வெள்ளி, 14 ஏப்ரல், 2023

இரா.பிரபாகரன் - சா.அஜந்தா வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா!

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (289)

மார்ச் 16-31,2022

இந்துத்வா எதிர்ப்பை மீறி கீதையின் மறுபக்கம் மலேசியாவில் வெளியீடு!

கி.வீரமணி

கட்டுரையின் ஒரு பகுதி...
தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் வில்வநாதனின் சகோதரரின் மணவிழா சென்னை அய்ஸ் அவுஸ் பகுதியில் 12.7.1998 அன்று நடைபெற்றது. அவ்விழாவிற்கு தலைமையேற்று, கு.இராமசாமி _ பவுனம்மாள் ஆகியோரின் செல்வன் இரா.பிரபாகரனையும், சூனாம்பேடு ஆ.சாரங்கன் _ மஞ்சளழகி ஆகியோரின் செல்வி சா.அஜந்தாவையும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதி மொழியினைக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ள வைத்து மணவிழாவினை நடத்தி வைத்தேன். அங்கு உரையாற்றுகையில், “பொதுமக்கள் சடங்கு, சம்பிரதாயம், மதம், கடவுள் மூடநம்பிக்கைகளை பின்பற்றக் கூடாது என்று வலியுறுத்தியும், வேலைவாய்ப்பில் ஆண்களும், பெண்களும் சமவிகிதத்தில் இருக்க வேண்டும்’’ என்பதை விளக்கியும் உரையாற்றினேன்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக