சனி, 31 டிசம்பர், 2022

கவிஞர் கண்மதியன் அன்னையார் மறைவு! கழகத் தலைவர் இறுதி மரியாதை!

ஒன்றிய அரசின் மேனாள் அதிகாரி யும், கழகப் பற்றாளரும், கவிஞருமான கண்மதியன் அவர்களின் அன்னையார் திருமதி பாக்கியம் (வயது 102 அவர்கள் நேற்று முதல் நாள் (27.12.2022 மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம். இன்று (29.12.2022) காலை 8:30 ணி அளவில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திருமதி பாக்கியம் அம்மாள் அவர்களின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

கழகத் தலைவருடன் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், தமிழக மூதறிஞர் குழு பொருளாளர் த.கு.திவாகரன், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்த சாரதி, துணை செயலாளர் தாமோதரன், சூளைமேடு இராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்து
மரியாதை செலுத்தினர்.

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களும் இறுதி மரியாதை செலுத் தினார். வெளிநாடுகளிலிருந்து அம்மை யாரின் பேரன்களும், உறவினர்களும் வந்திருந்தனர். அவர்களைக் கழகத் தலைவரிடம் கவிஞர் கண்மதியன் அறிமுகப்படுத்தினார்.

எவ்வித சடங்குகளுமின்றி இன்று காலை 10 மணியளவில் அம்மையாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
- விடுதலை நாளேடு, 29.12.22

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக