4.9.24 முற்பகல் 10:30 மணி அளவில் சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறை ஏற்பாட்டில் சென்னை பல்கலைக்கழக பவழ விழா அரங்கில் பேராசிரியர் மணிகண்டன் அவர்கள் தலைமையில் திராவிடர் கழக பரப்புரை செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களின் அறுபதாவது பிறந்த நாள் விழா சிறப்பு உரையரங்கமாக நடைபெற்றது.
எதிர்பாராத வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் நேரு ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களும் நிகழ்ச்சி தொடக்கத்தில் வந்திருந்து வாழ்த்தி விட்டுச் சென்றனர்.
ஈரோடு தமிழன்பன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா. வில்வநாதன் கருத்துரையுடன் நிகழ்ச்சி முடிவுற்றது.
அன்று மாலை தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா. வில்வநாதன் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி .ஆர். சேதுராமன் ஆகியோர் அ.அருள்மொழி அவர்களின் இல்லம் சென்று பாராட்டு தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக