வியாழன், 27 ஏப்ரல், 2023

சென்னையில் பா.ஜ.க.வுக்கு எதிராக வி.சி.க. ஆர்ப்பாட்டம் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் மற்றும் தலைவர்கள் பங்கேற்பு

 

10

சென்னை, மார்ச் 3- வன்முறையைத் தூண்டும் விதமாக செயல்பட்டு வருகின்ற பாஜகவுக்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட் டம் அருகில் 28.2.2023 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன்  ஆர்ப்பாட் டத்தில் கண்டன உரையாற்றி னார்.  பாஜகவுக்கு எதிராகவும், சனாதன சக்திகளுக்கு எதிரா கவும் கண்டன முழங்கங்களை எழுப்பினார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, சிபிஅய்எம் கட்சியின் தமிழ் நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், மனித நேய மக்கள் கட்சியின் பொது செயலாளர் அப்துல் சமது, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் உள் ளிட்ட பல்வேறு அமைப்புக ளின் பொறுப்பாளர்கள் ஆர்ப் பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கு முயலும் சனாதன சக்திகளைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள்  கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டு பாஜகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத் தில் ஏராளமானோர் பங் கேற்றது மட்டுமல்லாமல், கைகளில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்திற்கு தங்களது முழு ஆதரவையும் அளித்தனர்.  

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன், பதற்றத்தை உருவாக்க வேண் டுமென சிலர் திட்டமிட்டு செயல்படுகின்றனர். பெரியார் இயக்கங்களைச் சார்ந்தவர் களை திட்டமிட்டு சீண்டு கிறார்கள். பெரியார் சிலை மீது சாயம் பூசி வம்புக்கு இழுக் கிறார்கள். அம்பேத்கரை இந் துத்வாவின் அடையாளமாக காட்டுகிறார்கள் எனப் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக