வியாழன், 18 ஆகஸ்ட், 2022

பெரியார் பெருந்தொண்டர் சி. ஏழுமலை சந்தா அளிப்பு

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!
13.08.2022 அன்று மாலை தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி ஆகியோரிடம் விடுதலை நாளேட்டிற்கு 25 ஆண்டு சந்தா (ரூ.50,000) காசோலை வழங்கினார். 13.08.2022 அன்று 91 வயது பெரியார் பெருந்தொண்டர் தியாகராயர் நகர் சி.ஏழுமலை அவர்களை திராவிடர் கழக தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து நலம் விசாரித்தனர். அப்பொழுது விடுதலை நாளேட்டிற்கு அரையாண்டு சந்தா வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக