வியாழன், 27 ஏப்ரல், 2023

வெள்ளுடைவேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் அவர்களின் 172ஆவது பிறந்த நாளில் (27.4.2023) சென்னை மாநகராட்சி வளாக (ரிப்பன் பில்டிங்) முகப்பில் அமைந்துள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை


3

நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரும், சென்னை மாநகராட்சியின் முதல் மேயருமாகிய வெள்ளுடைவேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் அவர்களின் 172ஆவது பிறந்த நாளில் (27.4.2023) சென்னை மாநகராட்சி வளாக (ரிப்பன் பில்டிங்) முகப்பில் அமைந்துள்ள  அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்:  கழகத் துணைத் தலைவர் கவிஞர் 

கலி. பூங்குன்றன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் (செய்தி 8ஆம் பக்கம் காண்க).

வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயரின் 172ஆம் ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு - படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

4

சென்னை, ஏப். 27- வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயரின் 172ஆவது பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் மரியாதை செலுத்தினார்.

நீதிக்கட்சியின் முக்கிய தோற்றுநர், முதன் முதலில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய வள்ளல், சென்னை மாநகர முதல் மேயர், வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயரின் 172ஆவது பிறந்த நாளான இன்று (27.4.2023) காலை 10.30 மணியளவில் சென்னை மாநகராட்சி மன்றம் (ரிப்பன் பில்டிங்) முகப்பில் உள்ள அவர்தம் சிலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் 

கி.வீரமணி அவர்களின் தலைமையில் மலர் மாலை அணிவிக்கப்பட்டும், சிலையின் கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாநில திராவிடர் தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், தொழிலாளர் பேரவை செயலாளர் கருப்பட்டி சிவகுருநாதன், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, சென்னை மண்டல தலைவர் 

தி.இரா.இரத்தினசாமி, மண்டல செயலாளர் தே.செ.கோபால், திருச்சி மண்டல திராவிடர் தொழிலாளரணி தலைவர் முபாரக்,  சோழிங் கநல்லூர் மாவட்டத் தலைவர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், தென்சென்னை மாவட் டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டச் செய லாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், வடசென்னை மாவட்ட தலைவர் வெ.மு. மோகன், செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், கொடுங் கையூர் தலைவர் கோ.தங்கமணி, செம்பியம் கழகத் தலைவர் பா.கோபாலகிருஷ்ணன், மங் களபுரம் அமைப்பாளர் மு.டில்லிபாபு, தங்க.தனலட்சுமி, பூவை.செல்வி, செ.பெ.தொண்ட றம், த.மரகதமணி, சீர்காழி இராமண்ணா, பெரியார் மாணாக்கன், சி.காமராஜ், தொழிலாள ரணி பாலு, வை.கலையரசன், செல்லப்பன், த.பர்தின், நா.பார்த்திபன், அயப்பாக்கம் ந.கதிரவன், கோடம்பாக்கம் மாரியப்பன், படப்பை சந்திரசேகரன், பதம்குமார், இராஜன் ஜேம்ஸ், அண்ணா மாதவன், கமலேஷ் மற்றும் பல தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

தேவாங்கர் எழுச்சி இயக்கம்

தேவாங்கர் எழுச்சி இயக்கத்தின் சார்பில் அதன் மாநில தலைவர் வி.ஜெயபால், வீனஸ் பாலு, கபீர்தாஸ், செந்தில்குமார், செல்வம், யுவராஜ் ஆகியோர் பிட்டி தியாகராயர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சமாஜ்வாடி

தமிழ்நாடு சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் கவிஞர் வாசு தியாகராயர் படத்திற்கு மரியாதை செலுத்தினார். 


வெள்ளி, 21 ஏப்ரல், 2023

தென்சென்னையில் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி - சந்தா வழங்கினர்


 

28
தென்சென்னை    மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் தலைமையில் மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையில் நடைபெற்ற சந்தா சேர்ப்பில்  ஆயிரம் விளக்கு திமுக கிழக்கு பகுதி செயலாளர்  மா.பா.அன்புதுரை விடுதலைவாழ்நாள் சந்தாவிற்கு  ரூ.20.000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன்.


29
தென்சென்னை  மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் தலைமையில் மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையில் நடைபெற்ற சந்தா சேர்ப்பில் திமுக தலைமைச்செயற்குழு உறுப்பினரும்,மாமன்ற நிலைக்குழு தலைவருமான கலைஞர் கருணாநிதி நகர் க.தனசேகரன் வாழ்நாள் விடுதலை சந்தா ரூ.20.000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன்.


 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி - சந்தா வழங்கினர்


21
மன்னார்குடி முரளிசங்கர் விடுதலை 10 ஆண்டு சந்தா ரூ.20,000த்தை   பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் கோ.கணேசன்,மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழகன்,  கழக பேச்சாளர் இராம.அன்பழகன், பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட செயலாளர் கோபால் மன்னை ஒன்றிய தலைவர் மு.தமிழ் செல்வன், நீடா    - ஒன்றிய செயலாளர் சக்திவேல், மன்னை முரளி சங்கர் (ப.க) (17-11-2022).


22
மன்னார்குடி கழக மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், மாவட்ட ப.க செயலாளர் உ. கல்யாணசுந்தரம்   விடுதலை 5 ஆண்டு சந்தா ரூ10,000த்தை   பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த் தன், மாவட்ட செயலாளர் கோ.கணேசன், நீடாமங்கலம் நகரத் தலைவர் பி.எஸ்.ஆர்.அமிர்தராஜ், பகுத்தறிவு ஆசிரியரணி மண்டல அமைப்பாளர் சி.இரமேஷ், மாவட்ட ப.க செயலாளர் உ.கல்யாணசுந்தரம், மாவட்ட இளைஞரணி செயலாளர் க.இராஜேஷ், நீடா - ஒன்றிய செயலாளர் சக்திவேல் சே.சுருளிராஜன் (17-11-2022)


23
தஞ்சாவூர் டாக்டர் த.அருமைக்கண்ணு-பொறியாளர் கே.சண்முகநாதன்    விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை  கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: மண்டலத் தலைவர் மு.அய்யனார், மாவட்டத் தலைவர் சி. அமர்சிங்,மாவட்ட செயலாளர் அ.அருணகிரி,மாநகரத் தலைவர் ப.நரேந்திரன், மாநகர செயலாளர் அ. டேவிட் (18-11-2022).


24
தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் அறிவுச்சுடர் ஆங்கிலப்பள்ளி தாளாளர், திராவிடர் கழக கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன் - பள்ளி நிர்வாகி 
க.தமிழ்செல்வி  விடுதலை சந்தா ரூ.20,000த்தை  கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன்:  மாவட்டத் தலைவர் சி. அமர்சிங், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி மாநகரத் தலைவர் பா.நரேந்திரன் (19-11-2022).


25
மன்னார்குடி கழக மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சித்தேரி சிவா விடுதலை வாழ் நாள் சந்தா ரூ.20,000த்தை  பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார்.  உடன்:  மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் கோ.கணேசன்,மாவட்ட அமைப் பாளர் ஆர்.எஸ்.  அன்பழகன்,  கழக பேச்சாளர் இராம.அன்பழகன், பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட செயலாளர் கோபால் மன்னை ஒன்றிய தலைவர் மு.தமிழ் செல்வன், நீடா - ஒன்றிய செயலாளர் சக்திவேல், மன்னை முரளி (ப.க) (17-11-2022)


26
தாம்பரம் மாநகராட்சி ஆணையர் டாக்டர் மா.இளங்கோவன் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம், மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, பொறியாளர் தி.பர்தீன்.


27
தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் மாருதி நவீன அரிசிஆலை உரிமையாளர், வல்லம் தொழிலதிபர் ஆர்.ஆர். கோவிந்தராஜன்   விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை  கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  மாவட்டத் தலைவர் சி. அமர்சிங்,மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி மாநகரத் தலைவர் பா.நரேந்திரன் (19-11-2022)


28
தென்சென்னை    மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் தலைமையில் 
மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையில் நடைபெற்ற சந்தா 
சேர்ப்பில்  ஆயிரம் விளக்கு திமுக கிழக்கு பகுதி செயலாளர்  மா.பா.அன்புதுரை 
விடுதலைவாழ்நாள் சந்தாவிற்கு  ரூ.20.000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு 
இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் 
வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன்.


28a
தருமபுரி மாவட்ட கழக இளைஞர் அணி தலைவர் த.மு.யாழ்திலீபன் திராவிடர் 
கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து 2 ஒரு ஆண்டு சந்தாவும்,
6 அரையாண்டு சந்தாக்களையும் வழங்கினார்.


29
தென்சென்னை  மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் தலைமையில் மாவட்டச் 
செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையில் நடைபெற்ற சந்தா சேர்ப்பில் திமுக தலைமைச்செயற்குழு உறுப்பினரும்,மாமன்ற நிலைக்குழு தலைவருமான 
கலைஞர் கருணாநிதி நகர் க.தனசேகரன் வாழ்நாள் விடுதலை சந்தா ரூ.20.000த்தை 
மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: 
மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன்.


30
மன்னார்குடி கழக மாவட்டம், மன்னார்குடி  ஒன்றியத் தலைவர் மேலவாசல் மு. தமிழ்செல்வன்,  கழக பேச்சாளர் இராம்.அன்பழகன்   விடுதலை 10 ஆண்டு சந்தா ரூ.20,000த்தை  பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன்,மாவட்ட செயலாளர் கோ.கணேசன்,  கழக பேச்சாளர் இராம.அன்பழகன், மன்னை ஒன்றிய தலைவர் மு. தமிழ்செல்வன், நீடா - ஒன்றிய செயலாளர் சக்திவேல், மேலவாசல் திரிசங்கு, மேலவாசல் இளங்கோவன் (17-11-2022)


31
மன்னார்குடி கழக மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், தி.மு.க மாவட்ட அவைத்தலைவர் மேலவாசல் க.தன்ராஜ்   விடுதலை 10 ஆண்டு சந்தா ரூ.20,000த்தை  பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன்,மாவட்ட செயலாளர் கோ.கணேசன்,  கழக பேச்சாளர் இராம.அன்பழகன், மன்னை ஒன்றிய தலைவர் மு. தமிழ்செல்வன், நீடா - ஒன்றிய செயலாளர் சக்திவேல்,மேலவாசல் திரிசங்கு, மேலவாசல் இளங்கோவன் (17-11-2022)

வியாழன், 20 ஏப்ரல், 2023

மகளிர் பெரியாரியப் பயிற்சிப் பட்டறை சென்னை மண்டல மகளிரணி - மகளிர் பாசறை முடிவு


5

சென்னை, ஏப். 20- சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி, திரா விட மகளிர் பாசறையின் ஏப்ரல் மாத கலந்துரையாடல் கூட்டம் 8.4.2023 இரண்டாவது சனிக் கிழமை அன்று புதுவண்ணையில் உள்ள பெரியார் மாளிகையில் மகளிரணியைச் சேர்ந்த யுவராணி ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பகுதிக்கு அனைத்து மகளிர் தோழர்களும் சென்று கலந்து ரையாடி வரவேண்டும் என்ற நம் கழகத் தலைவர் அவர்களின் அறி வுரையின்படி சென்னை மண்டல மகளிர் அணியினரும் மகளிர் பாசறை தோழர்களும் நிகழ்ச்சி களை நடத்தி வருகின்றனர். புது வண்ணையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் தலைமை ஏற்ற யுவராணி தங்கள் பகுதிக்கு வருகை புரிந்துள்ள தோழர்கள் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார்.

முன்னிலை  வகித்த கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, இந்த மாதக் கலந்துரையாடலின் பொரு ளாக குறிப்பிடப்பட்ட வைக்கம் போராட்டத்தில் மகளிர் பங்கு பற்றியும், ஏப்ரல் மாதம் என்பது டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பிறந்த மாதம் என்பதால் அவர் பெண்களுக்காக ஆற்றிய தொண்டுகள் பற்றியும் எடுத்துக் கூறி உரையாற்றினார்.

கருத்துரை ஆற்றிய திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் மதிவதனி, தந்தை பெரியார் 1924-1925இல் தலைமை ஏற்று கேரள மாநிலம் வைக்கத்தில்  உள்ள கோவிலைச் சுற்றியுள்ள நான்கு தெருக்களில் ஈழவர் உட் பட தாழ்த்தப்பட்டோர் நடந்து செல்ல இருந்த தடையை நீக்குவ தற்காக நடைபெற்ற வைக்கம் போராட்டத்தினைப் பற்றியும், அண்ணல் அம்பேத்கர் அவர்க ளின் தலைமையில் 1929 இல் அன்றைய பம்பாய் மாகாணத்தில் மகத் என்னும் ஊரில் இருந்த குளத்தில் தாழ்த்தப்பட்டோர் நீர் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற போராட் டம் பற்றியும் மிக விரிவாகவும் எளிமையாகவும் வந்திருந்த குழந் தைகளுக்கும் புரியும் வண்ணம் மிகச் சிறப்பாக உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் முடிவில் கழகப் பொதுச் செயலாளர் வரவிருக்கும்  மே மாதத்தில் நடைபெற ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்த மகளிர் பெரியாரியல் பயிற்சி பட்டறை பற்றிய செய்தியினை ஒரு தீர்மான மாகவும், பெண்கள் அனைவரும் இணைந்து ஒரு சிறு சுற்றுலா சென்றுவர ஏற்பாடு செய்வது என்பதை ஒரு தீர்மானமாகவும் முன்மொழிந்து சென்னை மண் டல திராவிடர் கழக மகளிரணி செயலாளர் இறைவி உரையாற் றினார்.

நிகழ்ச்சியில், சுயமரியாதை திரு மண நிலைய இயக்குநர் பசும் பொன் செந்தில் குமாரி, க. பண் பொளி, மு.செல்வி, மு.பவானி, த.திராவிட எழில், த.இளவரசி, த.யாழ் தமிழ், த.திராவிட இலக் கியா, ச.தமிழ்ச்செல்வி, ம.செம் மொழி,எண்ணூர் விஜயா, நித்யா செ.ப.தொண்டறம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாகப் புதுவண்ணை பெரியார் மாளிகையில் வைக்கப் பட்டிருக்கும் தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கும், மேனாள் வடசென்னை மாவட்டத் தலைவர் க.பலராமன் சிலைக்கும்  மாலை அணிவிக்கப் பட்டது. நிகழ்ச்சி சிறப்பாக நடை பெறுவதற்கு  கழகத் தோழர்கள் எண்ணூர் மோகன், மணிவண் ணன், செல்வம் ஆகியோர் உதவி புரிந்தனர்.

இரா. வில்வநாதன் - வளர்மதி 25ஆம் ஆண்டு மணநாள் கழகத் துணைத் தலைவர் வாழ்த்து


13

தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் - வளர்மதி ஆகியோரின் 25ஆம் ஆண்டு மணநாளையொட்டி (19.4.2023) இரா. வில்வநாதனுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். சென்னை கடற்கரைச் சாலையில் செல்லும் போது கம்பீரமாக பறக்கும் கழகக் கொடியை தொடர்ந்து புதுப்பித்து வருபவரும், அகில இந்திய வானொலி நிலையம் அருகே கழகச்  செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து பதாகை வைத்து இயக்கப் பிரச்சாரம் செய்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

அண்ணல் அம்பேத்கரின் 133ஆவது ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு கழகத் தலைவர், துணைத் தலைவர் மரியாதை


28

சென்னை, ஏப். 14 புரட்சியாளர் பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (14.4.2023) காலை தஞ்சாவூரில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னையில்...

சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கம் முகப்பில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு காலை 10 மணியளவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமத்துவநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சமத்துவ நாள் உறுதிமொழி

ஜாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், ஜாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர் களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர் களுடைய சமத்துவத்திற்காகவும்,வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில், ஜாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களைச் ஜாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர்  ஆ. வெங்க டேசன், சென்னை மண்டல கழக செயலாளர் தே.செ.கோபால், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ. கணேசன், துணைத் தலைவர் கி. இராமலிங்கம், அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், துணை அமைப்பாளர் சி. பாஸ்கர், மயிலை ஆர்.மாரிமுத்து, பன்னீர் செல்வம், ஜெயக்குமார், வில்லிவாக்கம் ச. இராசேந்திரன், செல்லப்பன், மு.இரா. மாணிக்கம், வேலூர் பாண்டு, ஆவடி  மாவட்டம் ப.க. துணை செயலாளர் கார்த்திகேயன், சமிக்ஷா,  த. மரகதமணி, வண்ணை குணசேகரன், க. கலைமணி, வை. கலையரசன், நா. பார்த்திபன், வ.கலைச்செல்வன், அருள், பெ. அன்பரசன், அ. பாலச்சந்தர் மற்றும் தோழர்கள் பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.


வெள்ளி, 14 ஏப்ரல், 2023

இரா.பிரபாகரன் - சா.அஜந்தா வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா!

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (289)

மார்ச் 16-31,2022

இந்துத்வா எதிர்ப்பை மீறி கீதையின் மறுபக்கம் மலேசியாவில் வெளியீடு!

கி.வீரமணி

கட்டுரையின் ஒரு பகுதி...




தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் வில்வநாதனின் சகோதரரின் மணவிழா சென்னை அய்ஸ் அவுஸ் பகுதியில் 12.7.1998 அன்று நடைபெற்றது. அவ்விழாவிற்கு தலைமையேற்று, கு.இராமசாமி _ பவுனம்மாள் ஆகியோரின் செல்வன் இரா.பிரபாகரனையும், சூனாம்பேடு ஆ.சாரங்கன் _ மஞ்சளழகி ஆகியோரின் செல்வி சா.அஜந்தாவையும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதி மொழியினைக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ள வைத்து மணவிழாவினை நடத்தி வைத்தேன். அங்கு உரையாற்றுகையில், “பொதுமக்கள் சடங்கு, சம்பிரதாயம், மதம், கடவுள் மூடநம்பிக்கைகளை பின்பற்றக் கூடாது என்று வலியுறுத்தியும், வேலைவாய்ப்பில் ஆண்களும், பெண்களும் சமவிகிதத்தில் இருக்க வேண்டும்’’ என்பதை விளக்கியும் உரையாற்றினேன்.



கி.முல்லைவேந்தன் _ கனகரத்தினம், கி.சேகர் _ மு.வெ.நிர்மலா, கி.இந்திரா _ கவிஇரவீந்திரன், சுஜாதா _ சாமிநாதன் ஆகியோரது வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (287)

பிப்ரவரி 16-28,2022

ஈரோடு சமூகநீதி இளைஞரணி மாநாடு

கி.வீரமணி

கட்டுரையின் ஒரு வகுதி.....



 சென்னை பெரியார் திடலில் கழகத் தோழர்களின் சுயமரியாதைத் திருமணங்களை 27.4.1998 அன்று தலைமையேற்று நடத்தி வைத்தேன். இத்திருமண நிகழ்வு ஜாதி மறுப்பு திருமணங்களாக எளிய முறையில் நடைபெற்றது. நான்கு ஜோடி மணமக்கள் கி.முல்லைவேந்தன் _ கனகரத்தினம், கி.சேகர் _ மு.வெ.நிர்மலா, கி.இந்திரா _ கவிஇரவீந்திரன், சுஜாதா _ சாமிநாதன் ஆகியோரை வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ள வைத்து விழாவினை நடத்தி வைத்தேன். விழாவில் உரையாற்றுகையில், “ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுடைய குழந்தைகளுக்கு அரசு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் ஒரு சில ஆண்டுகளிலேயே ஜாதிப் பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்’’ என எடுத்துக் கூறினேன். விழாவிற்கு சென்னை மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து கழகத் தோழர்களும், உறவினர்களும் வந்திருந்தனர்.