தென் சென்னை திராவிடர் கழகம்

நடவடிக்கை மற்றும் செயல்பாடு இடம் பெறும்

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சிந்தனை செய்வோம்
  • தமிழ் மலர்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வெற்றிவலவன் பக்கம்
  • சமூக நீதி
  • Rationalist forum-Periyar-Tamizh Nadu

சனி, 3 டிசம்பர், 2022

90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் ஏற்புரை


  December 03, 2022 • Viduthalai

 ‘திராவிட மாடல்' ஆட்சி என்பது இரும்புக்கோட்டை - இதில் மோதினால் உடையப் போவது மண்டைதான்!

இந்தியா முழுவதும் ‘திராவிட மாடல்' அரசு தேவை!

முதலமைச்சர் அவர்களே, நீங்கள் சட்டப் போராட்டம் நடத்துங்கள் -

நாங்கள் மக்கள் போராட்டத்தை நடத்துகின்றோம்!

சென்னை, டிச.3 தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்' அரசு - நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் நடத்தும் இந்தத் ‘திராவிட மாடல்' அரசு இந்தியா முழுவதும் பரவவேண்டும் என்றும், நீங்கள் சட்டப் போராட்டம் நடத்தினால் நாங்கள் மக்கள் போராட்டம் நடத்துவோம் - நம் கொள்கையில் வெற்றி பெறுவோம் என்றும் தம் ஏற்புரையில் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தமிழர் தலைவர் ஆசிரியரின் 

90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

நேற்று (2.12.2022)  மாலை சென்னை கலைவாணர் அரங்கில், ‘‘தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா''வில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஏற்புரையாற்றினார்.

அவரது ஏற்புரை வருமாறு:

அனைத்துத் தலைவர்களுக்கும் 

வணக்கம்!

மிகுந்த எழுச்சியோடும், நெகிழ்ச்சியோடும், மாறாத மன உணர்ச்சியோடும் நடைபெறக்கூடிய இந்நிகழ்ச்சி யில், மீண்டும் வயதைக் குறைத்து - பணியை நிறைத்து எனக்கு இன்றைக்கு  ‘‘சரியான பணியைச் செய்து கொண்டிரு'' என்பதற்கு ஆணையிட்டு இருக்கிற என்னுடைய அருமைச் சகோதரர் மாண்புமிகு மானமிகு ‘திராவிட மாடல்' என்ற ஆட்சியை உலகம் போற்றக் கூடிய அள விற்கு, அவர்களுடைய விடியல் ஆட்சியின் மூலமாகத் தந்துகொண்டிருக்கின்ற முதலமைச்சர் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் மிகச் சிறப்பான கருத்துகளை எடுத்து வைத்து வரலாற்றுக் குறிப்புகளையே மிக ஆழமாகச் சொல்லி அமர்ந்திருக்கக் கூடிய திராவிட இயக்கத்தினுடைய போர் வாள் அன்பிற்குரிய அருமைச் சகோதரர் வைகோ அவர்களே,

எழுச்சித் தமிழர் நம்முடைய அன்பிற்குரிய சகோதரர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்களே,

அதேபோல, பண்பின் பெட்டகமாக இருக்கக்கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் அன்பிற்குரிய அய்யா காதர்மொய்தீன் அவர்களே,

அதேபோன்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டு செயலாளர் அன்பிற்குரிய தோழர் பாலகிருஷ்ணன் அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தமிழ்நாட்டு செயலாளர் அன்பிற்குரிய தோழர் முத்தரசன் அவர் களே, வணக்கத்திற்குரிய மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்களே,

இந்நிகழ்வில் சிறப்பான வகையில், என்னோடு எப்போதும் பயணித்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல, இந்த விழாவை இந்த அளவிற்கு வற்புறுத்தி ஏற்பாடு செய்வதற்கு அடித்தளமாக இருந்து, நிகழ்ச்சிக்கும் தலைமையேற்று இருக்கக்கூடிய கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, வரவேற்புரையாற்றிய கழகப் பொருளாளர் குமரேசன் அவர்களே,

இன்றைக்குத் தவிர்க்க முடியாத அளவிற்கு ஒரு துயர நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவேண்டிய கட்டாயத் தின் காரணமாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் இங்கு வர வாய்ப்பு இல்லாவிட்டாலும், வருகை தந்துள்ள தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் செய்தித் தொடர்பாளரும், சிறந்த எழுத்தாளரும், சிந்தனையாளருமான தோழர் கோபண்ணா அவர்களே,

இந்த நிகழ்ச்சியில் சிறப்பான வகையில், ஓர்இரட்டிப்பு மகிழ்ச்சி - ஒரு போனஸ் மகிழ்ச்சி என்று சொல்லக்கூடிய அளவிலே, பன்னாட்டு விருது என்ற பெயரால், என்னுடைய பெயரால் கடந்த 22 ஆண்டு களுக்கு முன்பிருந்து, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் காலத்தில் ஆரம்பித்து விருது வழங்கி வருகின்ற, பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர், அருமைத் தோழர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களே, பேராசிரியர் முனைவர் இலக்குவன்தமிழ் அவர்களே, பேராசிரியர் அரசு.செல்லையா அவர்களே, டாக்டர் திருமிகு அன்பிற்குரிய அருமை நண்பர் பாராட்டுதலுக் குரிய தோழியர் சரோஜா இளங்கோவன் அவர்களே, இந்த அமைப்பினுடைய பொருளாளர் அருட்செல்வி வீரமணி அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற எங் களுடைய மாவட்டத்தின் அமைச்சர் சேகர்பாபு அவர்களே, மூத்த அமைச்சரான நம்முடைய பாசறையைச் சார்ந்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்களே,

அதேபோன்று, புலம் பெயர்ந்தோருக்கெல்லாம் சிறப்பான புதுவாழ்வு தரக்கூடிய அருமை நண்பர் மஸ்தான் அவர்களே,

எல்லா மக்களையும் வாழ வைத்துக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாசில்லாத மா.சு. அவர்களே,

இந்தக் கொள்கைகளைத் திரட்டி என்றைக்கும் முழங்கக்கூடிய சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும், கொள்கைப் பரப்புச் செயலாளராகவும், இயக்கத்தி னுடைய துணைப் பொதுச்செயலாளராகவும், இந்த இயக்கத்தின் வார்ப்பாகவும் இருக்கக் கூடிய ஆ.இராசா அவர்களே,

துணை மேயர் அவர்களே, தி.மு.க. செய்தித் தொடர்பாளர் அருமை நண்பர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,

மற்றும் இங்கே இருக்கக்கூடிய இயக்கப் பொறுப் பாளர்களே, உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒலிக்காத மணியல்ல!

இங்கே நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஓர் ஆணையிட்டு இருக்கிறார்.

முதலமைச்சருடைய உத்தரவை ஆணையாகக் கருதி, ஏற்றுக்கொள்ளவேண்டும். 

மணி ஒலித்திட வேண்டும் என்று சொன் னார்கள்.

ஒலிக்காத மணியாக இது ஒருபோதும் இருந் ததில்லை. ஓசைகள் யாருக்குக் கேட்கவேண்டுமோ, அவர்களுக்குக் கேட்டே தீரவேண்டிய அளவிற்கு இந்த மணி ஓசை இருக்கும்.

மணி ஓசை முன்னால் - யானை வரும் பின்னால்!

அதுபோல, எங்கள் ஓசை வரும் - இந்த ஆட்சியி னுடைய செயல்திறன் என்கிற யானை இருக்கிறதே, அது பின்னால் வரும் என்று சொல்லக்கூடிய ஓர் அற்புதமான ‘திராவிட மாடல்' ஆட்சியை உலகம் கண்டு வியந்து கொண்டிருக்கிறது. எதிரிகள் நிலைகுலைந்து கொண் டிருக்கின்றார்கள்.

அதன் காரணமாகத்தான், என்ன பேசுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஆட்சியின்மீது குற்றம் சொல்வதற்கு எதுவுமே இல்லை.

தேடுகிறார்கள், தேடுகிறார்கள், தேடுகிறார்கள்!

வாடுகிறார்கள், வாடுகிறார்கள், வாடுகிறார்கள்!

ஓடுகிறார்கள், ஓடுகிறார்கள், ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், என்ன சொல்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

மறக்கவே முடியாத 

‘மிசா' சிறைச்சாலைக் கொடுமை!

சில சம்பவங்களைக் குறிப்பிட்ட நேரத்திலே, மாண்பு மிகு  முதலமைச்சர் அவர்கள், குடும்பப் பாசத்தோடு சொல்கிறேன், என்னுடைய அருமைச் சகோதரர் அவர்கள், நெருக்கடி காலம் - 45 ஆண்டுகளுக்கு முன்பு - இந்த இடத்திலிருந்து மிக அருகில்தான் இருந்தது அந்த சிறைச்சாலை. அப்படிப்பட்ட இடத்தில், அவர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட வந்து கீழே விழுந்த நேரத்தில், அவருக்குத் திருமணமாகி சில மாதங்கள்தான் ஆகியிருக்கின்றன. முதல் சிறைவாசம் அவருக்கு. நாங்களோ கொஞ்சம் அனுபவம் உள்ளவர்கள். ஆனாலும், மிசா காலத்தில்தான் நாங்கள் அடிபட்டது கொடுமையானது!

வெளிநாட்டில் நம்முடைய தோழர்கள் சந்தித்த நேரத்தில், உங்களுடைய வாழ்க்கையினுடைய சிறந்த பகுதி எது என்று என்னிடத்தில் கேள்வி கேட்கப்பட்டது.

இதுவரை சிறந்த பகுதி எதுவென்று சொல்ல முடியவில்லை. ஆனாலும், இனிமேல் வரலாம் என்றேன்.

இதுவரையில் நடந்ததைப்பற்றி ஒன்று சொல்லுங்கள் என்று கேட்டார்கள்.

நாங்கள் எல்லாம் சிறைச்சாலையில் அடிபட்டு அந்த அனுபவத்தைப் பெற்றோமே, மிசா காலத்தில், அந்த சிறைச்சாலை அனுபவம்தான் எங்களுடைய வாழ்க் கையில் பெறற்கரிய பேறு - சிறந்த அனுபவம். காரணம், அவ்வளவு மோசமான ஒன்றை, இனிமேல் வாழ்க்கையில் எந்த இடத்தில் சந்தித்தாலும், அதனை ஏற்கக்கூடிய பக்குவத்தை அது தந்திருக்கிறது - பாடத்தை நாங்கள் பெற்றிருக்கிறோம் என்று சொன்னேன்.

அந்த நிகழ்ச்சியை இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நினைவூட்டினார்.

எதிரிகள், ஓடுகிறார்கள், தேடுகிறார்கள் என்று ஏதோ வார்த்தை அலங்காரத்திற்குச் சொல்லவில்லை நண்பர் களே!

இப்படிப்பட்ட இவ்வளவு பெரிய கொடுமை நடந்து, அதற்குப் பிறகு ஜஸ்டிஸ் இஸ்மாயில் அவர்கள் ஓர் ஆய்வுக் குழு. நீதிக்கும், நேர்மைக்கும் பெயர் போன நீதிபதி அவர்.

அவருடைய தலைமையில் ஓர் ஆய்வுக் குழு அமைத்து, விசாரணை செய்யப்பட்டது. சிறைச்சாலை யில் எப்படிப்பட்ட கொடுமைகள் நடந்தன என்று சொன்ன நேரத்தில், அது அப்படியே பதிவாகியிருக்கிறது. எப்படி அவர் அடிபட்டார்? என்னென்ன சூழ்நிலையில் நடந்தது? என்பதை அரசாங்கத்தினுடைய விசாரணை ஆணையம் - ஆளுநர் அமைத்த விசா ரணை ஆணையத்தில் பதிவாகி இருக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை, நீதிபதியினுடைய விசாரணை ஆணையம் - அதிலும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவிற்கு நடைபெற்ற ஒரு சம்பவத்தை அப்படியே மறைத்து - அவர் மிசா சட்டத்தில் கைதாகி சிறைச்சாலைக்குப் போனதில்லை என்று ஒரு பா.ஜ.க. தலைவர் பேசுகிறார் என்றால், அவர்களிடம் கோணிப் புளுகன் கோயபல்சுகூட தோற்றுப் போகக்கூடிய அளவிற்கு இருக்கிறான் என்றால், வேறு சரக்கு இல்லை அவர்களுக்கு - இதைவிட குற்றம் சொல்வதற்கு வேறு இல்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

ஆகவேதான், அவர்கள் எதை வேண்டுமானாலும், அவமானம் செய்யும் வகையில் சொன்னாலும், அதற்குப் பதில் சொல்லும் வண்ணம் நான் ஆதாரத்தோடு அன் றைக்கு எடுத்துக்காட்டினேன்.

எனவேதான், மணியோசை எப்பொழுதெல்லாம் ஒலிக்கவேண்டுமோ, அப்பொழுதெல்லாம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

மதவாதத்தை ஒழிக்க 

ஒன்றுசேரும் காலம் இது!

மதவாதிகள், மதக் கருத்துகள் ஒருபக்கத்தில் இருந்தாலும், மற்றவர்களையெல்லாம் ஒருங் கிணைக்க வேண்டும் - வேகமாக - ஆபத்து வந்துவிட்டது - ஊர் கிராமத்துக்காரர்கள் எல்லாம் வாருங்கள் என்று அவர்களை கூட்டவேண்டு மானால், இப்பொழுதுகூட மாதா கோவிலில் மணி அடிப்பார்கள் - அந்த மணி அடித்தால், எல்லோரும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்று கிராமத்தில் ஒருமுறை உண்டு.

அதுபோல, இப்பொழுது மணி அடிக்கவேண் டிய நேரம் - எல்லோரையும் ஒன்று சேர்க்க வேண்டிய நேரம். அதைத்தான் இங்கே நம்முடைய தலைவர்கள் சொன்னார்கள்.

மிகப்பெரிய அளவிற்கு, இதுவரையில் காலங் காலமாக நம்முடைய தலைவர்கள் அரும்பாடு பட்டார்கள் - சமூகநீதிக்காக.

அமைச்சர்களாக இருக்கிறவர்கள் எல்லாம் ஊர்வலத்தில் முழக்கமிட்டார்கள், ‘‘எங்கள் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், பெருந் தலைவர் காமராசரும், முத் தமிழறிஞர் கலைஞரும் பெற்றுத் தந்த உரிமைகளை இழக்கமாட்டோம், இழக்கமாட்டோம்'' என்று ஊர்வலத்தில் முழக்க மிட்டவர்கள் இதோ அமைச்சர்களாக இருக்கிறார்கள் -அதுதான் இந்த ஆட்சிக்கே வலிமை. அதுதான் மிக முக்கியமானது. கொள்கை உணர்வு - அப்படிப்பட்டவற்றை விடுவோமா என்று கேட்டோமே, அந்தக் கேள்வி இன்றைக்குத் தேவைப்படுகின்ற கேள்வி மட்டு மல்ல - அதற்கு விடை காணவேண்டிய கட்டத்தை நாம் பெற்றிருக்கின்றோம்.

சட்டப் போராட்டத்தை நீங்கள் நடத்துங்கள் - மக்கள் போராட்டத்தை 

நாங்கள் நடத்துகிறோம்

அதற்கு விடை காணவேண்டும்; அந்த வகையில், சட்டப் போராட்டத்தை நீங்கள் நடத்துங்கள்; மக்கள் போராட்டத்தை நாங்கள் நடத்துவதற்குத் தயாராக இருக்கிறோம் என்கிற உறுதிமொழியைச் சொல்லும் நிலையில், எங்களுடைய முதலமைச்சர், ‘திராவிட மாடல்' ஆட்சி - ஏதோ சாதாரணமாக நீங்கள் நினைக்கவேண்டாம் - இது இரும்புக்கோட்டை - இது மணலால் கட்டப்பட்ட கோட்டையல்ல - இந்தப் பாறையில் மோதினால், உங்கள் மண்டை உடையுமே தவிர, கோட்டை சரியாது. காரணம், கோட்டையில் ஓட்டையும் போட முடியாது; கோட்டையில் அவர்கள் இருக்கிறார்கள்; கோட்டைக்குள் வேறு யாரும் நுழைந்துவிடவும் முடியாது. ஆரியம் வாலாட்டவும் முடியாது. ஆர்.எஸ்.எஸ். அதனுடைய பணிகளை, இங்கே பெரியார் மண்ணிலே நுழைத்துவிடவும் முடியாது என்று காட்டும் வகையில்தான் நண்பர்களே, கட்சிக்கு அப்பாற்பட்டு இருக்கிற அத்துணை கருஞ்சட்டைத் தோழர்களும் இருக்கிறோம். எங்களுக்குப் பதவியோ, மற்றவையோ கிடையாது - உயிர் துச்சமல்ல என்று கருதக்கூடிய அந்த உணர்வோடு இருக்கக் கூடியவர்கள் இருக்கிறோம்.

எனவேதான், உங்கள் பணி சிறக்கட்டும் - இந்த அணி அதைப் பாதுகாக்கும்.

அந்த உறுதிமொழியைச் சொல்வதுதான் என்னுடைய பதிலுரையாக இருக்குமே தவிர வேறு கிடையாது.

நாங்கள் பதவி வேட்டைக்காரர்கள் அல்லர்!

ஏனென்றால், எங்களை பதவியால் அளக்க முடியாது - அளக்கவேண்டிய தேவையும் இல்லை. ஒருபோதும் நாங்கள் புகழ் வேட்டையைத் தேடக் கூடியவர்கள் அல்ல.

உலக வரலாற்றிலே அப்படிப்பட்ட ஒரு தலைவர் என்ன சொன்னார், தொண்டர்களை அழைக்கும் நேரத்தில், ‘‘கெட்ட பெயர் எடுக்கிறவர்கள் என் பக்கத்தில் வாருங்கள்'' என்று சொன்னார்.

ஏனென்றால், போலித்தனமான நல்ல பெயருக்காக வரவேண்டிய அவசியமில்லை.

இந்த நாட்டினுடைய உரிமைகள், மொழி உரிமைகள், மாநில உரிமைகள், கல்வி உரிமைகள், சமூகநீதி உரிமைகள் அவை அத்தனையும் பாதுகாக்கவேண்டும் என்று சொல்லுகிறபொழுது,  கடந்த ஒன்றரை ஆண்டுகால ‘திராவிட மாடல்' ஆட்சி உலகத்தை ஈர்த்திருக்கிறது. ஒரு நூறாண்டு கால வரலாற்றைப் புரட்டிப் போட்டு இருக்கக்கூடிய அற்புதமான சாதனையை செய்த முதலமைச்சராக நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள்.

இந்தப் பொற்காலம் தொடரட்டும்!

இந்தப் பொற்காலம் தொடருவதற்காக, உங்களுடைய பலத்தை கூட்டுவதற்காக, உங்கள் பக்கத்தில்கூட அல்ல - உங்களுக்கு முன்னால் பாதுகாப்பாக இருப்பவர்கள் நாங்கள்.

பதவிக்கு ‘‘என்ட்ரி'' தேடக்கூடியவர்கள் அல்ல - பதவிக்குப்  போன உங்களுக்கு ‘‘சென்ட்ரி''யாக இருப்பவர்கள்

பதவிக்கு ‘‘என்ட்ரி'' தேடக்கூடியவர்கள் அல்ல - பதவிக்குப்  போன உங்களுக்கு ‘‘சென்ட்ரி''யாக இருப்பது எங்களுடைய வேலை என்பதை மட்டும் சொல்லி, அனைவருக்கும் நன்றி கூறி, முடிக்கின்றேன்.

இந்தியா முழுவதும் ‘திராவிட மாடல்' அரசு!

இளமை எப்பொழுதும் இந்தப் பணியைச் செய்யும் - இந்த நிகழ்ச்சி என்னை 90 ஆகப் பார்க்கவில்லை.

90, 90, 90 என்று சொன்னார்கள் -  90 என்ன 800-றா? என்று கேட்கக்கூடிய அளவிற்கு, அந்த உணர்வோடு திரும்புகிறேன்.

அது உங்களுக்குப் பாதுகாப்பு - உங்களுக்கு என்று சொன்னால், தனிப்பட்ட முறையில் அல்ல. 

‘திராவிட மாடல்' ஆட்சி இந்தியா முழுவதும் பரவும் - 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்படும்.

ஒரு காலத்தில் நாங்கள் எல்லாம் இப்படி இங்கே அமர்ந்திருப்போம் உயிரோடு என்று சிறைச்சாலையில் இருந்தபோது நினைக்கவில்லை.

சமூகநீதி - உறுதிமொழியை எடுக்கச் செய்துள்ளார் நமது முதலமைச்சர்

ஆனால், இன்றைக்கு அவர் முதலமைச்சராக இருந்து உத்தரவு போடுகிறார்.

எழுந்து நின்று உறுதி சொல்ல முடியாதவர்கள், மறுத்தவர்கள் எல்லாம்கூட இன்றைக்கு சமூகநீதிக்கு உறுதிமொழி சொல்லவேண்டிய அளவிற்கு, அவர்கள் உறுதிமொழியைச் சொல்கிறார்கள்.

அதற்காகத்தான் ‘வீரமணி சமூகநீதி விருது' - இந்த விருதைவிட பெரிய சாதனை என்னவென்றால், சொல்லக்கூடாதவர்கள் எல்லாம் உச்சரித்தார்கள் - சொல்லத் தயங்கியவர்கள் எல்லாம் உச்சரித்தார்கள்.

பெரியார் பிறந்த நாள் - சமூகநீதி நாள் என்று அறிவித்தார்கள்.

அம்பேத்கர் பிறந்த நாள் - சமத்துவ நாள் என்று அறிவித்தார்கள்.

அந்தத் திறமை, அந்த ஆற்றல், அந்தத் துணிச்சல், அதுதான் ஸ்டாலின் என்பதற்குப் பெயர்.

அதுதான், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதிலேயே எல்லாமும் அடங்கியிருக்கிறது.

பெரியார் மண்ணை 

காவி மண்ணாக்க முடியாது!

ஆகவேதான், அப்படிப்பட்ட வீரம் செறிந்த பெரியார் மண்ணை ஒருபோதும் காவி மண்ணாக ஆக்கிவிட முடியாது; ஒருபோதும் காலி மண்ணாகவும் ஆக்கிவிட முடியாது.

எத்தனைக் காலிகளையும், காவிகளையும் நீங்கள் சேர்த்தாலும், அதைச் சந்திப்பதற்கு மக்கள் தயார்! மக்கள் தயார்!! மக்களை ஆயத்தப்படுத்த நாங்கள் தயார்! தயார்!!

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரையாற்றினார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:08 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: 90வயது, ஆசிரியர், ஏற்புரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

திராவிடம் வெல்லும்

திராவிடம் வெல்லும்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்
உறுதிமொழி ஏற்பு - பெரியமேடு

பகுத்தறிவும் மாணவர்களும்’சிறப்புக்கூட்டம்

பகுத்தறிவும் மாணவர்களும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்துகொண்டு பகுத்தறிவு உரையாற்றினார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(எச்) பிரிவின் படி அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு, தமிழ்நாட்டின் தி.மு.க. அரசுக்குப் பாராட்டு, பகுத்தறிவும் மாணவர்களும் எனும் தலைப்பில் நேற்று (9.9.2024) மாலை 6.30 மணிக்கு, சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் ஜீவானந்தா சாலையில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரு.அண்ணாமலையின் தலைமையில் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தா.மீ.நா. தீபக், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ,அருள்மொழி, துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்வில் இணைப்புரை வழங்கி நெறிப்படுத்தினார். துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, தலைமை நிலைய அமைப்பாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சி. செங்குட்டுவன், டி.ஆர்.சேதுராமன், மு.ந.மதியழகன், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன்,வழக்குரைஞர் துரை அருண், ந.மணிதுரை, பெரியார் யுவராஜ், வி.வளர்மதி, மு.பவானி, வி.தங்கமணி, ச.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Wikipedia

தேடல் முடிவுகள்

சிறப்புடைய இடுகை

திருச்சி கருஞ்சட்டைப் பேரணி - 'ஜூனியர் விகடன்', 'நக்கீரன்' பார்வையில்..

"பிஜேபி-யுடன் சேருவோர் இனத்துரோகிகள்!" "பெரியாருக்கு செருப்பு மாலை போட சிலர் அறைகூவல் விடுக்கிறார்கள். அதனால்தான், இங்க...

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16
தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில்-அறநிலையத்துறை-நுங்கம்பாக்கம்
Powered By Blogger

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

லேபிள்கள்

  • 'முகம்' மாமணி
  • 1000 ஆவது நிகழ்ச்சி
  • 1000ஆவது நிகழ்ச்சி
  • 13மாவட்டம்
  • 1985
  • 2020
  • 2021
  • 2022
  • 2025
  • 2053
  • 6 மாவட்டங்கள்
  • 90வயது
  • 9ஆவது அட்டவணை
  • அ.பாபு
  • அகற்றம்
  • அசோக் நகர்
  • அஞ்சலா
  • அஞ்சாமை
  • அடையாறு
  • அண்ணா
  • அண்ணா நினைவு நாள்
  • அண்ணா பிறந்தநாள்
  • அண்ணாநகர்
  • அதிரடி அன்பழகன்
  • அம்பேத்கர்
  • அம்பேத்கர் பாலம்
  • அமுதவள்ளி
  • அமைச்சர்
  • அமைதிப்பேரணி
  • அமைந்தகரை
  • அமைப்பு
  • அய்ந்தாம் பயணக்குழு
  • அய்யாவின் அடிச்சுவட்டில்
  • அய்ஸ் அவுஸ்
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சுனன்
  • அரங்கண்ணல்
  • அரங்கநாதன்
  • அரங்கம்
  • அரியலூர்
  • அரும்பாக்கம்
  • அரும்பாக்கம்< சா. தாமோதரன்
  • அருள்
  • அருள்மொழி
  • அவ்வை நடராசன்
  • அவமதிப்பு
  • அழிப்பு
  • அளிப்பு
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிப்பு
  • அறிவிப்பு
  • அறிவிப்பு பலகை
  • அறிவுக்கரசு
  • அன்பளிப்பு
  • அன்பு
  • அனகை ஆறுமுகம்
  • அனைத்து கட்சி
  • அனைத்து ஜாதியினர்
  • ஆ.ராசா
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் பிறந்தநாள்
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியருக்கு பாராட்டு
  • ஆசைத்தம்பி
  • ஆட்சியர் அலுவலகம்
  • ஆடிட்டர் ராமச்சந்திரன்
  • ஆண்டு சந்தா
  • ஆண்டு மலர்
  • ஆதித்தமிழர்
  • ஆதித்தனார்
  • ஆம்ஸ்ட்ராங்
  • ஆயிரம் விளக்கு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரம் வீரப்பன்
  • ஆலந்தூர்
  • ஆவடி
  • ஆளுநர்
  • இசையின்பன்
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீட்டைக் காக்க
  • இடஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு ஆணை
  • இடிப்பு
  • இணையதளம்
  • இணையேற்பு
  • இணையேற்பு நாள்
  • இதழ்
  • இதழ் வெளியீடு
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்தித் திணிப்பு
  • இந்திய எதிர்ப்பு
  • இந்திய மாணவர் சங்கம்
  • இந்திரா நகர்
  • இந்திராநகர்
  • இயக்க நிதி
  • இரங்கல்
  • இரண்டாம் கட்டம்
  • இரயில் நிலையம்
  • இராசவேலு
  • இராமநாதபுரம்
  • இராயப்பேட்டை
  • இராஜரத்தினம் ஸ்டேடியம்
  • இராஜா அண்ணாமலைபுரம்
  • இருசக்கர வண்டி
  • இல்லத் திறப்பு
  • இலங்கைத் தூதரகம்
  • இலயோலா
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இளைஞர் அணி மாநாடு
  • இளைஞர்அணி
  • இளைஞரணி
  • இளைஞரணி மாநில மாநாடு
  • இறப்பு
  • இறுதி மரியாதை
  • இறுதி முழக்கம்
  • இறுதிப் பேட்டி
  • இறுதிப் பேருரை
  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை
  • ஈக்காட்டுத்தாங்கல்
  • ஈரோட்டுத் தீர்மானம்
  • ஈரோடு
  • ஈரோடு. சிறப்புத் தீர்மானம்
  • ஈழப்போராட்டம்
  • ஈழம்
  • உடல் நலன்
  • உடல்நலம்
  • உண்ணா நிலை
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உதயநிதி ஸ்டாலின்
  • உதவி
  • உயர்நீதிமன்றம்
  • உரை
  • உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
  • உறுதி முழக்கம்
  • உறுதிமொழி
  • உறுப்பினர் சேர்க்கை
  • ஊடகவியலாளர்
  • எத்திராஜ்
  • எத்திராஜன்
  • எதிர்ப்பு
  • எம் பி பாலு
  • எம்.பி பாலு
  • எம்.பி.பாலு
  • எம்.ஜி.ஆர். நகர்
  • எம்.ஜி.ஆர்.நகர்
  • எம்பி பாலு
  • எம்ஜிஆர் நகர்
  • எரிப்பு
  • எழிலன்
  • எழுச்சி மாநாடு
  • எழுத்தாளர் மன்றம்
  • எழும்பூர்
  • ஏழுமலை
  • ஏற்புரை
  • ஒழிப்பு
  • ஒளிப்படக் கண்காட்சி
  • ஒளிபெருக்கி
  • ஓசூர்
  • ஓட்டேரி
  • ஓபிசி வாய்ஸ்
  • க.தனசேகரன்
  • க.பார்வதி
  • கடலூர்
  • கடற்கரை
  • கடை அடைப்பு
  • கடை வசூல்
  • கண்டண போராட்டம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டன உரை
  • கண்டனக் கூட்டம்
  • கண்டனம்
  • கண்மதியன்
  • கந்தவேல்
  • கம்யூனிஸ்ட்
  • கருத்தரங்கம்
  • கருப்புக் கொடி
  • கருப்புக்கொடி
  • கரூர்
  • கரோனா
  • கல்வி
  • கல்வெட்டு
  • கலந்துரை
  • கலந்துரையாடல்
  • கலைஞர்
  • கலைஞர் நகர்
  • கவிஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிதை
  • கவிதைப் பித்தன்
  • கழக கொடி
  • கழக நிகழ்வுகள்
  • கழக போராட்டம்
  • கற்போம் பெரியாரியம்
  • கன்சிராம்
  • கனகரத்தினம்
  • கனடா
  • கனிமொழி
  • காஞ்சி
  • காட்டுப்பாக்கம்
  • காணொலி
  • காமராசர்
  • காமராசர் அரங்கம்
  • காமராஜ்
  • காரல் மார்க்ஸ்
  • கால்டுவெல்
  • காலச்சுவடு
  • காவிரி
  • கி வீரமணி
  • கி. இராமலிங்கம்
  • கி.வீரமணி
  • கிரகணம்
  • கிரிதரன்
  • கிளைக் கழகங்கள்
  • கிளைக்கழகம்
  • கு.க.செல்வம்
  • குட்டிமணி
  • குடந்தை
  • குடியரசுத்தலைவர்
  • குடியுரிமை
  • குடும்ப விழா
  • கும்பகோணம்
  • கும்மிடிப்பூண்டி
  • குமார்
  • குமாரி
  • குலக்கல்வி
  • குழந்தை நாதன்
  • குழு
  • குளக்கரை
  • குளித்தலை
  • கூட்டம்
  • கூடல் மாநாடு
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளம்
  • கைது
  • கையெழுத்து
  • கொடி ஏற்றம்
  • கொடியேற்றம்
  • கொடும்பாவி எரிப்பு
  • கொலை முயற்சி
  • கோ.சாமிதுரை
  • கோ.பா.சாரதி
  • கோ.வீ. ராகவன்
  • கோட்சே
  • கோட்டூர்
  • கோட்டூர்புரம்
  • கோடம்பாக்கம்
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோவிந்தசாமி
  • கோவில்
  • கோவில்பட்டி
  • கோவை
  • சக்திதாசன்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சட்டமன்றம்
  • சடுகுடு
  • சண்முகநாதன்
  • சண்முகப்பிரியன்
  • சத்யராஜ்
  • சந்தா
  • சந்தா வழங்கல்
  • சந்திப்பு
  • சந்திப்புக் கூட்டம்
  • சந்திரா
  • சமூக அநீதி
  • சமூக நீதி
  • சமூக நீதி மாநாடு
  • சமூகநீதி
  • சமூகநீதி மாநாடு
  • சனாதனம்
  • சா. தாமோதரன்
  • சா.தாமோதரன்
  • சாதி ஒழிப்பு
  • சாதிவாரி கணக்கெடுப்பு
  • சாமிநாதன்
  • சி.பா.ஆதித்தனார்
  • சி.பி.அய் – எம்
  • சிகாமணி
  • சிட்டிபாபு
  • சித்த மருத்துவர்கள்
  • சிதம்பரம்
  • சிந்தனை பலகை
  • சிந்தாதிரிப்பேட்டை
  • சிந்தாதிரிபேட்டை
  • சிலை திறப்பு
  • சிவகங்கை
  • சிறப்புக்கூட்டம்
  • சின்மயா நகர்
  • சு.குமாரதேவன்
  • சுதாகர்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்க நூற்றாண்டு
  • சுயமரியாதை இயக்கம்
  • சுவர் எழுத்து
  • சுவரெழுத்து
  • சுழலும் சொற்போர்
  • சுற்றுலாத்துறை அமைச்சர்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • சூளைமேடு
  • சூளைமேடு நன்கொடை
  • செங்கல்பட்டு
  • செங்கற்பட்டு
  • செங்குட்டுவன்
  • செங்கை
  • செந்தில்வேல்
  • செந்துறை
  • செயல்முறை
  • செயலவைத் தலைவர்
  • செயற்குழு
  • செயற்குழுக் கூட்டம்
  • செல்வப்பெருந்தகை
  • சென்னை
  • சென்னை அசோக் நகர்
  • சென்னை காஞ்சி
  • சென்னை பல்கலைக்கழகம்
  • சென்னை மண் டலம்
  • சென்னை மண்டலம்
  • சேகர்
  • சேத்துப்பட்டு
  • சேதுராமன்
  • சேலம்
  • சைதாப்-பேட்டை
  • சைதாப்பேட்டை
  • சைதை
  • சைதை எம்.பி பாலு
  • சைதை எம்.பி.பாலு
  • சைதை துரைசாமி
  • சைதை பாலு
  • சைதை மேற்கு
  • சோமங்கலம்
  • சோமு கனிமொழி
  • சோழிங்கநல்லூர்
  • டி கே நடராஜன்
  • டி.ஆர். சேதுராமன்
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டில்லி பெரியார் மய்யம்
  • டெய்சி
  • த.க.நடராசன்
  • த.புகழேந்தி
  • த.வீரசேகரன்
  • தங்கம்
  • தஞ்சாவூர்
  • தஞ்சை
  • தஞ்சை மாநாடு
  • தட்சிணாமூர்த்தி
  • தட்ஷணாமூர்த்தி
  • தடை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் சிலைக்கு மாலை
  • தந்தை பெரியார் பிறந்த நாள்
  • தமிழ்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் வார விழா
  • தமிழ்ச்செல்வன்
  • தமிழ்நாடு முதல்வர் உரை
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழ்ப் புலிகள்
  • தமிழச்சி
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழின எழுச்சி நாள்
  • தரமணி
  • தலைமை கழகம்
  • தலைமை செயற்குழு
  • தலைமைக் கழகம்
  • தலைமைச் செயற்குழு
  • தலையங்கம்
  • தாக்குதல்
  • தாம்பரம்
  • தாமோதரன்
  • தாராபுரம்
  • தி.தொ.க.
  • தி.மு.க. மாணவர்
  • திசை
  • திட்டங்கள்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமுக
  • தியாகராய நகர்
  • தியாகராயர்
  • தியாகராயர் கலையரங்கம்
  • தியாகராயர் நகர்
  • தியாகராயர் பிறந்த நாள்
  • திராவிட மகளிர்
  • திராவிட மாணவர் கழகம்
  • திராவிடக் கொள்கை அறிக்கை 
  • திராவிடர் எழுச்சி மாநாடு
  • திராவிடர் எழுச்சி மாநாடு!
  • திராவிடர் கழக மகளிரணி
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திராவிடர்கழகம்
  • திரிபுரா
  • திருச்சி
  • திருத்தணிகாசலம்
  • திருத்தம்
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமண நாள்
  • திருமண வரவேற்பு
  • திருமணநாள்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருவண்ணாமலை
  • திருவல்லிக்கேணி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளுவர் சிலை
  • திருவான்மியூர்
  • திருவிழா
  • திருவெற்றியூர்
  • திருவொற்றியூர்
  • திரைப்படம்
  • திவாகரன்
  • திறந்தவெளி மாநாடு
  • திறப்பு
  • தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
  • தீர்மான விளக்கம்
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துண்டறிக்கை
  • துப்பாக்கிசூடு
  • துயர் துடைப்பு
  • துரை.அருண்
  • துரைமுத்து
  • தூத்துக்குடி
  • தெருமுனை
  • தெருமுனை கூட்டம்
  • தெருமுனைக் கூட்டம்
  • தென் சென்னை
  • தென்சென்னை
  • தென்றல்
  • தென்னரசு
  • தே.செ.கோபால்
  • தேர்தல்
  • தேர்தல் பரப்புரை
  • தேனாம்பேட்டை
  • தேனி
  • தொலைக்காட்சி
  • தொலைக்காட்சி நிலையம்
  • தொழிலாளர்
  • தொழிலாளர் அணி
  • தொழிலாளர் அமைச்சர்
  • தொழிலாளரணி மாநாடு
  • தொழிற்சங்கம்
  • தோழர்
  • நடராசன்
  • நடராஜன்
  • நடவடிக்கைகள்
  • நரிமணம்
  • நலம் விசாரிப்பு
  • நன்கொடை
  • நன்னன்
  • நன்னன் குடில்
  • நன்னன் மகள்
  • நன்னிலம்
  • நாகநாதன்
  • நாகப்பன்
  • நாகர்கோயில்
  • நிதி
  • நிவாரணப் பணி
  • நிவாரணம்
  • நினைவகம்
  • நினைவகம் திறப்பு
  • நினைவிடம்
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவு நாள் கூட்டம்
  • நினைவுநாள்
  • நினைவேந்தல்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீட் ஒழிப்பு
  • நீட் தேர்வு
  • நீட் தேர்வு எதிர்ப்பு
  • நீட் விலக்கு
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதிகள்
  • நீதிபதிகள் தீர்ப்பு
  • நீதிபதிகள் நியமனம்
  • நீதிமன்றம்
  • நீலகண்டன்
  • நுங்கம்பாக்கம்
  • நுழைவுத் (CUET) தேர்வு
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு நிறைவு விழா
  • நேர்காணல்
  • நொச்சி நகர்
  • ப.க
  • பக்தவச்சலம்
  • பகுத்தறிவாளர் கழகம்
  • பகுதி
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சாட்சரம்
  • பட்டம்மாள்
  • பட்டாளம்
  • பட்டியல்
  • பட்ஜெட்
  • பட்ஜெட்டைக் கண்டித்து
  • படத் திறப்பு
  • படத்திறப்பு
  • படிப்பகம்
  • படுகொலை
  • பணி நிறைவு
  • பணிநிறைவு
  • பயணக் குழுவிற்கு வரவேற்பு
  • பயணம்
  • பயனாடை
  • பயிலரங்கம்
  • பயிற்சி
  • பயிற்சி பட்டறை
  • பயிற்சிப் பட்டறை
  • பரப்புரை
  • பரப்புரை பயணம்
  • பல்கலைக்கழகம்
  • பவழ விழா
  • பவழ விழா மாநாடு
  • பள்ளி
  • பா. தென்னரசு
  • பா.தட்சிணாமூர்த்தி
  • பாக்கியம்
  • பாடல் தொகுப்பு
  • பாத பூஜை
  • பாதுகாப்பு மாநாடு
  • பாம்குரோ
  • பார்த்தசாரதி
  • பார்வதி
  • பாரத் ஓவர்சீஸ் வங்கி
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பாராட்டுரை
  • பாலகிருஷ்ணன்
  • பாவாணர் மகன்
  • பாஸ்கர்
  • பி பி சிங்
  • பிரச்சார பயணம்
  • பிரச்சாரப் பயணம்
  • பிரபாகரன்
  • பிரேமா
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பினராய் விஜயன்
  • புகழ் பேரணி
  • புகார்
  • புத்தகக்காட்சி
  • புத்தாண்டு
  • புதிய பொறுப்பாளர்
  • புதிய பொறுப்பாளர்கள்
  • புதிய பொறுப்பு
  • புதுக்கோட்டை
  • புதுப்பேட்டை
  • புதுமை இலக்கிய தென்றல்
  • புதுமை இலக்கியத் தென்றல்
  • புரசை
  • புரசைவாக்கம்
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சிக்கவிஞர் விருது
  • புரட்சிக்கவிஞர் விழா
  • புரடசிக்கவிஞர்
  • புழல்
  • பூவிருந்தவல்லி
  • பெரியார்
  • பெரியார் ஆயிரம்
  • பெரியார் உலகம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் பிஞ்சு
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் பிறந்தநாள்
  • பெரியார் பெருந்தொண்டர்
  • பெரியார் மேளா
  • பெரியார் யுவராஜ்
  • பெரியார் விருது
  • பெலா மு. சந்திரா
  • பேட்டி
  • பேரணி
  • பேரமனூர்
  • பொதுக் குழு
  • பொதுக் கூட்டம்
  • பொதுக்-கூட்டம்
  • பொதுக்குழு
  • பொதுக்குழு உறுப்பினர்
  • பொதுக்கூட்டம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பாளர் கலந்துரையாடல்
  • பொறுப்பாளர்கள்
  • பொறுப்பு
  • பொன்.மாடசாமி
  • பொன்முடி
  • பொன்விழா
  • பொன்னேரி
  • போராட்டம்
  • மகளிர்
  • மகளிர் அணி
  • மகளிர் பாசறை
  • மகளிர்ப் பாசறை
  • மகளிரணி
  • மகளிரணி கலந்துரையாடல்
  • மஞ்சநாதன்
  • மண்டல் குழு பரிந்துரை
  • மண்டல் பரிந்துரை
  • மண்டல கலந்துரை
  • மண்டல கலந்துரையாடல்
  • மண்டல மாநாடு
  • மண்டலம்
  • மண நாள்
  • மணநாள்
  • மணவிழா
  • மணவிழா வரவேற்பு
  • மணி அம்மையார்
  • மணிப்பூர்
  • மணியம்மையார்
  • மதியழகன்
  • மதிவதனி
  • மதுரை
  • மந்தவெளி
  • மந்தைவெளி
  • மம்தா
  • மயக்க பிஸ்கட்டுகள்
  • மயிலாப்பூர்
  • மயிலை
  • மயிலை த.வேலு
  • மயிலை முரளி
  • மரியாதை
  • மருத்துவக் கல்லூரி
  • மல்யுத்த வீராங்கனை
  • மலர் வளையம்
  • மலையாளிகள்
  • மறியல்
  • மறைவு
  • மன்றல்
  • மனித சங்கிலி
  • மனுதர்ம எரிப்பு
  • மா. சுப்பிரமணியன்
  • மா.பா.அன்புதுரை
  • மாசு
  • மாட்டுக்கறி
  • மாணவர்
  • மாணவர் இயக்கம்
  • மாணவர் எழுச்சி மாநாடு
  • மாணவர் கழகம்
  • மாணவர் நகலகம்
  • மாணவர் பேரணி
  • மாணவரணி
  • மாணவரணி கூட்டம்
  • மாணிக்கம்
  • மாதவன்
  • மாநாடு
  • மாநில இளைஞரணி
  • மாநில கலந்துரை
  • மாநில கலந்துரையாடல்
  • மாநில பொறுப்பாளர்
  • மாநில பொறுப்பாளர்கள்
  • மாநில மாநாடு
  • மாநிலக் கல்லூரி
  • மாலை
  • மாலை அணிவிப்பு
  • மாவட்ட கலந்துரையாடல்
  • மாவட்டக் கழகம்
  • மாவட்டம்
  • மின்சாரம்
  • மீனம்பாக்கம்
  • மீனா முத்தையா
  • மு.இரா.மாணிக்கம்
  • மு.சண்முகப்பிரியன்
  • முகம் மாமணி
  • முத்தரசன்
  • முதல்வர்
  • மும்பை
  • முழக்கம்
  • முழு அடைப்பு
  • முற்றுகை போராட்டம்
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூர்த்தி
  • மெமோரியல் ஹால்
  • மோட்டார் சைக்கிள்
  • யுவராஜ்
  • யூஜிசி
  • ரகுராமன்
  • ரயில்
  • ரயில் மறியல்
  • ராமேசுவரம்
  • ராயப்பேட்டை
  • ராயல்டி
  • ராஜரத்தினம் அரங்கம்
  • ரிசர்வ் வங்கி
  • ரெக்கார்ட்ஸ்
  • லக்னோ
  • லெனின்
  • வ.உ.சி.
  • வ.கோட்டம்
  • வங்கி
  • வங்கிகள்
  • வங்கிப் பணி
  • வட சென்னை
  • வடசென்னை
  • வண்டி பரப்புரை
  • வர்ணாசிரம எதிர்ப்பு
  • வரவேற்பு
  • வரவேற்பு விழா
  • வருணாசிரம எதிர்ப்பு
  • வருமானவரம்பாணை
  • வழக்குரைஞர்
  • வழக்குரைஞரணி
  • வழகுரைஞர்
  • வள்ளியம்மாள்
  • வள்ளுவர் கோட்டம்
  • வள்ளுவர்கோட்டம்
  • வளசரவாக்கம்
  • வளர்ச்சி நிதி
  • வன்னி அரசு
  • வாசுதேவன்
  • வாழ்த்து
  • வி.சி.க.
  • வி.பி.சிங்
  • வி.ஜி.பி.
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை சிறுத்தைகள்
  • விடுதலை நிதி
  • விடுதலை90
  • விடுதலைச் சந்தா
  • விருது
  • வில்சன்
  • வில்வநாதன்
  • விலைவாசி
  • விழா
  • விழிப்புணர்வுப் பிரச்சார பயணம்
  • விழுப்புரம்
  • விளக்கம்
  • விளம்பரம்
  • விளையாட்டுப் போட்டி
  • வீரசேகரன்
  • வீரமர்த்தினி
  • வீரர்
  • வீரவணக்கம்
  • வெளியீடு
  • வெற்றி
  • வே.சிறீதர்
  • வேட்பாளர்
  • வேலை வாய்ப்பு
  • வேலைத் திட்டம்
  • வேழவேந்தன்
  • வைக்கம்
  • வைகோ
  • ஜனநாதன்
  • ஜனநாயக விரோதம்
  • ஜனவரி2024
  • ஜாதி ஒழிப்பு மாநாடு
  • ஜாபர்
  • ஜாபர்கான் பேட்டை
  • ஸ்டாலின்
  • ஹிந்தி எதிர்ப்பு

இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை பெயர் எழுதிட போராட்டம்
    திராவிடர் கழகத்தின் பெரும் முயற்சியால் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று இருந்த பெயர் ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை என்றும், மவுண்ட் ரோடு - என்பதை அ...
  • நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக துணைத் தலைவர் மா.நடராசன் அவர்கள் மறைவு
                                                                                வருந்துகிறோம் தென் சென்னை மாவட் டத்தை சேர்ந்த நுங்கம்பாக்கம் பகு...
  • சூளைமேட்டில் 43வது மாநாடு-9.2.15
    விடுதலை,6.2.15 விடுதலை,8.2.15,பக்கம்-3
  • மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் நன்கொடை
    பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக கழக வளர்ச்சிக்காக ரூ.5000, பெரியார் நூலக வாச...
  • கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி நன்கொடை
     சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகரைச் சேர்ந்த கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைக...
  • ச.துணைவேந்தன் - மு. உமா இணையேற்பு விழா
    சுயமரியாதை திருமண விழா நாள்: 10.2.2019 ஞாயிறு மாலை 4.00 மணி முதல் 6 மணிக்குள் இடம்: பத்மாவதி திருமண மண்டபம், சூனாம்பேடு மணமக்கள்:...
  • இனமானப் பேராசிரியர் அன்பழகன் இறுதி ஊர்வலம்
    மறைந்த இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்...
  • நடிகர் எம்.ஏ.கிரிதரன் அவர்களின் முதலாம் ஆண்டு  நினைவுநாளையொட்டி நன்கொடை!
    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா, சிக்கல்நாய்க்கன் பேட்டை அஞ்சல் கிளிமங்கலத்தைச் சேர்ந்த பிச்சைமணியின் மகள் பி.முத்துச்செல்வி அவர...
  • திராவிட மாணவர் கழகமும் பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்தும் அறிவியல் பரப்புரைக் கூட்டங்கள்
    01-02-2019 சொற்பொழிவாளர்  ஊர் அதிரடி அன்பழகன்                               துறையூர் இரா.பெரியார் செல்வன்                      காரைக...
  • பட்டினப்பாக்கம் மு.குணசுந்தரி மறைவுக்கு கழகத்தின் சார்பில் மரியாதை
    தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன்  சகோதரியும், பெரியார் திடல் பணித் தோழர் மு.பவானியின் தாயாருமான மு.குணசுந்தரி (வயது 62) அவர்...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (46)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (9)
  • ►  2024 (177)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (22)
    • ►  செப்டம்பர் (16)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (40)
    • ►  ஜூன் (19)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (10)
  • ►  2023 (164)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (14)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (21)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (13)
  • ▼  2022 (180)
    • ▼  டிசம்பர் (28)
      • கவிஞர் கண்மதியன் அன்னையார் மறைவு! கழகத் தலைவர் இறு...
      • சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஏற்பாட்டில் ச...
      • தந்தை பெரியார் 49ஆம் ஆண்டு நினைவு நாள் அமைதிப் பேர...
      • டிச. 24: தந்தை பெரியார் 49ஆவது நினைவு நாள் தமிழ்நா...
      • கழக மணம் வீசிய திருப்பத்தூர்!
      • தமிழர் தலைவர் பிறந்த நாள் விழாவில் 'விடுதலை' சந்தா...
      • கழகப் பொதுச்செயலாளரிடம் விடுதலை சந்தா ரூ.1 லட்சம் ...
      • விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி ...
      • தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு பிற...
      • மயிலாப்பூர் திராவிடர் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்புப...
      • சென்னை மண்டலத்தில் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம...
      • திசை' புத்தக நிலையம் திறப்பு விழாவில் தமிழர் தலைவர...
      • தமிழர் தலைவர் ஆசிரியர் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழ...
      • சென்னை சூளைமேடு இரா.கோமளா (WCS) 17ஆம் ஆண்டு (8.12....
      • பொதுக்குழு உறுப்பினர் சைதாப்பேட்டை எம்.பி.பாலு - வ...
      • தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்- வளர்மதி...
      • தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி - க...
      • தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் சைதை மு.ந.மதியழகன் - ...
      • தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் வட...
      • அரும்பாக்கம் தாமோதரன்-வெண்மதி குடும்பத்தினர் சார்ப...
      • தென் சென்னை கோ.நடராசன் குடும்பத்தினர் சார்பில் பெர...
      • வழக்கறிஞர் வீரமர்த்தினி - சைதை தென்றல், வழக்கறிஞர்...
      • தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தரமணி பகுதியில் பெர...
      • ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்துக்கு அனுமதி அளி...
      • 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆச...
      • தமிழர் தலைவர் 90 வது பிறந்த நாள் விழாவில் சமூகநீதி...
      • சூளைமேடு கோ.பாலகிருஷ்ணன் (வயது 97) 2ஆம் ஆண்டு (2.1...
      • ஆன்லைன் ரம்மி சூதாட்ட ஒழிப்புச் சட்டத்திற்கு ஆளுந...
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (23)
    • ►  செப்டம்பர் (13)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (25)
    • ►  ஜூன் (23)
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (9)
  • ►  2021 (119)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (10)
    • ►  மார்ச் (14)
    • ►  பிப்ரவரி (24)
    • ►  ஜனவரி (18)
  • ►  2020 (66)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (12)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (11)
  • ►  2019 (119)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (19)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (10)
  • ►  2018 (123)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (15)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (6)
  • ►  2017 (81)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (11)
  • ►  2016 (46)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (84)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (13)
    • ►  ஜனவரி (5)
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.