வெள்ளி, 5 ஜூலை, 2019

உற்சாகத்துடன் தொடங்கிய உறுப்பினர் சேர்க்கைப் பணிகள்!

சென்னை மண்டல கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல்


கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன!!




சென்னை,ஜூலை 5, சென்னை மண்டலப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இக்கூட்டத்தில் துணைத் தலைவர் கலந்துகொண்டு பொறுப்பாளர் களுக்கு தக்க ஆலோசனைகளை வழங் கினார்.

சென்னை மண்டல திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடல் தலைமை நிலையத்தில், 3-.7-.2019, புதன் கிழமை மாலை 6 மணியளவில் நடை பெற்றது. மாநில அமைப்பாளர் வி.பன்னீர் செல்வம் தலைமை ஏற்று கூட்டத்தை வழிநடத்தினார்.

இறுதியில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆக்கபூர்வமான பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்பித்தார்.

இயக்கம் என்பதற்கு இலக்கணம்!

நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல், சேலத்தில் நடைபெறவுள்ள பவளவிழா மாநாட்டுக்கு குடும்பம் குடும்ப மாகச் செல்லல், தலைமை செயற்குழுவின் பல்வேறு முடிவுகளை செயலாக் குதல், இதையொட்டி தெரு முனைப் பிரச்சாரக் கூட்டங்களும் அடைமழைபோல நடை பெற உழைத்தல், சமூகப் பாதுகாப்பு அணிப் பயிற்சிக்கு இயக்கத் தோழர்களை அனுப்பி வைக்க ஒத்துழைத்ததல் போன்ற பல்வேறு பணிகளைச் செவ்வனே நிறை வேற்றுவதாக வடசென்னை, தென் சென்னை, தாம்பரம், ஆவடி, திருவொற்றி யூர், சோழிங்கநல்லூர் மாவட்டங்களின் மாவட்டத் தலைவர், செயலாளர்கள் கழகத் துணைத்தலைவர் முன்னிலையில் தீர்மானங்களை இயற்றி, இயக்கம் என்பதற்கான இலக்கணமாக ஓயாத பிரச்சாரப் பணிகளை உற்சாகமாக ஆற்ற முன்வந்தனர். முன்னதாக ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல் கடவுள் மறுப்புக் கூறினார். இறுதியில் மண்டலச் செயலாளர் தே.செ.கோபால் நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்தார். நிகழ்வில் மாவட்டப் பொறுப்பாளர்களிடம் உறுப்பினர் படிவங்கள் வழங்கப்பட்டன.

புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

நிகழ்வில் வடசென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளராக காரல் மார்க்சும், ஏற்கெனவே அந்தப் பொறுப்பில் இருந்த எருக்கஞ்சேரி தமிழ்ச் செல்வன் இளைஞரணித் துணைத் தலைவராகவும் கழகத் துணைத் தலைவரால் நியமிக்கப் பட்டனர். ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன் துணைத்தலைவரிடம் உண்மை ஆண்டு சந்தா ஒன்றை வழங்கி மகிழ்ந்தார்.

கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள்

வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன், செயலாளர் தி.செ.கணேசன்,  தென் சென்னை மாவட் டத் தலைவர் இரா.வில்வநாதன், செய லாளர் பார்த்தசாரதி, தாம் பரம் மாவட்டத் தலைவர் ப.முத் தையன், செயலாளர் கோ.நாத் திகன், ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன், அமைப்பாளர் உடுமலை வடிவேல், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், செயலாளர் பாலு, சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி. வீரபத்திரன், செயலாளர் பி.சி.ஜெயராமன், மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் பொழிசைக் கண்ணன், சென்னை மண்டல மகளிரணி செயலாளர் தோழர் ஓவியா  அன்புமொழி, பாண்டு, வட சென்னை மாவட்ட கழக துணைத் தலைவர் கி. ராம லிங்கம், தென் சென்னை பகுத்தறிவாளர் கழகப் பொறுப் பாளர் மாணிக்கம், தமிழினியன், சைதை சேகர், கோ.வீ.ராகவன், வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் வழக் குரைஞர் தளபதி பாண் டியன், புரசை அன்பு, அரும்பாக்கம் தாமோதரன், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் வை. கலையரசன், ஆவடி மாவட்ட இளைஞ ரணிச் செயலாளர் கலைமணி, பெரியார் சமூகப் பாதுகாப்பு அணியின் மாநில அமைப்பாளர் சுரேஷ், திருவொற்றியூர் பெரு.இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- விடுதலை நாளேடு, 5.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக