திங்கள், 20 பிப்ரவரி, 2023

தென் சென்னையில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்

தமிழ்ப் புத்தாண்டு (திருவள்ளுவர் ஆண்டு 2054) மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு 15.01.2023 மு.ப.10.15 மணி அளவில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தியாகராயர் நகரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் தலைமையில் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது.

மாவட்ட அமைப்பாளர் மு.ந. மதியழகன், மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன், துணைச் செயலாளர் சா. தாமோதரன், கோடம்பாக்கம் ச. மாரியப்பன், பி .டி. சி. ராஜேந்திரன் மற்றும் திருவல்லிக்கேணி அப்துல்லா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக