை,13.10.17













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக