சென்னை, ஜூலை 15- பச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கல்வி வள்ளல் - பச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் 117ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2019) காலை 9 மணியளவில் சென்னை பெரியார் மேம்பாலம் (ஜிம்கானா கிளப்) அருகில் உள்ள காமராசர் சிலைக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் முன்னிலையில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் கழக தோழர் - தோழியர் புடை சூழ மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம், வழக்குரைஞரணி செயலாளர் ஆ.வீரமர்த்தினி, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், சோளிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், மகளிரணி தோழியர்கள் சி.வெற்றிச்செல்வி, க.இறைவி, தங்க.தனலட்சுமி, பவானி, வடசென்னை மாவட்டத் துணைத் தலைவர் கி.இராமலிங்கம், கோ.தங்கமணி, தாம்பரம் மோகன்ராசு, வீ.இலட்சுமிபதி, குணசேகரன் மற்றும் க.கலைமணி, வை.கலையரசன், சு.விமல்ராஜ் உள்ளிட்ட திரளான தோழர்கள் பங்கேற்றனர்.
- விடுதலை நாளேடு, 15. 7. 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக