ஞாயிறு, 21 ஜனவரி, 2024

தமிழ்ப் புத்தாண்டையொட்டி பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு


விடுதலை நாளேடு, Published January 20, 2024

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு 15.1.2024 முற்பகல் 10.30மணி அளவில் சென்னை தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், அமைப்பாளர் ந.மதியழகன், துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், துணைச் செயலாளர்கள் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு.இரா.மாணிக்கம், மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து, சைதை இரா.ரவி, எம்.டி.சி.செல்வம், எம்.டி.சி.இராஜேந்திரன், வழக்குரைஞர் இராஜா மற்றும் பெரியார் பிஞ்சு இனியவள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக