
சென்னை, மார்ச் 10- தொண்டறத்தாய் அன்னை மணியம்மையாரின் 107ஆவது பிறந்த நாளான இன்று (10.3.2026) காலை 10 மணியளவில் சென்னை பெரியார் திடலில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
முன்னதாக சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மகளிரணியினர் ஊர்வலமாகச் சென்று மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, தந்தை பெரியார் நினைவிடம், அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளி தூண் ஆகிய இடங்களில் கழகத் தோழர்கள் மலர் வளையம் வைத்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
திராவிடர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிட தொழிலாளர் கழகம், திராவிடன் நலநிதி, பெரியார் மருத்துவமனை, பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யம், பெரியார் நூலக வாசகர் வட்டம் ஆகியவற்றின் சார்பில் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வீ.பன்னீர்செல்வம், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் ச.குமாரதேவன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், வழக்குரைஞர் துரை.அருண், திராவிடன் நலநிதி தலைவர் ப.சீத்தாராமன், விடுதலை அச்சக மேலாளர் சரவணன்.
மகளிரணி
பெரியார் மருத்துவமனையின் மருத்துவர் தர்சினி ஆனந்த், சி.வெற்றிச்செல்வி, பொறியாளர் ச.இன்பக்கனி, பேராசிரியர் பெரியார் செல்வி, பசும்பொன் செந்தில்குமாரி, உமா செல்வராசு, தங்க.தனலட்சுமி, மு.செல்வி, மு.செல்விமுரளி, நூர்ஜகான், மதனராணி, பூங்குழலி, வளர்மதி, மனோகரி, இளவரசி, கற்பகம், மரகதமணி, க.வெண்ணிலா, மீனாம்பாள், க.சுமதி, மோகனப்பிரியா, விசாலாட்சி, வாணி, தேவி, இந்திரா, இளவேனில், உத்ரா, சாந்தி, சண்முகலட்சுமி, பெரியார் பிஞ்சுகள் ஆதிரை, அதிரன், பெரியார் மருத்துவமனை செவிலியர் சந்தியா.
தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் ப.முத்தையன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் கரு.அண்ணாமலை, செயலாளர் சுப்பிரமணியன், மயிலை சேதுராமன், அரும்பாக்கம் தாமோதரன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், தமிழினியன், வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை ச.அன்புச்செல்வன், தொழிலாளரணி, செல்வராசு, இராமலிங்கம் மற்றும் சி.சித்தார்த்தன், சி.காமராஜ், கண்ணன், மகேஷ், டெய்சன், கலைமணி விஜய், பெரு.இளங்கோ, பொறியாளர் சிங்காரவேலன், ரங்கநாதன், ஜான்சன், கோ.தங்கமணி, முரளி, இளவரசு, தமிழ்செல்வன், முகப்பேர் முரளி, ஜனார்த்தனம், பெரியார் திடல் பணிமனைத் தோழர்கள் மற்றும் திரளான கழகத் தோழர் – தோழியர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
அன்னை மணியம்மையார் 107ஆம் ஆண்டு பிறந்த நாள் : நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக