• Viduthalai
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கழகப்பொதுச்செயலாளரிடம் விடுதலை சந்தாவுக்காக ரூ.1 லட்சம் வழங்கினார். இதுகுறித்து அவர் தம் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: பகுத்தறிவு, சமூகநீதிக் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கும் பெரும் பணியைத் தொய்வின்றிச் செய்து வரும் 'விடுதலை' நாளிதழுக்கு எனது சிறு பங்களிப்பாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை ஆயுள் சந்தாவாக திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் அன்புராஜ் அவர்களிடம் இன்று வழங்கினேன். வாழ்க பெரியார்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக