சென்னை, ஏப்.29 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 133ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2023) காலை 10.30 மணியளவில் சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் மாலை அணிவிக் கப்பட்டு, சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த புரட்சிக் கவிஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன், பிரச்சார செய லாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன், செயலாளர் ஆ. வீரமர்த்தினி, வழக்குரைஞர் சு. குமாரதேவன், வழக்குரைஞர் துரை. அருண், மாநில திராவிட மாணவர் கழக செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில திராவிடர் தொழிலாளர் அணி செயலாளர் மு. சேகர், திராவிடர் தொழிலாளர் அணி பேரவை செயலாளர் கருப்பட்டி சிவகுருநாதன், திராவிடர் தொழிலாளர் அணி பொருளாளர் மா. இராசு, அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வம், மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் சுரேசு, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ், மாநில பெரியார் சமூகக் காப்பணி இயக்குநர்
சி. காமராஜ், சென்னை மண்டல தலைவர் தி.இரா. இரத்தினசாமி, தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைத் தலைவர் மயிலை டி.ஆர். சேதுராமன், துணைச் செயலாளர்கள் கோவி. இராகவன், அரும்பாக்கம் சா. தாமோதரன், சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு. சண்முகப்ரியன், திருச்சி மண்டல திராவிடர் தொழிலாளர் அணி தலைவர் க. முபாரக், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் நீலாங் கரை ஆர்.டி. வீரபத்திரன், வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் கி. இராமலிங்கம், இளைஞரணி செயலாளர் சு. அரவிந்த்குமார், ஆவடி மாவட்ட செயலாளர் க. இளவரசு, அமைப்பாளர் உடுமலை வடிவேல், பூவை செல்வி, பூவை. க. தமிழ்ச்செல்வன்,
ச. விசித்திரா, சைதை தென்றல், சீர்காழி கு.நா. இராமண்ணா, மு.இரா. மாணிக்கம்,
சி. செல்லப்பன், பதம்குமார், வாசு,
கே. இராசேந்திரன், பொறியாளர் குமார்,
மு. ரங்கநாதன், மகேஷ், அண்ணா - மாதவன், கமலேஷ், நிலவன், கவிஞர் வா.மு. சேது ராமன், கவிஞர் கண்மதியன், புலவர்
பா.வீரமணி மற்றும் திரளான தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக