புதன், 9 அக்டோபர், 2024

தென் சென்னையில் 27 கிளைக் கழகங்கள் உருவாக்கும் (மார்ச்-2001)

தென் சென்னையில் கழகப் பணிகள் தீவிரம்: 

27 கிளைக் கழகங்கள் உருவாக்கம்

13 அம்சத் திட்டங்களின் அடிப்படையில் பணிகள்!

சென்னை மார்ச் 27-

தென் சென்னை மாவட் டத்தில் திராவிடர் கழகப் பணிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.

25-3-2001 ஞாயிறு முற் பகல் 11 மணியளவில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை தலைமையில் மிக எழுச்சியோடு நடை பெற்றது. இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாவட் டக் கழக பொறுப்பாளர்கள், கிளைக் கழகப் பொறுப்பாளர்கள், இளைஞரணி தோழர்கள், மகளிரணி தோழியர்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத் தகுந்தது. தமிழர் தலைவர் வழிகாட்டுதலின் பேரில் நடந்த இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை தந்த கழகத் தோழர்களை வர வேற்று குடந்தை கோவிந்தராசன் (மா.தி.க.து. தலைவர்) கூட்டத்தின் நோக்கம்பற்றி உரையாற்றினார். முன்னதாக கோ.வீ. இராகவன் (கோ.அ.தி.க. செயலாளர்) கடவுள் மறுப்பு கூறினார். கலந்துரையாடல் கூட்டத்திற்கு கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை தலைமை தாங்கினார். கழகத்தின் உதவிப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், மாநில தகவல் தொடர்பு செயலாளர் இனமானக் கவிஞர் செ.வை.ர.சிகா மணி, மாவட்ட தி.க. தலைவர் எம்.பி.பாலு, மாவட்ட தி.க. செயலாளர் எம்.கே. காளத்தி, மாநில இளைஞரணி து.செயலாளர் இரா.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தோழர்கள் உரை

மாவட்டக் கழகத்தின் வளர்ச்சி, புதிய அமைப்புகள் ஏற்படுத்துதல், 'விடு தலை', 'உண்மை' சந்தாக்கள் சேர்த்தல், புதிய பொறுப்பாளர்களுக்குப் பாராட்டு, பயிற்சி முகாம் நடத்துதல், புதிய அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அதற்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுத்தல் என மாவட்டக் கழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த தோழர்கள் உரையாற்றினர். அவர்கள் விவரம் வருமாறு:-

ஏ. பெரியார் தொண்டன் (கோடம்பாக்கம்), மு.மதியழகன் (சைதை), சி.தணிகாசலம் (சூளை மேடு), இனமான நடிகர் எம்.ஏ.கிரிதரன், பி.எஸ். நாதன் (விருகம்பாக்கம்), செ.ர- பார்த்தசாரதி (நுங்கம்பாக்கம்), கரிகாலன் (எம்.ஜி.ஆர். நகர்ப் பகுதி), பெரியார்பிரியன் (மயிலைப் பகுதி), ஜான்சன் (ஈக்காட்டுத்தாங்கல்), கனகா (மகளிரணி), மணிவண்ணன் (கோடம்பாக்கம்), தமிழ்சாக்ரடீஸ் (மாவட்ட இளைஞரணி தலைவர்), இரா. வில்வநாதன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), துரை, ராகவன் ('விடுதலை' நாளிதழ் விநியோக மேலா ளர்), மாவட்ட திராவிடர் கழக செயலாளர் எம்.கே. காளத்தி, மாவட்ட திராவி டர் கழகத் தலைவர் எம்.பி.பாலு, மாநில தகவல் தொடர்பு செயலாளர் இனமான கவிஞர் செ.வை.ர. சிகாமணி ஆகியோர் கூட்டத்தின் நோக்கம், மாவட்டக் கழக வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள்பற்றி ஆக்கப்பூர்வமான கருத்துகளை தெரிவித்தனர். உதவிப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் மாவட்டக் கழகத்தின் வளர்ச்சிக்கென செயல் திட்டங்கள் வகுத்து எழுதிக் கொடுத்த விவரங்களை குடந்தை கோவிந்தராசன் கூட்டத்தில் வாசித்தார். மாவட்டத் தலைவர் எம்.பி. பாலு அவர்கள் மாவட்டத்தில் புதிய கிளைக் கழக அமைப்புகள் ஏற்படுத்தி இருப்பதையும், அதன் புதிய பொறுப்பாளர்களைப்பற்றியும் தெரிவித்தார்.

பின்னர் இக்கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கிய கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமி துரை அவர்கள் மாவட்டக் கழகத்தின் வளர்ச்சி மற்றும் கழகத்தில் அவ்வப்போது தோன்றும் துரோகிகள், அதை எதிர்கொள்ளும் விதம் இன்றைய அரசியல் சூழ்நிலையில் இன எதிரி களை எப்படி வீழ்த்துவது, தமிழர் தலைவர் அவர் களின் சிறப்பான செயல் திட்டங்கள்பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் உரை யாற்றினார்.

இரங்கல்

முன்னதாக வட சென்னை மகளிரணி முன்னாள் தலைவர் ஜே. ஏமலதாதேவி, சித்தார்த்தன் (வில்லிவாக்கம்), வட சென்னை மாவட்ட தி.க. துணைத் தலைவர் வி.எம். நாராயணன், பழம்பெரும் திராவிட இயக்க நடிகர் நடிகமணி டி.வி. நாராயணசாமி ஆகியோர் மறைவுக்கு இக் கலந்துரையாடல் கூட்டத் தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

முரளி (மாவட்ட இளை ஞரணி பொருளாளர்) நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.

கிளைக் கழக அமைப்புகள் உருவாக்கம்

மாவட்டக் கழகத்தின் புதிய அமைப்புகளும், அதன் புதிய பொறுப்பாளர்களின் விவரமும்:-

சூளை மேடு பகுதி

காப்பாளர் - செ. குப்பு சாமி
தலைவர் - கோ.வீ. இராக வன்
செயலாளர் - சி. தணி காசலம்
பொருளாளர் - நடேசன் )75, 76- வது வட்டம் 

 எம்.எம்.டி.ஏ. குடியிருப்பு 

குடந்தை கோவிந்தராசன் -(அமைப்பாளர்) (74ஆவது வட்டம்)

விருகம்பாக்கம் - சின்மயா நகர்

காப்பாளர் - கே.எஸ்.இராசன்
தலைவர் - சி. செங்குட் டுவன்
செயலாளர் - பி.எஸ்.நாதன்

சாலிகிராமம்

தலைவர் - சொக்கையா
செயலாளர் - பொறியாளர் அழகு சுந்தரம்

நுங்கம்பாக்கம் பகுதி

அமைப்பாளர் - செ.ர.பார்த்தசாரதி தலைவர் - வெற்றிவீரன் 
செயலாளர் - கோபால் 
பொருளாளர்- ஜி.நாகப்பன்
(108-ஆவது வட்டம்)

ஈக்காட்டுத் தாங்கல் பகுதி

தலைவர் - கோ.நடராசன்
செயலாளர் - தே. ஜான் ராசன்
பொருளாளர் - சு. நாக ராசன்
அமைப்பாளர்- மு. செல்வம்

ஆயிரம் விளக்குப் பகுதி

தலைவர் - தே. மதிவாணன்
செயலாளர் - ரவிக்குமார்
பொருளாளர் - நபீஸ்

இராயப்பேட்டை பகுதி

அமைப்பாளர் - முருகன்

ரோட்டரி நகர் பகுதி

மு. நித்தியானந்தம் (அமைப்பாளர்)
கே.யோகேஷ், சி.மோகன், மு. மில்லர்.

அய்ஸ் அவுஸ் பகுதி (91-ஆவது வட்டம்)

தலைவர் மு திருமலை
செயலாளர் அன்பு
பொருளாளர் மூர்த்தி
அமைப்பாளர் - முரளி 

(89-ஆவது வட்டம்)

தலைவர் அன்சாரி
செயலாளர் கறீம்

கோடம்பாக்கம் பகுதி

தலைவர் -பெரியார் தொண்டன்

செயலாளர் - சு.செல்வராசன்

பொருளாளர் - எஸ். மணிவண்ணன்

மகளிரணி
தலைவர் - தி. மகாலட்சுமி
செயலாளர்- பி.டி.வைக்கம் மதி

இளைஞரணி செயலாளர்கள் பாஸ்கர், ரவி

கோட்டூர் புரம்

தலைவர் - தாஸ்
செயலாளர் - முருகள்

இந்திரா நகர்

அமைப்பாளர் கோ.இரங்கநாதன்

சைதை பகுதி
(134-ஆவது வட்டம்!

தலைவர் - மு.ந. மதியழகள்
செயலாளர் - பா.செந்தில்நாதன்

கர்சால்

மகளிரணி

பொருளாளர் பி.இங்கர்சால்

மகளிர் அணி 

தெ.வீரமர்த்தினி - தலைவர்
ம.தமிழ்மதி- செயலாளர்
மோ மலர்விழி - பொருளாளர் 

135-ஆவது வட்டம் 
தலைவர் - எஸ்.தென்றல் 
செயலாளர் -  ஜி. பத்மநாபன் 
பொருளாளர் - சாக்ரட்டீஸ்

மகளிரணி
எஸ். பூங்கோதை -தலைவர்

ராதா ராமானுஜம் - செயலாளர்

கண்மணி சிவக்குமார்- பொருளாளர்

132-ஆவது வட்டம் 
தலைவர் - வே. அன்புமணி
செயலாளர் - வே.தியாகு 
பொருளாளர் - குமணன் 
மகளிரணி
சுகுணா - தலைவர். 
அறிவுக்கொடி -செயலாளர்
கே.அகில் - பொருளாளர் 

மயிலைப் பகுதி

தலைவர் - பா.எழிலரசன்
செயலாளர் - மோ. திருமலை
பொருளாளர் -  சுவர்ணபாஸ்
அமைப்பாளர்கள் - மு. சிறீதர், துரை
மகளிரணி
ஜெ. செயசங்கரி - தலைவர்
ஜெ. பிரமீளா - செயலாளர்
மு.பவானி - பொருளாளர்
மற்றும் மு.பவானி, மு.பரிமளா, ஜே. ரேவதி.

145-ஆவது வட்டம்

தலைவர் - க.மணி

செயலாளர் - பா. விஜி

பொருளாளர் - கே.சரவணன் 

146-ஆவது வட்டம்

தலைவர் - அக்தர்
செயலாளர் - அலெக்ஸ்
பொருளாளர் - அஷரப்

147-ஆவது வட்டம்.

தலைவர் - வேலு
செயலாளர் - குமார்
பொருளாளர் - சசி

கோட்டூர் பகுதி

பொறுப்பாளர்கள் - எம்.துரைராகவன், எம்.நடராசன்

அடையாறுபகுதி

அமைப்பாளர் -கே. ராஜு

தசரதபுரம்

அமைப்பாளர் - பொன்.க செந்தில்குமார்

எம்.ஜி.ஆர். நகர் பகுதி

தலைவர் - கரிகாலன் 
செயலாளர் - மதிவாணன்
பொருளாளர் - தேசிங்

அசோக்நகர் பகுதி

அமைப்பாளர் - பெருமாள்
குப்பன், கிருஷ்ண மூர்த்தி, ஸ்டேன்லி

தென் சென்னை திராவிடர் கழக இளைஞரணிக்கான திட்டங்கள்

திராவிடர் கழக உதவிப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் அனுப்பி வைத்த கீழ்க் கண்ட திட்டங்கள் குறித்து ஆலோசித்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

1. உறுப்பினர் சேர்க்கையை  முழுமைப்படுத்துதல்

2. இளைஞரணி கிளைக் கழகங்களை விரிவுபடுத்துதல் - அதிக உறுப்பினர் கிடைக்காவிட்டால் அமைப்பாளர் ஒருவரை நியமித்தல்

3. ஏற்கனவே கிளைக் கழகம் உள்ள இடங்களில் மாதம் ஒருமுறை இளைஞர்களுக்கு வகுப்புகள் நடத் துதல்

4. 'விடுதலை', 'உண்மை' போகாத பகுதிகளுக்கு ஏற்பாடு செய்தல்

5. இளைஞரணிப் பொறுப்பாளர்கள் கிளைக் கழகத் தோழர்களை அடிக் கடி சந்தித்தல் - கிளைக் கழகக் கூட்டங்களை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூட்டுதல்

6. கழகத் தோழர்கள் - தங்கள் வீடுகளிலும் பொது இடங்களிலும் கழகக்  கொடிகளைப் பறக்கவிடுதல் 

7. மாவட்டத்தில் தாங்கள் செய்த கழகப் பணிகளை டைரியில் குறித்து கலந்துரையாடல் கூட்டங்களில் அதனைப் படித்தல்

8. தெருமுனைக் கூட்டங்களை அதிகம் நடத்துதல்

9. மே மாதத்தில் சென்னையில் நடக்க இருக்கும் பயிற்சி முகாமைச் சிறப்பாக நடத்துதல் -  ஏராளமான இளைஞர்களை முகாமுக்குக் கொண்டு வருதல்

10. போராட்டக் காலங் களில் தோழர்களை நேரில் போய்ச் சந்தித்துத் திரட்டி வருதல்

தலைமைக் கழகத்துக்கு அடிக்கடி வருதல்; மாவட் டத் தலைவர், செயலாளர் களைச் சந்தித்து ஆலோ சனை பெறுதல்.

11. நன்கொடை வசூல் செய்வதாக இருந்தால், மாவட்டத் தலைவர், செய லாளர் அனுமதி பெற வேண்டும். மாவட்டக் கழக நன்கொடைப் புத்தகங்களில் மட்டுமே நன் கொடையைத் திரட்ட வேண்டும். நிகழ்ச்சி முடிந்து வரவு - செலவு கண்டிப்பாக. ஒப்படைக்கப்பட வேண்டும்.

12. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வட சென்னை, தென் சென்னை மாவட்ட இளைஞரணித் தோழர்களை ஒருங்கிணைத்துச் செயல்படவேண்டும்.

13.இளைஞரணியினர் மாணவர்களோடும் தொடர்பு கொண்டு மாணவர் கழகத்தை வளர்க்கவும் உதவி புரியவேண்டும்.
- விடுதலை நாளேடு, 27.03.2001

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக