சென்னை,டிச.24- தந்தை பெரியார் 49ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (24.12.2022) அவர் பணியைத் தொடர்ந்து முடித்திட உறுதியேற்கும் நாளாக தமிழினத்தால் நன்றியுடன் நினைவு கூரப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பிலும், பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் சார்பிலும் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்சியில் தமிழர் தலைவர்
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் திருச்சியில் கழகத் தோழர்கள் புடைசூழ தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னையில் அமைதி ஊர்வலம்-கருத்தரங்கம்
சென்னையில் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் தலைமையில் பெரியார் படங்களுடன் கழகக் கொடி யேந்தி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. கழகப்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால் மற்றும் கழகப்பொறுப்பாளர்கள் அமைதி ஊர்வலத்தில் அணிவகுத்துச்சென்றனர். பெரியார் பிஞ்சுகள் பெரியார் படம் ஏந்தி அமைதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
சென்னை அண்ணாசாலை (சிம்சன் அருகில்) தந்தை பெரியார் சிலை அருகிலிருந்து தொடங்கி சிந்தாதிரிப்பேட்டை வழியே பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை அடைந்து அன்னை மணியம்மையார் சிலைக்கு கழக மகளிரணித் தோழர்கள் மாலை அணிவித்து எழுச்சி முழக்கமிட்டனர்.
பெரியார் திடலில் அமையப்பெற்றுள்ள தந்தைபெரியார் 21 அடி முழு உருவச்சிலை அருகில் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள், பல்வேறு அமைப்பினர் திரண்டு மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தந்தைபெரியார் நினைவிடத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் மலர் வளையம் வைக்கப்பட்டது. கழகத் துணைத் தலைவர் உறுதிமொழி கூற கழகப்பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் உறுதி யேற்றனர்.
கழக மகளிரணி சார்பில் அன்னை மணியம்மையார் நினை விடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
"சுயமரியாதைச் சுடரொளிகள்" நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
மகளிரணி
மோகனா வீரமணி, பெரியார் பன்னாட்டமைப்பு அமெரிக்கா, பொருளாளர் அருள் வீரமணி, சி.வெற்றிச்செல்வி, மருத்துவர் மீனாம்பாள், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, பெரியார் களம் இறைவி, மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, பெரியார் செல்வி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், பூவை செல்வி, வி.வளர்மதி, அஜந்தா உள்ளிட்ட மகளிர் அணித் தோழர்கள், பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்,ஓய்வுபெற்ற நீதிபதி பரஞ்ஜோதி, வழக்குரைஞர் சு.குமாரதேவன், பத்திரிகையாளர் அண்ணாதுரை, ஆடிட்டர் இராமச்சந்திரன், சென்னை மண்டல தலைவர் தி.இரா.இரத்தினசாமி, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி.வீரபத்ரன், செயலாளர் விஜய் உத்தமராஜ், வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், ஆவடி மாவட்ட செயலாளர் க.இளவரசன், தி.வே.சு.திருவள் ளுவன் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம்
கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் ‘தலைமுறைகள் கடந்து தந்தை பெரியார்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடை பெற்றது. மாநில இளைஞரணி செயலாளர் சோ.சுரேஷ் வரவேற்றார். மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை தொடக்க உரையாற்றினார்.
கருத்தரங்கம் குறித்து கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் குறிப்பிடுகையில்,
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியூர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை எப்படி நடத்துவது என்று இருந்தோம். அடுத்த தலைமுறைக்கு தந்தைபெரியாரைக் கொண்டு செல்லும் இளைஞர் படை உள்ளது என்பதன் அடையாளமாக இந்த மேடையில் வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும், திராவிடர் கழகத்தில் உறுப்பினராக இல்லா விட்டாலும், தந்தைபெரியார் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் சிந்தனையாளர்களாக உள்ளார்கள். கருத்தரங்கில் கழகப்பொதுச்செயலாளர் அன்புராஜ் தலைமை ஏற்றிருக்கிறார். அத்துணைப்பேருக்கும் பாராட்டுகள் என்றார்.
‘தலைமுறைகள் கடந்து தந்தை பெரியார்’ கருத்தரங்கம்
"பெண்ணுரிமைப் பேரிகையாய்..." தலைப்பில் திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, "சம உரிமைச் சமூகப் படைப்பில்..." தலைப்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர்
மு.வீரபாண்டியன், "ஜாதி ஒழிப்புச் சமர்க்களத்தில்..." விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, "மொழி இன உரிமைப்போரில்...". தலைப்பில் தி.மு.க. மாணவர் அணித் தலைவர் இரா.ராஜீவ் காந்தி ஆகியோர் பங்கேற்று கருத்தரங்கத்தில் எழுச்சி உரையாற்றினர். சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட கருத்தரங்கில் உரையாற்றிய அனைவருக்கும் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் இயக்க வெளியீடுகளை வழங்கி சிறப்பு செய்தார். கவிஞர் காசி.முத்து மாணிக்கம், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் பேராசிரியர் அரங்கசாமி, மூதறிஞர் குழு தலைவர் பேராசிரியர் தேவதாஸ், பொருளாளர் பொறியாளர் முனைவர் த.கு.திவாகரன், விடு தலைச் சிறுத்தைகள் கட்சி கு.செல்வம், அமைப்புச்செயலாளர் வி.பன்னீர்செல்வம்,பெரியார் நூலக வாசகர் வட்டப் பொறுப்பா ளர்கள் புரவலர் கி.சத்தியநாராயணன், கு.தென்னவன், செல்லப்பன், தென்மாறன், சனார்த்தனன் உள்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.
பல்வேறு அமைப்புகளின் சார்பில் நினைவிடத்தில் மரியாதை
பெரியார் நினைவிடத்தில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
மதிமுக
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மதிமுக பொறுப்பாளர்கள் துரை வைகோ, மல்லை சத்யா, ஜீவன், சுப்பிரமணி, இராஜேந்திரன், மாவை மகேந்திரன், பூவை பாபு, சிக்கந்தர், தென்றல் நிசார் உள்ளிட்ட பொறுப்பாளர்கள்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு தலைமையில் கு.செல்வம், மகளிரணி ஆதிமொழி, சாந்தி,பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அம்பேத்வளவன், இராவணசங்கு உள்ளிட்ட பொறுப்பாளர்கள்
தமிழ்நாடு காங்கிரசு
தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி சார்பில் பட்டியலினப்பிரிவு மாநில தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் பொறுப்பாளர்கள்
சிபிஅய்
சிபிஅய் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் பொறுப்பாளர்கள்
அதிமமுக
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வழக்குரைஞர் பசும்பொன் பாண்டியன் தலைமையில் அக் கட்சிப்பொறுபபாளர்கள்
பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு
அகில பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி, துணைத் தலைவர் ஏ.ராஜசேகரன், சென்சஸ் துறை ராஜ்குமார், லோகநாதன், யூனியன் வங்கி ஓபிசி அமைப்பின் நிர்வாகிகள் எஸ். நடராசன், ஞா.மலர்க்கொடி, பி.லோகேஷ் பிரபு, எஸ்.சேகரன், பி.வேலாயுதம், கே.சந்திரன், எஸ்.சத்தியமூர்த்தி, ஏ.கோபு ஆகியோர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக