தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி - சந்தா வழங்கினர்
December 09, 2022 • Viduthalai
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில், ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன் தலைமையில், மூன்றாவது தவணையாக, விடுதலை சந்தாவுக்கான தொகை ரூ.2,00,000 வழங்கப்பட்டது.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி "100 விடுதலை" நாளிதழ் ஆண்டுச் சந்தா ரூ.2,00,000த்தை (இரண்டு லட்சம்) பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர் ஈரோடு த. சண்முகம், மாவட்ட தலைவர்
கு.சிற்றரசு, மண்டல தலைவர் இர. நற்குணன், மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், தொழிற்சங்க செயலாளர் தே.காமராஜ், கோ.திருநாவுக்கரசு ஆகியோரிடம் வழங்கினார்.
ஒரத்தநாடு நகர திராவிடர் கழகத்தின் சார்பில், வாழ்நாள் சந்தா (6) 1, 20,000, ஓராண்டு சந்தா (10) 20,000, மொத்தம் 1,40,000த்தை, தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனாரிடம் 30.11.2022 மாலை 5 மணி அளவில் தஞ்சை பெரியார் இல்லத்தில், ஒரத்தநாடு நகர தலைவர், பேபி ரெ.ரவிச்சந்திரன் தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி, ஒரத்தநாடு நகர இளைஞரணி தலைவர் பேபி ரெ.ரமேஷ் ஆகியோர் பெருமையுடன் வழங்கினர்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர் செல்வம், ஆவடி மாவட்டச்செயலாளர் க.இளவரசன், மாவட்ட தொழிலாளர்அணி தலைவர் கி.ஏழுமலை ,அம்பத்தூர் பகுதி தலைவர் பூ.இராமலிங்கம்.
சோழிங்கநல்லூர் மாவட்டத்தலைவர் ஆர்.டி.வீரபத்திரனிடம் தென்சென்னை தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதி கோவிலம்பாக்கம் டாக்டர் ஏ.அரங்கநாதன் விடுதலை வாழ்நாள் சந்தாவிற்கு ரூ.20,000த்தை வழங்கினார். உடன்: மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம்.மாவட்டச் செயலாளர் விசய் உத்தமன், மாவட்ட அமைப்பாளர் குழ.செல்வராசு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் விடுதலைநகர் பி.சி.செயராமன்.
தி.மு.க தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்குரைஞர் ச.முரசொலி விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமாரிடம் வழங்கினார். உடன்: மண்டலத் தலைவர் மு.அய்யனார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் அ.டேவிட் (21-11-2022)
நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரனிடம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பி.சி.செயராமன் விடுதலை வாழ்நாள் சந்தாவிற்கு ரூ.20,000த்தை வழங்கினார்.
பெரியார் திடல் வாகன ஓட்டுநர்கள் கே.என்.மகேஷ்வரன், கு.அசோக் குமார், எம்.முத்துராஜ், உ.அருள்மணி ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து நன்கொடை வழங்கினர்.
சிவகங்கை கழக மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் விடுதலை வாழ்நாள் சந்தா தொகை ரூ.20,000த்தை மேனாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசி மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார்.மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன்,சிவகங்கை மண்டல செயலாளர் அ.மகேந்திரராசன், சிவகங்கை மாவட்டம் தலைவர் வழக்குரைஞர் ச. இன்பலாதன், சிவகங்கை மாவட்ட செயலாளர் பெரு. ராசாராம், பொதுக்குழு உறுப்பினர் வேம்பத்தூர் அ.வீ. செயராமன், சிவகங்கை நகர தலைவர் இரா. புகழேந்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் ஆசிரியர் நி. இளங்கோ ஆகியோர். (12.11.2022)
திண்டிவனம் கழக மாவட்ட "சுயமரியாதைச் சுடரொளி" கந்தசாமி அவர்களின் மகள் மலர்விழி அய்ந்து விடுதலை ஆயுள் சந்தாவுக்காக ரூ. ஒரு லட்சத்தை (ரூ.1,00,000) கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரனிடம் வழங்கினார்.
காவல்துறை ஓய்வு பெற்ற கூடுதல் இயக்குநர் எஸ்.ராமநாதன் விடுதலை சந்தாவுக்காக ரூ.25,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன். (பெரியார் திடல் - 3.12.2022)
தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் தலைமையில் மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையில் பார்வதி நன்னனின் மகள் அவ்வை -தமிழ்ச்செல்வன் இணையர் விடுதலை வாழ்நாள் சந்தாவிற்கு ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினர். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன்.
தஞ்சை பேராசிரியர் நா.பெரியசாமி விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: மாவட்டத் தலைவர் சி. அமர்சிங்,மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி மாநகரத் தலைவர் பா.நரேந்திரன் (19-11-2022)
நீடாமங்கலம் ஒன்றியம், தி.முக வடக்கு ஒன்றிய செயலாளர் கே.வி.கே.ஆனந்த் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் கோ.கணேசன், நீடாமங்கலம் நகரத் தலைவர் பி.எஸ்.ஆர்.அமிர்தராஜ், பகுத்தறிவு ஆசிரியரணி மண்டல அமைப்பாளர் சி.இரமேஷ், மாவட்ட ப.க செயலாளர் உ.கல்யாணசுந்தரம், மாவட்ட இளைஞரணி செயலாளர் க.இராஜேஷ், நீடா ஒன்றிய செயலாளர் சக்திவேல் சே.சுருளிராஜன், (17-11-2022).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக