சனி, 28 நவம்பர், 2026

த.வெ.க. ஆட்சியில் ஹிந்தி, ஆங்கிலம் என்பதுதான் இருமொழிக் கொள்கையா? ஹிந்தித் திணிப்பை எதிர்த்து திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி சார்பில் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் (28.11.2026)


மற்றவை

 ஹிந்தித் திணிப்பை எதிர்த்து திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி ஆர்ப்பாட்டம் சென்னையில் கழகத் துணைத் தலைவர் ஆப்பாட்ட கண்டன உரையாற்றினார்

த.வெ.க. ஆட்சியில் ஹிந்தி, ஆங்கிலம் என்பதுதான் இரு மொழிக் கொள்கையா?

சென்னை, நவ. 28- த.வெ.க. ஆட்சியில் ஹிந்தி, ஆங்கிலம் என்பது தான் இருமொழிக் கொள்கையா? முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையில் போக்குவரத்து விதி மீறலுக்கு வழங்கி இருக்கும் செலுத்துகைச் சீட்டில் தமிழ் இல்லை, ஹிந்தி இடம் பெற்றிருப்பது எதற்காக?  இந்த ஹிந்தித் திணிப்பை எதிர்த்து இன்று (28.11.2026) தமிழ்நாடெங்கும் திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி நடத்திய பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதலே தொடர்ந்து ஹிந்தித் திணிப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதை எடுத்துக்காட்டி கண்டித்து வருகிறது திராவிடர் கழகம்.

த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் ஹிந்தித் திணிப்பு நடைபெறுவதை திராவிடர் கழகம் சுட்டிக் காட்டும் போதெல்லாம் பிறர்மீது பழியைப் போட்டோ, அதிகாரிகளை மாற்றியோ, மென்பொருள் குறை என்று சொல்லியோ அமைச்சர்கள் பதிலளிக்கிறார்கள்.

ஒருபுறம் ஒன்றிய அரசு இரயில்வே துறையிலும், தேசிய நெடுஞ்சாலைத் துறையிலும் ஹிந்தித் திணிப்பைச் செய்யத் தொடங்குகிறது. மற்றொரு புறம் தமிழ்நாடு அரசோ முதலில் மாநில நெடுஞ்சாலைத் துறை, பிறகு மருத்துவத்துறை, அடுத்து அரசு ஊழியர்கள் பயன்படுத்தும் ஹெச்.ஓ.டி. இணையதளத்தில் ஹிந்தித் திணிப்பு, பத்திரப் பதிவுத் துறையில் தமிழ் மறுப்பு.

அந்த வரிசையில் தற்போது முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையில் போக்குவரத்து விதிமீறலுக்கு வழங்கி இருக்கும் அபராதத் தொகை செலுத்துகைச் சீட்டு இது. இதில் தமிழ் எங்கே? ஹிந்தி எதற்காக?

ஆங்கிலமும், ஹிந்தியும் தான் த.வெ.க. அரசின் இருமொழிக் கொள்கையா? இதற்கு யாரை நோக்கிக் கைகாட்டுவீர்கள்? யார் மீது நடவடிக்கை எடுப்பீர்கள்?

காவல்துறைக்குப் பொறுப்பேற்றிருக் கும் முதலமைச்சர் என்ன பதில் சொல்கிறார்? நடப்பது யார் ஆட்சி? பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். ஒன்றிய அரசுதான் த.வெ.க. என்னும் லேபிள் ஒட்டி இங்கு நடைபெறுகிறதா?

இந்த அப்பட்டமான ஹிந்தித் திணிப்பு தமிழ்நாடு அரசினாலேயே மேற்கொள்ளப்படுவது தமிழுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், ஹிந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடிய தந்தை பெரியார், அறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்களுக்கும், தமிழுக்காக உயிர் துறந்த எண்ணற்ற மொழிப் போர் வீரர்கள், வீராங்கனைகளுக்கும் இழைக் கப்பட்டுள்ள வரலாற்றுத் துரோகம்! இதை ஒரு போதும் தமிழ்நாடு அனுமதிக்காது.

தொடரும் இத்தகைய ஹிந்தித் திணிப்பைக் கண்டித்துத் திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் 28.11.2026 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று (28.11.2026) ஹிந்தித் திணிப்பிற்கு எதிராகத் திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி யினர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு, திருவள்ளூர், திருப்பத்தூர், செய்யாறு, ஓசூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தாராபுரம், கோபிசெட்டிபாளையம், பொள்ளாச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், மேட்டுப்பாளையம், நீலமலை, பழனி, திண்டுக்கல், தேனி, கம்பம், மதுரை, மதுரை புறநகர், சிவகங்கை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய இடங்களில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நடத்தினர்.

திராவிடர் கழகம்

சென்னையில்

சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் காலை 11 மணியளவில் திராவிடர் கழக மாநில இளைஞரணி இணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் தலைமையில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

த.வெ.க. ஆட்சியில் ஹிந்தி, ஆங்கிலம் என்பதுதான் இருமொழிக் கொள்கையா? என்று ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் ஆர்ப் பாட்ட கண்டன உரையை நிகழ்த்தினார்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்ட விளக்க உரையாற்றினர். மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் தே.நர்மதா தொடக்க உரையாற்றினார்.

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்களை வரவேற்று வட சென்னை மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர் ச.சஞ்சய் வரவேற்புரை யாற்றினார். தென்சென்னை மாவட்டக் கழக இளைஞரணித் தலைவர் ந.மணிதுரை இணைப்புரை வழங்கினார்.

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்டச் செயலா ளர் புரசை சு.அன்புச்செல்வன், மேற்கு சென்னை மாவட்டக் கழகத் தலைவர் கரு.அண்ணாமலை, மாவட்டச் செயலாளர் க.சுப்பிரமணி, திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், மாவட்டச் செயலாளர் ந.இராசேந்திரன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன், மாவட்டச் செயலாளர் ஜெ.பாஸ்கரன், ஆவடி மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன், மாவட்டச் செயலாளர் க.இளவரசன் மற்றும் வழக்குரைஞர் இர.சிவசாமி, வி.சோபன்பாபு, வழக்குரைஞர் அ.அன்பரசன், மு.நித்தியானந்தம், கவுதம், சி.அறிவுமதி, ஆகியோர் முன்னிலை வகித் தனர். பி.ஆதித் தமிழச்சி நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தாராசுரம் வை.இளங்கோ, பொதுக்குழு உறுப்பினர் சி.வெற்றிச்செல்வி, பசும்பொன் செந்தில்குமாரி, மாநில மகளிரணித் துணைச் செயலாளர் இறைவி, தங்க.தனலட்சுமி, மு.தமிழ்ச்செல்வி, மாரி அருணா, த.மரகதமணி, பெரியார் அண்ணா கலைஞர் பாசறை கோபால், சி.சித்தார்த்தன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் கழகத் தோழர்கள் பொறியாளர் நர்மதா, ந.கார்த்திக், செ.பெ.தொண்டறம், ச.சா.சென்னகிருட்டிணன், க.நித்தியக்குமார் ஆகியோர் ஆர்ப்பாட்ட முழக்கமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வட சென்னை, தென்சென்னை, மேற்கு சென்னை, தாம்பரம், திருவொற்றியூர், சோழிங்கநல்லூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழக சட்டத்துறை, திராவிட தொழிலாளர் பேரவை உள்ளிட்ட அனைத்து அணியின் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில்
எழுப்பப்பட்ட முழக்கங்கள்

காப்போம், காப்போம் மொழி உரிமையைக் காப்போம்.

கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் ஹிந்தியைத் திணிக்கும் பா.ஜ.க. அரசைக் கண்டிக்கிறோம்.

ஒன்றிய அரசே, பா.ஜ.க. அரசே ஹிந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்காதே, திணிக்காதே!

ஏற்கமாட்டோம் ஏற்கமாட்டோம்! மும்மொழிக் கெள்கையை ஏற்க மாட்டோம்!

தமிழ்நாடு அரசே, தமிழ்நாடு அரசே! ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்புக்குத் துணை போகாதே, துணை போகாதே!

கை வைக்காதே கை வைக்காதே! இரு மொழிக் கொள்கையில் கை வைக்காதே!

தமிழ்நாடு அரசே, த.வெ.க. அரசே! துரோகம் செய்யாதே, துரோகம் செய்யாதே! தமிழ்நாட்டின் மொழிப் போர் வரலாற்றுக்குத் துரோகம் செய்யாதே, துரோகம் செய்யாதே!

தமிழ்நாடு அரசால், த.வெ.க. அரசால் மாநில நெடுஞ்சாலையில் ஹிந்தித் திணிப்பு, ஹிந்தித் திணிப்பு! அரசு இணைய தளங்களில் ஹிந்தித் திணிப்பு, ஹிந்தித் திணிப்பு! அரசு மருத்துவமனை மருந்துப் பைகளில் ஹிந்தித் திணிப்பு, ஹிந்தித் திணிப்பு! போக்குவரத்துக் காவல்துறையின் தண்டச் சீட்டிலும் ஹிந்தித் திணிப்பு!

படிப்படியாக ஹிந்தியைத் திணிக்க தமிழ்நாடு அரசு இடம் கொடுப்பதா? பா.ஜக.வின் பாசிச ஆட்சிதான் த.வெ.க. என்னும் லேபிளில் நடக்குதா?

மொழிப்போர் என்றும் அணையா நெருப்பு. மீறி அதில் வைத்தால் எச்சரிக்கை… எச்சரிக்கை!

போராடுவோம் வெற்றி பெறுவோம்! வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!

என்ற முழக்கங்கள் எழுப்பட்டன.

- விடுதலை நாளேடு, 28.11.26


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக