சென்னை, ஏப்.28 தி.மு.க.வைச் சேர்ந்த மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் மானமிகு வசந்தி ஸ்டான்லி (வயது 56) அவர்கள் நேற்று (27.4.2019) இரவு 11 மணியளவில் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் மறைவுற்றார்.
அவரின் மறைவு தகவல் அறிந்ததும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியூர் நிகழ்ச்சியில் இருந்த நிலையில் சகோதரி வசந்தி ஸ்டான்லி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை கொடுத்திருந்தார்.
இன்று (28.4.2019) காலை 10 மணிய ளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் காலனி ஏ3 இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வசந்தி ஸ்டான்லி அவர்களின் உடலுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகி யோர் கழகத் தலைவரின் சார்பில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கும், அவரது சகோ தரர் கணேஷ் அவர்களுக்கும் கழகத் தலைவர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையை கொடுத்து ஆறுதல் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில் தென் சென்னை மாவட் டக் கழகத் தலைவர் இரா. வில்வநாதன், துணைத்தலைவர் மயிலை சேதுராமன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, விருதுநகர் மாவட்ட தலைவர் இல. திருப்பதி, விமல் குமார், ஆனந்த் ஆகியோரும் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
மானமிகு வசந்தி ஸ்டான்லி அவர் களின் மறைவு தகவல் அறிந்ததும் திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வசந்தி ஸ்டான்லி அவர்களின் உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், திமுக வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே. சேகர் பாபு, பேராசிரியர் தமிழச்சி தங்கபாண்டியன், மேனாள் காவல்துறை அதிகாரி சந்திர சேகர், துறைமுகம் காஜா, எழும்பூர் தேவநிதி, ஈரோடு இறைவன் உள்ளிட்ட பலர் வசந்தி ஸ்டான்லி உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
- விடுதலை நாளேடு, 28.4.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக