வெள்ளி, 4 அக்டோபர், 2024

அடையாறு கோ. அரங்கநாதன் 13ஆம் ஆண்டு நினைவேந்தல்


விடுதலை நாளேடு
Published October 4, 2024

சென்னை, அக். 4- பெரியார் பெருந்தொண்டர் அடையாறு கோ.அரங்கநாதன் அவர்களின் 13 ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை இந்திரா நகரில் உள்ள அவரின் இல்லத்தின் எதிரில் 01.10.2024 நண்பகல் 12 மணி அளவில் சோழிங்கநல்லூர் மாவட்ட காப்பாளர் ஆர். டி. .வீரபத்திரன் தலைமையில் நடைபெற்றது.

தென் சென்னை மாவட்ட தலை வர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு, துணைத் தலைவர் தமிழினியன், தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், சோழிங்கநல்லூர் மாவட்ட துணைச் செயலாளர் ஆனந்தராஜ் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.

கோ.அரங்கநாதன் அவர்களின் மகன்கள் அர.சித்தார்த்தன், அர.இராமசாமி, அர. அண்ணாதுரை, மகள் இந்திரா மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையிலே ஏற்பாடு செய்திருந்தனர். கழகத் தோழர்களும் அப்பகுதி நண்பர்களும் கலந்து கொண்டனர். கோ.அரங்கநாதன் அவர்களின் மகள் இந்திரா நன்றி கூறினார்.

-------------++++++++++------+++++++++-----
சுயமரியாதை சுடரொளி அடையாறு கோ.அரங்கநாதன் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி (1.10.12)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக