வியாழன், 20 ஏப்ரல், 2023

மகளிர் பெரியாரியப் பயிற்சிப் பட்டறை சென்னை மண்டல மகளிரணி - மகளிர் பாசறை முடிவு


5

சென்னை, ஏப். 20- சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி, திரா விட மகளிர் பாசறையின் ஏப்ரல் மாத கலந்துரையாடல் கூட்டம் 8.4.2023 இரண்டாவது சனிக் கிழமை அன்று புதுவண்ணையில் உள்ள பெரியார் மாளிகையில் மகளிரணியைச் சேர்ந்த யுவராணி ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பகுதிக்கு அனைத்து மகளிர் தோழர்களும் சென்று கலந்து ரையாடி வரவேண்டும் என்ற நம் கழகத் தலைவர் அவர்களின் அறி வுரையின்படி சென்னை மண்டல மகளிர் அணியினரும் மகளிர் பாசறை தோழர்களும் நிகழ்ச்சி களை நடத்தி வருகின்றனர். புது வண்ணையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் தலைமை ஏற்ற யுவராணி தங்கள் பகுதிக்கு வருகை புரிந்துள்ள தோழர்கள் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார்.

முன்னிலை  வகித்த கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, இந்த மாதக் கலந்துரையாடலின் பொரு ளாக குறிப்பிடப்பட்ட வைக்கம் போராட்டத்தில் மகளிர் பங்கு பற்றியும், ஏப்ரல் மாதம் என்பது டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பிறந்த மாதம் என்பதால் அவர் பெண்களுக்காக ஆற்றிய தொண்டுகள் பற்றியும் எடுத்துக் கூறி உரையாற்றினார்.

கருத்துரை ஆற்றிய திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் மதிவதனி, தந்தை பெரியார் 1924-1925இல் தலைமை ஏற்று கேரள மாநிலம் வைக்கத்தில்  உள்ள கோவிலைச் சுற்றியுள்ள நான்கு தெருக்களில் ஈழவர் உட் பட தாழ்த்தப்பட்டோர் நடந்து செல்ல இருந்த தடையை நீக்குவ தற்காக நடைபெற்ற வைக்கம் போராட்டத்தினைப் பற்றியும், அண்ணல் அம்பேத்கர் அவர்க ளின் தலைமையில் 1929 இல் அன்றைய பம்பாய் மாகாணத்தில் மகத் என்னும் ஊரில் இருந்த குளத்தில் தாழ்த்தப்பட்டோர் நீர் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற போராட் டம் பற்றியும் மிக விரிவாகவும் எளிமையாகவும் வந்திருந்த குழந் தைகளுக்கும் புரியும் வண்ணம் மிகச் சிறப்பாக உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் முடிவில் கழகப் பொதுச் செயலாளர் வரவிருக்கும்  மே மாதத்தில் நடைபெற ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்த மகளிர் பெரியாரியல் பயிற்சி பட்டறை பற்றிய செய்தியினை ஒரு தீர்மான மாகவும், பெண்கள் அனைவரும் இணைந்து ஒரு சிறு சுற்றுலா சென்றுவர ஏற்பாடு செய்வது என்பதை ஒரு தீர்மானமாகவும் முன்மொழிந்து சென்னை மண் டல திராவிடர் கழக மகளிரணி செயலாளர் இறைவி உரையாற் றினார்.

நிகழ்ச்சியில், சுயமரியாதை திரு மண நிலைய இயக்குநர் பசும் பொன் செந்தில் குமாரி, க. பண் பொளி, மு.செல்வி, மு.பவானி, த.திராவிட எழில், த.இளவரசி, த.யாழ் தமிழ், த.திராவிட இலக் கியா, ச.தமிழ்ச்செல்வி, ம.செம் மொழி,எண்ணூர் விஜயா, நித்யா செ.ப.தொண்டறம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாகப் புதுவண்ணை பெரியார் மாளிகையில் வைக்கப் பட்டிருக்கும் தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கும், மேனாள் வடசென்னை மாவட்டத் தலைவர் க.பலராமன் சிலைக்கும்  மாலை அணிவிக்கப் பட்டது. நிகழ்ச்சி சிறப்பாக நடை பெறுவதற்கு  கழகத் தோழர்கள் எண்ணூர் மோகன், மணிவண் ணன், செல்வம் ஆகியோர் உதவி புரிந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக