![தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் 106ஆம் ஆண்டு பிறந்த நாள் – கழகத்தின் சார்பில் மரியாதை [சென்னை – 10.3.2025] ஆசிரியர் உரை, திராவிடர் கழகம்](https://viduthalai.in/wp-content/uploads/2025/03/1-16-860x270.jpg)
அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் 106ஆம் ஆண்டு பிறந்த நாள் தொண்டற த்தாய் சிலைக்கு மாலை அணிவித்து நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை

சென்னை, மார்ச் 10- தொண் டறச் செம்மல் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களின் 106ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2025) அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், நினைவிடத்தில் மலர் வளை யம் வைத்தும் மரியாதை செலுத் தப்பட்டது.
அன்னையார் சிலைக்கு மாலை
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டுகள் வாழ வைத்த அன்னை மணியம்மையாரின் 106ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2025) காலை 10 மணியளவில் திராவிடர் கழகம், கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையர் சிலைக்கு கழகத் தோழர் – தோழியர் ஊர்வலமாக சென்று மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்
தலைமையில் உறுதிமொழி
இதையடுத்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடம், தந்தை பெரியார் நினைவிடம் ஆகியவற்றில் மலர் வளையம் வைக்கப்பட்டு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் உறுதிமொழி கூற கழகத் தோழர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திராவிடத் தொழிலாளரணி, திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, பெரியார் மணியம்மை மருத்துவமனை, திராவிடன் நிதி, பெரியார் சுயமரியாதை திருமண நிலையம், பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் மலர் வளையம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
சிங்கப்பூர் தோழர்கள்
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் மதியுரைஞர் வீ.கலைச்செல்வம் – மலையரசி கலைச்செல்வம் ஆகியோர் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.
பங்கேற்றோர்
இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர்கள் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், மருத்துவர் மீனாம்பாள், சிதம்பரம் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், அமுதரசன், இருதயநாத், முனைவர் ஜெயக்குமார், சி.வெற்றிச்செல்வி, க.பெரியார் செல்வி, பெரியார் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ், தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு மற்றும் மயிலை டி.ஆர்.சேதுராமன், தாம்பரம் சு.மோகன்ராசு, கி.இராமலிங்கம், கோ.தங்கமணி, சி.காமராஜ், பி.சி.ஜெயராமன், தமிழினியன், உடுமலை வடிவேல், பெரியார் மாணாக்கன், க.கலைமணி, தென்.மாறன், ஜெ.ஜெனார்த்தனன், மு.இரா.மாணிக்கம், சி.செல்லப்பன் மற்றும் எராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
மகளிரணியினர்…
இறைவி, செ.பெ.தொண்டறம், த.மரகதமணி, ஞானதேவி, கே.கனிமொழி, அருணா பத்மாசூரன், இரா.சு.உத்ரா பழனிசாமி, கே.மீனாம்பாள், கே.பிரித்தா, வி.வளர்மதி, ஆர்.ஏ.காவேரி, ஜி.வாணி, பி.இராஜேசுவரி, தங்க.தனலட்சுமி, மோகனப்பிரியா, ஜி.தங்கமணி, மு.இலக்கியா, மலையரசி கலைச்செல்வம், வீ.கா.தா.பெரியார்செல்வி, அன்பரசி, முத்துலட்சுமி, ஆதிலட்சுமி, நாகவள்ளி, மாலதி, இந்திரா, ரவணம்மாள் மற்றும் ஏராளமான மகளிர் நிகழ்வில் பங்கேற்றனர்.
தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் 106ஆம் ஆண்டு பிறந்த நாள்

தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் 106ஆம் ஆண்டு பிறந்த நாள் – கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் கழகத் தோழர்கள் அன்னை மணியம்மையார் சிலை, நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றனர் [சென்னை – 10.3.2025]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக