புதன், 25 நவம்பர், 2026

சி. செங்குட்டுவன் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1,00,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார்

பெரியார் பெருந்தொண்டர் வடுவூர் சி.செங்குட்டுவன் ‘பெரியார் உலக’ நன்கொடையாக ரூ.50,000 முன்பே வழங்கியுள்ளார். தற்சமயம் தமிழர் தலைவரிடம் ரூ.1,00,000 வழங்கியுள்ளார். வடுவூர் பெரியார் சிலை அமைப்புக்குத் தனது சொந்த செலவாக ரூ. 3,50,000 வழங்கியுள்ளேன் என்ற மகிழ்ச்சியான செய்தியை தமிழர் தலைவரிடம் தெரிவித்தார். தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்தார். சின்மயா நகரை சேர்ந்த 86ஆவது பிறந்தநாள் காணும் பெரியார் பெருந்தொண்டர் சி.செங்குட்டுவனுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ. ராகவன். சூளைமேடு ந. இராமச்சந்திரன்(சென்னை, 25.11.2026)

- விடுதலை நாளேடு, 25.11.2026

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக