திருவல்லிக்கேணி, நவ.19- தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம், திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதியில் உள்ள
‘ஆர்.வி. ஆட்டோ ஒர்க்’சில் கடந்த 17.11.2024, அன்று முற்பகல் 11 மணி அளவில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர்.சேது ராமன் ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது.
மாவட்ட தொழிலாளரணி தலைவர் ச.மாரியப்பன் கடவுள் மறுப்பு கூறினார்.
ஈரோடு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92 ஆவது பிறந்த நாள், திருச்சி பகுத்தறிவாளர் கழக மாநாடு மற்றும் கழக பரப்புரை கூட்டங்கள் நடத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மாவட்ட துணைச் செய லாளர்கள் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், எம்.ஜி.ஆர். நகர் மற்றும் கலைஞர் கருணாநிதி நகர் பொறுப்பாளர் கரு.அண்ணாமலை, திருவல்லிக்கேணி பகுதி அப்துல்லா, இராயப்பேட்டை பகுதி கோ.அரி, நொச்சிநகர் பகுதி சேது, மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை, துணைத் தலைவர் ச.மகேந்திரன் மற்றும் துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து ஆகியோர் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.
உதயசூரியன், மா.இனியா ஆகி யோர் கலந்து கொண்டனர்.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
ஈரோட்டில் நவம்பர் 26ஆம் நாள் நடைபெறவுள்ள ‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா’ விற்கு வேன் மூலமாகவும் பொது போக்குவரத்து மூலமாகவும் திரளாக செல்வதெனவும்,
டிசம்பர்-2 இல், சென்னை பெரியார் திடலில் நடை பெறவிருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆவது பிறந்தநாள் விழாவில் திரளாக பங்கேற்று ‘பெரியார் உலகத்’திற்கு பெருமளவு நிதி வழங்குவதெனவும்,
திருச்சியில் டிசம்பர்- 28, 29 ஆகிய நாள்களில் நடைபெற உள்ள பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் பங்கேற்பதெனவும்,
தமிழர் தலைவர் ஆசிரியரின் 92 ஆவது பிறந்த நளையும், திருச்சி பகுத்தறிவாளர் கழக மாநாட்டையும் விளக்கி பரப்பு ரைக் கூட்டங்கள் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
நிறைவாக அய்ஸ் அவுஸ் அன்பு நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக