தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்-பரப்புரைக் கூட்டங்கள்
தென் சென்னை-மந்தைவெளி
தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் செயின்ட் மேரிஸ் பாலம், மந்தைவெளி ரயிலடி அருகில் ‘27.12.2024, வெள்ளிக்கிழமை, மாலை 6.30 மணி அளவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழா வெற்றி முழக்கமும்’, ‘தந்தை பெரியாரின் 51 ஆம் ஆண்டு நினைவு நாள்’ கூட்டமும் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா.மாரிமுத்து தலைமை தாங்கினார். முன்னதாக அறிவுமானனின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இரா.வில்வநாதன்(மாவட்டத் தலைவர்), டி.ஆர்.சேதுராமன்(மாவட்டத் துணைத் தலைவர்), கோ.வீ.ராகவன், சா. தாமோதரன் (துணைச் செயலாளர்) ஆகியோர் முன்னிலையேற்றனர்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியார் யுவராஜ் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி தொடக்க உரை ஆற்றியதற்கு பின்பாக கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி உரையாற்றினார்.
இறுதியாக கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி தந்தை பெரியாரின் போராட்டங்களையும் தொண்டினையும் விளக்கிக்கூறி எழுச்சி உரையாற்றினார்.
தந்தை பெரியார் அவர்கள் கேரள மக்களின் அழைப்பை ஏற்று வைக்கம் சென்று போராட்டம் நடத்தியதையும் இதனால் சிறை கொடுமை அனுபவித்ததையும், தந்தை பெரியாரின் மனைவி நாகம்மையாரும், தங்கை கண்ணம்மையாரும் கலந்து கொண்டு போராட்டத்தை தீவிரப்படுத்தியதையும் எடுத்துக் கூறி அந்தப் போராட்டம் வெற்றி பெற்று இன்று நூற்றாண்டு நிறைவு விழா அதே வைக்கத்தில் 12.12.2024இல் தமிழ்நாடு முதலமைச்சர்ர் மு. க. ஸ்டாலின் மற்றும் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் ஆகியோரின் பங்கேற்புடன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி .வீரமணி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றதை விரிவாக எடுத்துக் கூறினார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து பேசியதோடு, இது போன்ற நிகழ்ச்சி இன்று மட்டும் தான் நடந்திருப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது இதற்கு முன்னதாக கூட பல நிகழ்ச்சிகள் நடந்து இருக்கலாம். ஆகையால் காவல்துறையின் முழுமையான விசாரணை தேவையென அறிவுறுத்தினார்.
கல்வியை ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இந்தியை திணிக்க முயற்சிக்கிறது, விஸ்வகர்மா திட்டம் என்ற பெயரால் ஜாதியை வளர்க்க முயற்சிக்கிறது, பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை முன்னேற விடாமல், கல்வி கற்க விடாமல் தடுத்து அவர்களின் ஜாதி தொழிலை செய்ய வற்புறுத்துகிறது.
இந்த திட்டத்தை ஏற்காத தமிழ்நாடு அரசை பாராட்டுகிறோம் என குறிப்பிட்டு பேசினார். அனைவரும் தந்தை பெரியாரின் பணியை மேற்கொண்டு, பயணிக்க வேண்டும் என்று கூறி சிறப்பானதொரு உரையை நிகழ்த்தினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு. சண்முகப்பிரியன், வி.வளர்மதி (மகளிர் அணி தலைவர்), பி.அஜந்தா (மகளிர் அணி செயலாளர்), மு.பவானி (மகளிர் பாசறை தலைவர்), நொச்சி நகர் ஜெ.சொப்பன சுந்தரி, மாணவர் கழக வி.யாழ்ஒளி, அர. அண்ணாதுரை, நல். இராமச்சந்திரன், மயிலை ஈ.குமார், கோட்டூர்புரம் ச.தாஸ், ஆவடி மாவட்டத் துணைச் செயலாளர் க. தமிழ்ச்செல்வன், ஓட்டேரி பெரியார் பித்தன், குன்றத்தூர் மு.திருமலை, சு. செல்லப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இளைஞர் அணி செயலாளர் ந. மணிதுரை நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக